அகவலோசை
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஆசிரியப்பாவிற்கான ஓசை அகவலோசை. அகவல் என்பது ஆசிரியப்பாவின் இன்னொரு பெயராகும்.
அகவலோசை மூன்று வகைப்படும்:
- ஏந்திசை அகவலோசை
- தூங்கிசை அகவலோசை
- ஒழுகிசை அகவலோசை
ஏந்திசை அகவலோசை
[தொகு]ஏந்திசை அகவலோசை எனப்படுவது நேரொன்று ஆசிரியத்தளைகளை (மா முன் நேர்) மட்டுமே கொண்டிருக்கும்.
தூங்கிசை அகவலோசை
[தொகு]தூங்கிசை அகவலோசை எனப்படுவது நிரையொன்று ஆசிரியத்தளைகளை (விளம் முன் நிரை) மட்டுமே கொண்டிருக்கும்.
ஒழுகிசை அகவலோசை
[தொகு]ஒழுகிசை அகவலோசை எனப்படுவது இருவகை ஆசிரியத்தளைகளும் சேர்ந்து வரும் (நேரொன்று ஆசிரியத்தளை மற்றும் நிரையொன்று ஆசிரியத்தளை).