அக்லான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அக்லான்
மாகாணம்
மாகாண வரைபடம்
மாகாண வரைபடம்
நாடு பிலிப்பீன்சு
பிராந்தியம் மேற்கு விசயாசு
நேர வலயம் பிசீநே (ஒசநே+8)

அக்லான் (Aklan) என்பது பிலிப்பீன்சின் விசயாசின், மேற்கு விசயாசுப் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஐந்து மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் கலிபோ ஆகும். இது 1956 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் புளரென்சியோ மிராபுளோரெஸ் (Florencio Miraflores) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 1,821.42 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக அக்லான் மாகாணத்தின் சனத்தொகை 574,823 ஆகும்.[2] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 64ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 53ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. இம்மாகாணத்தில் 327 கிராமங்களும், 17 மாநகராட்சிகளும் உள்ளன. அத்துடன் இம்மாகாணத்தில் தகலாகு ஆங்கிலம் உள்ளடங்கலாக ஐந்து பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இம்மாகாணத்தின் வருடாந்த வருமானம் 450 மில்ல்லியன் பிலிப்பீனியப் பணத்திற்கும் அதிகமாக உள்ளது. அதனால் இம்மாகாணத்தைப் பிலிப்பீன் அரசு முதற்தர மாகாணமாக வகைப்படுத்தியுள்ளது. இம்மாகாணத்தின் பொருளாதாரத்தின் முக்க்கிய அம்சமாக விவசாயம் உள்ளது. [3]


மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Provinces". PSGC Interactive. Makati City, Philippines: National Statistical Coordination Board. பார்த்த நாள் 30 December 2013.
  2. "Population of the provine".
  3. "Economy". பார்த்த நாள் 18 March 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்லான்&oldid=2168832" இருந்து மீள்விக்கப்பட்டது