அகப்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிர்புர் அகழ்வராய்ச்சியிலிருந்து இரும்பு அகப்பை
நாணய வெள்ளி அகப்பை - இலண்டன் ஹால்மார்க்
5செ.மீ அளவிலான எஃகு அகப்பை
C. அமெரிக்காவிலுள்ள சாக்கோ கேன்யான் பகுதியில் எடுக்கப்பட்ட கி.மு 10ம் நூற்றாண்டினை சார்ந்த அகப்பை

அகப்பை (ஆழ்ந்த) ஒருவகை கரண்டி ஆகும். இது சட்டுவம் என்றும் அழைக்கப்படுகிறது. இது வடிசாறு, பானம், குழம்புகளை கோர பயன்படுகிறது.[1] இது பல்வேறு வடிவமைப்பில் இருப்பினும், பொதுவாக நீண்ட கைப்பிடி கொண்டு முடிவில் ஆழ்ந்த கோப்பையைக் கொண்டிருக்கும், கோண அடிப்படையிலான கோப்பையானது வடிசாறு மற்றும் குழம்பை எளிதில் பாத்திரம் மற்றும் கோப்பையிலிருந்து கோர உதவுகிறது.

நவீன காலத்தில் அகப்பை பொதுவாக மற்ற சமையல் உபகரணங்கள் போலவே எஃகு, உலோக கலவை கொண்டு செய்யப்படுகிறது. அவை அலுமினியம், வெள்ளி, நெகிழி, மரம், மூங்கில் மற்றும் மெலாமைன் ரெசின் கொண்டும் செய்யப்படுகிறது. அகப்பையானது பல்வேறு அளவுகளில் அதன் பயன்பாட்டுக்கேற்ப செய்யப்படுகிறது, உதாரணமாக 5" க்கும் குறைவான நீளம் கொண்ட அகப்பையானது குழம்பு மற்றும் சுவையூட்டும் பொருட்களை கோப்பையிலிருந்து கோர பயன்படுகிறது, அதேபோல் 15"க்கும் அதிகமான நீளம் கொண்ட அகப்பையானது வடிசாறு(சூப்) அல்லது பானங்களை கோர பயன்படுகிறது..[2]

பழங்காலத்தில் அகப்பையானது பொதுவாக சுரைக்காயில் அல்லது கடல் சிப்பிகளில்,[3] கொட்டாங்குச்சிகளில் உருவாக்கப்பட்டது.

மேலும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ladles
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகப்பை&oldid=3582921" இருந்து மீள்விக்கப்பட்டது