அங்கத் சிங்
அங்கத் சிங் | |
---|---|
இந்திய பஞ்சாபின் சட்டமன்றம் | |
பதவியில் 4 பிப்ரவரி 2017 – 2022 | |
முன்னையவர் | குரிக்பால் கவுர் |
தொகுதி | நவான் சகர் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 23 அக்டோபர் 1990 அமிருதசரசு, பஞ்சாப், இந்தியா |
தேசியம் | Indian |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | அதிதி சிங் (2019) |
பெற்றோர் | பர்காசு சிங் (தந்தை) குரிக்பால் கவுர் (தாய்) |
வேலை | அரசியல்வாதி |
அங்கத் சிங் சைனி (Angad Singh Saini) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1990ஆம் ஆண்டில் இவர் பிறந்தார்.[1] காங்கிரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் அரசியல்வாதியாகவும் பஞ்சாபின் நவான்சகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபராகவும் இவர் அறியப்படுகிறார். 2017ஆம் ஆண்டில் இவருடைய 26ஆவது வயதில், பஞ்சாப் சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் உறுப்பினர்களில்[2] ஒருவரானார். உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக இருந்த அதிதி சிங்கை மணந்து கொண்டார்.[3]
நவான் சகர் சட்டமன்றத் தொகுதியை தில்பாக் சிங், ஆறு முறை பிரதிநிதித்துவப்படுத்தினார். பின்னர் தில்பாக் சிங்கின் மருமகன் பிரகாசு சிங் 2002ஆம் ஆண்டில் வெற்றி பெற்றார். பிரகாசு சிங் 2007ஆம் ஆண்டில் அந்த இடத்தை இழந்தார். இதே ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 2010ஆம் ஆண்டில் இறந்தார். அங்கத் சிங் பிரகாசு சிங்கின் மகன் ஆவார்.[4] இவர் தனது தாயார் குர் இக்பால் கவுரைத் தொடர்ந்து நவான்சகர் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Angad Singh Nawanshahr". angadsinghnsr.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 26 June 2017.
- ↑ "Meet Angad Singh Saini: Youngest Congress candidate in Punjab polls 2017" (in en). hindustantimes.com/. 7 January 2017. http://m.hindustantimes.com/punjab/in-nawanshahr-congress-banks-on-gabru-angad-singh-saini/story-07Bu37kpFBgYTPKQ7zAV4K.html.
- ↑ "रायबरेली विधायक अदिति सिंह और एमएलए अंगद सिंह शादी के बंधन में बंधे, देखें खूबसूरत तस्वीरें". Amar Ujala. பார்க்கப்பட்ட நாள் 20 May 2020.
- ↑ https://www.hindustantimes.com/punjab/in-nawanshahr-congress-banks-on-gabru-angad-singh-saini/story-07Bu37kpFBgYTPKQ7zAV4K.html