நிக் கைசர்
நிக் கைசர் Nick Kaiser | |
---|---|
2019 குரூபர் பரிசு விழாவில் நிக் கைசர் | |
பிறப்பு | செபீல்டு, இங்கிலாந்து | 15 செப்டம்பர் 1954
இறப்பு | 13 சூன் 2023 பாரிசு, பிரான்சு | (அகவை 68)
பணியிடங்கள் | எக்கோல் நார்மலே சுபீரியர் அவாய் பல்கலைக்கழகம்]] கனடிய கோட்பாட்டு வானியற்பியல் நிறுவனம் |
கல்வி கற்ற இடங்கள் | கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் (முனைவர்D) லீட்சு பல்கலைக்கழகம் (இளநிலை அறிவியல்) |
ஆய்வேடு | நுண்ணலை பின்னணி கதிர்வீச்சின் அனிசோட்ரோபி (1982) |
ஆய்வு நெறியாளர் | மார்ட்டீன் ரீசு |
முனைவர் பட்ட மாணவர்கள் | சௌன் கோல் |
விருதுகள் | அரசு கழகத்தின் ஆய்வுறுப்பினர் (2008) அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (2017) அண்டவியலில் குரூபர் பரிசு (2019) |
நிக்கோலஸ் கைசர்(Nicholas Kaiser) FRS (15 செப்டம்பர் 1954 - 13 ஜூன் 2023) ஒரு பிரித்தானிய அண்டவியலாளர் ஆவார்.[1]
வாழ்க்கையும் தொழிலும்.
[தொகு]கைசர் 1978 இல் இலீட்சு பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளங்கலைப் பட்டமும் , 1979 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் மூன்றாம் பகுதியும் பெற்றார்.[2] மார்ட்டின் இரீசின் மேற்பார்வையின் கீழ் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வானியலில் முனைவர் பட்டமும் பெற்றார்.[3]
கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் , பெர்க்லி பல்கலைக்கழகம் , சாண்டா பார்பரா பல்கலைக்கழகம் , சசெக்சு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் முதுமுனைவர் ஆய்வுப் பதவிகளுக்குப் பிறகு , கைசர் டொரான்ட்டோ பல்கலைக்கழகத்தில் (1988 - 97) கோட்பாட்டு வானியற்பியல் பேராசிரியருக்கான கனேடிய நிறுவனத்தில் இருந்தார். 1998 ஆம் ஆண்டில் அவாய் பல்கலைக்கழகத்தின் வானியல் நிறுவனத்தில் பேராசிரியராக ஆனார்.[4] 2017 முதல் 2022 வரை பாரிசில் உள்ள எகோல் நார்மல் சூப்பரியூரில் பேராசிரியராக இருந்தார்.
2008 ஆம் ஆண்டில் அரசு கழகத்தின் ஆய்வுறுப்பினராக கைசர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]
கைசர் 2023, ஜூன் 13 அன்று தனது 68 வயதில் இறந்தார்.[6][7]
ஆய்வுப்பணிகள்.
[தொகு]கைசர் அண்டவியலுக்கு பெரும் பங்களிப்புகளை வழங்கினார்.
- இவர் முதன்முதலில் அண்ட நுண்ணலைப் பின்னணி முனைமையைக் கணக்கீட்டார் (கைசர் 1983);[8]
- பொருள் புலத்தைச் சார்ந்த் பால்வெளிக் கொத்துகளின் உயர்நிலைச் சார்புநிலையை விளக்கினார் (கைசர் 1984);
- தொடக்கப் பாழ்நிலைப் புடவியின் அடர்த்தி உச்சங்களின் புள்ளிவிவரங்களை விரிவாக கணக்கீட்டார் (பார்தீன், பாண்டு, கைசர் & சாலே 1986);
- செம்பெயர்ச்சி விண்வெளிக் குலைவுகளின் கணிதத்தை அறிமுகப்படுத்தியது (கைசர் 1987);[9]
- அண்டப் புறவட்டப் பொருண்மைச் சார்பை உல்லாசப் பயணக் க்ணக் கோட்பாட்டைப் பயன்படுத்தி கணித்தார் (பாண்டு, கோல், எப்சுட்டாதியோ & கைசர் 1991);
- எளிய தன்னொத்த படிமங்களிலிருந்து பால்வெளிக் கொத்து அளவீட்டு உறவுகளின் விலகுதல்களைவிளக்கினார் (கைசர் 1991);
- ஈர்ப்பு மென்வில்லையில் இருந்து முதன்முதலாக துணிப்பு வரைபடங்களின் தலைகீழ் மாற்றம் நிகழ்த்தப்பட்டது (கைசர் & சுக்ஸ்கொயர்சு 1993).
