சமிதா சென்
சமிதா சென் (Samita Sen) ஓர் இந்திய வரலாற்றாசிரியர் மற்றும் கல்வியாளர் ஆவார்.[1] முன்னர் கொல்கத்தா பல்கலைக்கழகம் மற்றும் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் கற்பித்த இவர், 2018 முதல் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் பேரரசு மற்றும் கடற்படை வரலாற்றுத் துறையின் பேராசிரியராக இருந்து வருகிறார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]
சென், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பிரிவில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். [2] பின்னர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் பயின்றார், 1992 இல் தத்துவத்தில் "வங்காள சணல் தொழிலில் பெண்கள் தொழிலாளர்கள், 1890-1940: இடம்பெயர்வு, தாய்மை மற்றும் போர்க்குணம்" எனும் தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார்.[3][4]
கல்வி[தொகு]
சென் 1990 மற்றும் 1994 க்கு இடையில் கேம்பிரிச்சில் உள்ள திரித்துவக் கல்லூரியில் ஆய்வுதவித் தொகையினைப் பெற்றார். [5] 1994 முதல் 2018 வரை, கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் வரலாறு, ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பெண்கள் படிப்பையும் கற்பித்தார். [3] இவர் 2016 முதல் 2018 வரை ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் இடைநிலை ஆய்வுகள் பீடத்தின் தலைவராக இருந்தார் [3] கூடுதலாக,2013 முதல் 2015 வரை டையமண்ட் ஹார்பர் மகளிர் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக இருந்தார். [3]
1 அக்டோபர் 2018 முதல், கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் பேரரசு மற்றும் கடற்படை வரலாற்றின் பேராசிரியராக இருந்து வருகிறார் [6] இது திரித்துவக் கல்லூரியின் சகோதரக் கல்லூரியாகும். [7]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Present Board Members of CRG". mcrg.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2019-03-05.
- ↑ "Samita Sen". பார்க்கப்பட்ட நாள் 15 March 2019.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "Professor Samita Sen" (in ஆங்கிலம்). University of Oxford. பார்க்கப்பட்ட நாள் 15 March 2019."Professor Samita Sen". Faculty of History. University of Oxford. Retrieved 15 March 2019.
- ↑ Sen, Samita (1992). Women workers in the Bengal jute industry, 1890-1940: migration, motherhood and militancy. E-Thesis Online Service (Ph.D). The British Library Board. எண்ணிம ஆவணச் சுட்டி:10.17863/CAM.19970. பார்க்கப்பட்ட நாள் 15 March 2019.
- ↑ Education and the Disprivileged: Nineteenth and Twentieth Century India. Orient Blackswan.
- ↑ "Vacancies, appointments, etc. - Cambridge University Reporter 6515". பார்க்கப்பட்ட நாள் 2019-03-05.
- ↑ "Master & Fellows". பார்க்கப்பட்ட நாள் 15 March 2019.