அதிதி சிங் (அரசியல்வாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதிதி சிங்
உத்திர பிரதேச சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
11 March 2017
முன்னையவர்அகிலேஷ் குமார் சிங்
தொகுதிரேபரலி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 நவம்பர் 1987 (1987-11-15) (அகவை 36)
லக்னோ, உத்திர பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி (2021 முதல்)
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு (2021 வரை)
துணைவர்அங்கத் சிங் (m. 2019)[1]
வாழிடம்(s)ரேபரலி,உத்திர பிரதேசம், இந்தியா
முன்னாள் கல்லூரிடியூக் பல்கலைக்கழகம்
வேலைPolitician

அதிதி சிங் [2] (Aditi Singh) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரலி தொகுதியில் இருந்து 2017 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். உத்தரபிரதேசத்தின் 17வது மாநிலச் சட்டப் பேரவையில் (2017-2022) இளம் உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.[3] இவர் காங்கிரசில்ல் இருந்து விலகி [4][5] 2021 இல் பாஜகவில் சேர்ந்தார். 2019 இல், தினேஷ் பிரதாப் சிங்குடனான அரசியல் போட்டியின் [6][7] காரணமாக இவர் குண்டர்களால் தாக்கப்பட்டார் [8][9] .

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

அவரது தந்தை [10] அகிலேஷ் குமார் சிங் பல அரசியல் கட்சிகளுக்காக ரேபரலி சதாரில் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள டியூக் பல்கலைக்கழகத்தில் மேலாண்மைப் பட்டப்படிப்பில் சேருவதற்கு முன்பு அதிதி டெல்லி மற்றும் முசோரியில் கல்வி பயின்றார். இவர் தனது அரசியல் வாழ்க்கைக்கு முன்பு சமூகப் பணிகளில் ஈடுபட்டார்.

தொழில்[தொகு]

2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசு சார்பில் போட்டியிட்டு சுமார் 90,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாஜக உடனான தொடர்புக்காக காங்கிரசிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு, நவம்பர் 24 அன்று இவர் அதிகாரப்பூர்வமாக [4] பாஜகவில் சேர்ந்தார். இவர் பஞ்சாப் சட்டப் பேரவையின் நவன்ஷஹர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான அங்கத் சிங் சைனியை மணந்தார்.[11][12][13][14]

# முதல் வரை பதவி கருத்துகள்
01 2017 2022 17வது உபி சட்டமன்றம், உறுப்பினர் காங்கிரசு
02 2022 பதவியில் 18வது உபி சட்டமன்றம், உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சி

குறிப்புகள்[தொகு]

  1. Chaba, Anju Agnihotri (24 May 2020). "In Punjab, suspended UP MLA's family says Cong action won't impact ties with party". இந்தியன் எக்சுபிரசு (Jalandhar). https://indianexpress.com/article/cities/chandigarh/in-punjab-suspended-up-mlas-family-says-cong-action-wont-impact-ties-with-party-6424589/. 
  2. "Raebareli Election Results 2017: Aditi Singh of Congress Wins". 1 March 2017. http://www.news18.com/news/politics/raebareli-election-results-2017-live-aditi-singh-of-congress-leading-1358708.html. 
  3. "Rebel of Rae Bareli: MLA Aditi Singh on Her Political Future, Why Cong Needs to Give Its Leaders Leeway". News18 (in ஆங்கிலம்). 2021-06-20. பார்க்கப்பட்ட நாள் 2021-08-09.
  4. 4.0 4.1 "Rebel Congress MLA Aditi Singh, BSP's Bandana Singh join BJP". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-27.
  5. "congress: Congress should stop sloganeering: Aditi Singh, MLA, Raebareli - The Economic Times". m.economictimes.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-27.
  6. Desk, India TV News (2019-05-14). "Congress MLA injured in accident in Uttar Pradesh". www.indiatvnews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-04.
  7. "BJP candidate, kin booked for attack on UP Congress MLA Aditi Singh". The Indian Express (in ஆங்கிலம்). 2019-05-15. பார்க்கப்பட்ட நாள் 2022-01-04.
  8. "'Attack on MLA exposes law and order situation in UP'". 2019-05-15. https://www.business-standard.com/article/news-ians/attack-on-mla-exposes-law-and-order-situation-in-up-119051501299_1.html. 
  9. "Electoral rivalry in Raebareli turns violent". Deccan Herald (in ஆங்கிலம்). 2019-05-14. பார்க்கப்பட்ட நாள் 2022-01-04.
  10. "ये हैं रायबरेली की यूएस रिटर्न प्रत्याशी, व‌िधायक प‌िता से ज्यादा वोट पाने की है इच्छा- Amarujala". பார்க்கப்பட்ட நாள் 9 May 2017.
  11. "Raebareli Election Results 2017: Aditi Singh of Congress Wins". 11 March 2017. பார்க்கப்பட்ட நாள் 9 May 2017.
  12. ADR. "Aditi Singh(Indian National Congress(INC)):Constituency- RAE BARELI(RAE BARELI) – Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 9 May 2017.
  13. "कांग्रेस को मिला बाहुबली की बेटी का साथ, छूटा आम आदमी का हाथ". பார்க்கப்பட்ட நாள் 9 May 2017.
  14. "रायबरेली में बाहुबली अखिलेश सिंह की बेटी अदिति सिंह की दस्तक – Navbharat Times". 22 September 2016. பார்க்கப்பட்ட நாள் 9 May 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிதி_சிங்_(அரசியல்வாதி)&oldid=3742143" இலிருந்து மீள்விக்கப்பட்டது