உள்ளடக்கத்துக்குச் செல்

ஃபராஹ் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஃபராஹ் கான்
ஃபராஹ் கேமரா நோக்கி சிரித்துக் கொண்டிருக்கிறார்.
முனிஷா காட்வானி புத்தகத்தின் "தரோட் பிரிடிக்சன்ஸ் 2015" வெளியீட்டு விழாவில் கான்
பிறப்பு9 சனவரி 1965 (1965-01-09) (அகவை 59)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணிநடன அமைப்பாளர், இயக்குநர் (திரைப்படம்), நடிகர், தொலைக்காட்சி நிகழ்ச்சி வழங்குநர்
வாழ்க்கைத்
துணை
சிரீஷ் குந்தர் (m. 2004)
பிள்ளைகள்3
உறவினர்கள்சாஜித் கான் (இயக்குனர் (சகோதரன்)

ஃபராஹ் கான் (Farah Khan பிறப்பு: சனவரி 9, 1965) [1] குந்தர் என்றும் அறியப்படும் இவர் ஒரு திரைப்பட நடிகை ,தாயாரிப்பாளர் , இயக்குனர் மற்றும் நடன இயக்குனர் ஆவார். பாலிவுட் திரைப்படங்களில் பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். 80 க்கும் மேற்பட்ட பாலிவுட் திரைப்படங்களில் நூறு பாடல்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். சிறந்த நடன இயக்குனருக்கான ஆறு பிலிம்பேர் விருதினையும் தேசிய விருதினையும் பெற்றுள்ளார். மேலும் வெளிநாட்டுப் படங்களான "மேரி கோல்டு: அன் அட்வென்சர் இன் இந்திய" ,"மேன்சூன் வெட்டிங்" , "பாம்பே ட்ரீம்ஸ்" மற்றும் சீனத் திரைப்படங்களான பெர்காப்ஸ் இன் லவ்: மற்றும் குங்பூ யோகா" என்ற படங்களிலும் பங்காற்றியதற்காக டோனி விருது மற்றும் கோல்டன் ஹார்ஸ் விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டார். பின்னர் அவர் ஒரு இயக்குனராக அறிமுகமான மேயின் ஹூன் நா திரைப்படத்திற்காக பிலிம்பேர் சிறந்த இயக்குநருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

ஃபராஹ் கான் 1965 ஜனவர் 9 அன்று பிறந்துள்ளார். இவருடைய தந்தை கம்ரான் கான் ஒரு திரைப்பட சண்டைக் கலைஞர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார், இவருடைய தாயார் மேனாகா இரானி முன்னாள் குழந்தை நட்சத்திரங்களான ஹனி இரானி மற்றும் டெய்சி இரானி ஆகியோரின் சகோதரியாவார்.[2] ஹனி இரானியின் குழந்தைகள் திரை பிரபலங்களான பர்கான் அக்தார் மற்றும் சோயா அக்தர் ஆகியோருக்கும் இவர் உறவினர் ஆவார். திரைப்பட இயக்குனரும், நகைச்சுவை நடிகருமான சஜித் கான் இவருடைய சகோதரர் ஆவார்.

இவருடைய தந்தை ஒரு முஸ்லீம் மதத்தைச் சார்ந்தவர், இவரது தாயார் சொராட்டிரியர் ஆவார். இவர்கள் ஈரானைச் சேர்ந்த பார்சி சமூகத்தைச் சார்ந்தவர்கள் ஆவர்.[3] ஃபராஹ் கானின் சிறு வயதிலேயே அவரது பெற்றோரின் திருமணம் முறிந்தது. இதற்கு மதம் ஒரு காரணம் ; மற்றொன்று பணம் பற்றாக்குறையாக இருந்தது. [சான்று தேவை] கம்ரான் கான் ஆரம்பகாலங்களில் மிகவும் வெற்றிகரமானவராகவும், செல்வந்தராகவும் இருந்தார். இவரின் சிறு வயதில் சில காலங்கள் மட்டுமே தனது தந்தையிடம் வளர்ந்து வந்தார்.

2004 டிசம்பர் 9 அன்று மேயின் ஹூன் நா என்ற படத்தின் படத்தொகுப்பாளர் சிரீஷ் குந்தரை திருமணம் செய்து கொண்டார்.[4] "ஜான்-ஈ-மன்" , "ஓம் சாந்தி ஓம்" மற்றும் "தீஸ் மார் கான்" போன்ற படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றினார்கள். கான் 2008 ல் ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்களை ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்றார்.[சான்று தேவை]

தொழில்[தொகு]

ஃபராஹ் கான் மும்பை, செயிண்ட். சேவியர் கல்லூரியில் சமூகவியல் படித்துவரும் போது மைக்கல் ஜாக்சனின் "திரில்லர்" நடனம் நடத்தப்பட்டது. அதில் அவர் மிகவும் ஆர்வமானார், அதற்கு முன் அவர் நடனமாடவில்லை என்றாலும், விரைவில் அது அவரது தொழிலாக ஆனது. அவர் தான் சொந்தமாக நடனமாட கற்றுக் கொண்டு ஒரு நடன குழுவினை அமைத்தார்.[5] நடன இயக்குனர் சரோஜ் கான் "ஜோ ஜோத்தா வோஹி சிக்கந்தர்" என்றத் திரைப்படத்திலிருந்து வெளியேறியபோது, கான் அந்த வாய்ப்பைப் பெற்றார். இதை தொடர்ந்து பல பாடல்கள் இவருக்கு கிடைத்தது.. "கபீ ஹான் கபி நா" என்ற படத்தில் நடிகர் சாருக் கானைச் சந்தித்தார். இருவரும் நல்ல நண்பர்களாகி, ஒன்றாக பணி செய்து வந்தனர்.

குறிப்புகள்[தொகு]

  1. Thomas, Anjali (7 October 2007). "Farah Khan latest chant is 'Mom Shanti MOM'". DNA. http://www.dnaindia.com/lifestyle/inner-spaces_farah-khan-latest-chant-is-mom-shanti-mom_1125923. பார்த்த நாள்: 17 November 2008. 
  2. "Sajid Khan | Directors | Koimoi". koimoi.com. 28 April 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-04-30.
  3. Farah Khan latest chant is 'Mom Shanti MOM'
  4. Kulkarni, Ronjita (12 August 2004). "Meet the man Farah Khan will marry". Rediff.com. பார்க்கப்பட்ட நாள் 17 November 2008.
  5. "Tête à tête". The Telegraph (Calcutta, India). 7 October 2007. http://www.telegraphindia.com/1071007/asp/7days/story_8405201.asp. பார்த்த நாள்: 5 May 2010. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஃபராஹ் கான்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபராஹ்_கான்&oldid=3891843" இலிருந்து மீள்விக்கப்பட்டது