கைசர் அண்டவியல் தொலைவு அளவீடுகளின் விவரங்கள் குறித்த கட்டுரைகளை எழுதினார்.
வானத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவுமீன் படிமமாக்க அளக்கையைத் தொடங்குபவராகவும் முதன்மை ஆய்வாளராகவும் கைசர் இருந்தார்.[10]
தகைமைகளும் விருதுகளும்
[தொகு]கைசர் பின்வரும் பல விருதுகளையும் தகைமைகளையும் வென்றார்,
- கனடிய உயராய்வு நிறுவனத்தின் அண்டவியல் திட்ட ஒன்ட்டாரியோ ஆய்வுறுப்பினர் (1988)[11]
- வானியலுக்கான எலென் பி. வார்னர் பரிசு, அமெரிக்க வானியல் கழகம் (1989)
- NSERC சுட்டியசி ஆய்வுநல்கை (1991–92)
- எர்சுபெர்கு பதக்கம், கனடிய இயற்பியலாளர் கழகம் (1993)
- உரூதர்போர்டு பதக்கம், கனடிய அரசு கழகம் (1997)
- 16193 நிக்கைசர் சிறுகோள் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.ஈதற்கான அலுவல்முறை ஆணையை 2005, மே 23 இல் சிறுகோள் மையம் வெளியிட்டுள்ளது.
- அவாய் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியில் சிறப்பு தகமைக்கான அரசு பதக்கம்
- வானியலுக்கானஅரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (2017)[12]
- அண்டவியலுக்கான குரூபர் பரிசு (2019)[13]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://www.hawaii.edu/news/2023/06/19/in-memoriam-nick-kaiser/
- ↑ "IfA CV" (PDF). Archived from the original on 17 பிப்ரவரி 2005. பார்க்கப்பட்ட நாள் 16 March 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)CS1 maint: bot: original URL status unknown (link) (PDF). Archived from the original (PDF) on 17 February 2005. Retrieved 16 March 2018. - ↑ "Physics in Canada" (PDF). November 1993. p. 25. Archived from the original (PDF) on 16 மார்ச் 2018. பார்க்கப்பட்ட நாள் 16 March 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Johnstone, D.; J. Dubinski (1999). "University of Toronto, Canadian Institute for Theoretical Astrophysics, Toronto, Ontario M5S 3H8. Annual report 1997. 1999BAAS...31..570J. page 570". Bulletin of the American Astronomical Society 31 (1): 570. Bibcode: 1999BAAS...31..570J. http://adsabs.harvard.edu/full/1999BAAS...31..570J. பார்த்த நாள்: 16 March 2018.
- ↑ "Nicholas Kaiser, Royal Society". பார்க்கப்பட்ட நாள் 25 June 2023."Nicholas Kaiser, Royal Society". Retrieved 25 June 2023.
- ↑ "The Laboratory Is Saddened At The Passing Of Nick Kaiser (1954–2023)". Laboratoire Astroparticule & Cosmologie. பார்க்கப்பட்ட நாள் 21 June 2023.
- ↑ "R.I.P. Nick Kaiser (1954-2023)". In the Dark (in ஆங்கிலம்). 14 June 2023.
- ↑ "Nick Kaiser awarded Royal Astronomical Society's highest honor – University of Hawaiʻi System News". பார்க்கப்பட்ட நாள் 16 March 2018.
- ↑ Clustering in the Universe: Proceedings of the XXXth Rencontres de Moriond, Les Arcs, Savoie, France, March 11–18, 1995. பார்க்கப்பட்ட நாள் 16 March 2018.
- ↑ "Institute of Advanced Study : Professor Nicholas Kaiser – Durham University". Archived from the original on 16 March 2018. பார்க்கப்பட்ட நாள் 16 March 2018.
- ↑ "CBP CV" (PDF). Archived from the original (PDF) on 16 மார்ச் 2018. பார்க்கப்பட்ட நாள் 16 March 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "ras.org.uk, Winners of the 2017 awards, medals and prizes – full details". பார்க்கப்பட்ட நாள் 16 March 2018.
- ↑ "2018 Gruber Cosmology Prize Citation". gruber.yale.edu. பார்க்கப்பட்ட நாள் 13 May 2019.