அகவலோசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆசிரியப்பாவிற்கான ஓசை அகவலோசை. அகவல் என்பது ஆசிரியப்பாவின் இன்னொரு பெயராகும்.

அகவலோசை மூன்று வகைப்படும்:

  1. ஏந்திசை அகவலோசை
  2. தூங்கிசை அகவலோசை
  3. ஒழுகிசை அகவலோசை

ஏந்திசை அகவலோசை[தொகு]

ஏந்திசை அகவலோசை எனப்படுவது நேரொன்று ஆசிரியத்தளைகளை (மா முன் நேர்) மட்டுமே கொண்டிருக்கும்.

தூங்கிசை அகவலோசை[தொகு]

தூங்கிசை அகவலோசை எனப்படுவது நிரையொன்று ஆசிரியத்தளைகளை (விளம் முன் நிரை) மட்டுமே கொண்டிருக்கும்.

ஒழுகிசை அகவலோசை[தொகு]

ஒழுகிசை அகவலோசை எனப்படுவது இருவகை ஆசிரியத்தளைகளும் சேர்ந்து வரும் (நேரொன்று ஆசிரியத்தளை மற்றும் நிரையொன்று ஆசிரியத்தளை).


"https://ta.wikipedia.org/w/index.php?title=அகவலோசை&oldid=2266476" இலிருந்து மீள்விக்கப்பட்டது