மேர்க்குரித் திட்டம்
Appearance
மாக்டொன்னெல் மேர்க்குரி | ||
---|---|---|
விவரம் | ||
திட்டம்: | பூமியைச் சுற்றிவரும் விண்வெளிப்பயணம் | |
Crew: | one, pilot | |
பரிமாணங்கள் | ||
உயரம்: | 11.5 அடி | 3.51 மீ |
விட்டம்: | 6.2 அடி | 1.89 மீ |
கனவளவு: | 60 அடி³ | 1.7 மீ³ |
எடைகள் (MA-6) | ||
Launch: | 4,265 lb | 1,935 kg |
Orbit: | 2,986 lb | 1,354 kg |
Post Retro: | 2,815 lb | 1,277 kg |
Reentry: | 2,698 lb | 1,224 kg |
Landing: | 2,421 lb | 1,098 kg |
Rocket engines | ||
Retros (solid fuel) x 3: | 1,000 lbf ea | 4.5 kN |
Posigrade (solid fuel) x 3: | 400 lbf ea | 1.8 kN |
RCS high (H2O2) x 6: | 25 lbf ea | 108 N |
RCS low (H2O2) x 6: | 12 lbf ea | 49 N |
Performance | ||
Endurance: | 34 hours | 22 orbits |
Apogee: | 175 miles | 282 km |
Perigee: | 100 miles | 160 km |
Retro delta v: | 300 mph | 483 km/h |
Mercury capsule diagram | ||
Mercury capsule Diagram (NASA) | ||
McDonnell Mercury capsule |
மேர்க்குரித் திட்டம் (Project Mercury) என்பது மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது விண்வெளித் திட்டமாகும். இத்திட்டம் 1959 இல் ஆரம்பித்து 1963 வரை தொடர்ந்தது. மேர்க்குரி-அட்லஸ் 6 என்ற விண்கலம் பெப்ரவரி 20, 1962 இல் விண்ணுக்கு முதன் முதலில் அமெரிக்காவின் மனிதனைக் கொண்டு சென்றது.
மேர்க்குரித் திட்டத்தின் மொத்தச் செலவு $1.5 பில்லியன் ஆகும்.
மனிதரற்ற பயணங்கள்
[தொகு]இத்திட்டம் மொத்தம் 20 தானியங்கிகளைக் கொண்டு சென்றது. இவற்றில் சிலவே வெற்றிகரமானதாக இருந்தன. இவற்றில் பின்வரும் 4 பயணங்களில் மனிதரல்லாத விலங்குகள் கொண்டு செல்லப்பட்டன.
- லிட்டில் ஜோ 2 (சாம் என்ற குரங்கு டிசம்பர் 4, 1959 இல் 85 கிமீ உயரம் கொண்டு செல்லப்பட்டது)
- லிட்டில் ஜோ 1B (மிஸ் சாம் என்ற குரங்கு ஜனவரி 21, 1960 15 கிமீ உயரம் சென்றது).
- மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 2 (ஹாம் என்ற சிம்பன்சி ஜனவரி 31, 1961 இல் கொண்டு செல்லப்பட்டது).
- மேர்க்குரி-அட்லஸ் 5 (ஏனொஸ் என்ற சிம்பன்சி நவம்பர் 29, 1961 இல் பூமியை 2 தடவைகள் சுற்றி வர அனுப்பப்பட்டது).
மனிதப் பயணங்கள்
[தொகு]- மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 3 - அலன் ஷெப்பர்ட், மே 5, 1961 இல் மொத்தம் 15 நிமி 28 செக் நேரம் விண்வெளியில் இருந்தார்.
- மேர்க்குரி-அட்லஸ் 6 - ஜோன் கிளென், பெப்ரவரி 20, 1962 இல் 4 மணி 55 நிமி 23 செக் நேரம் பூமியைச் சுற்றிய முதல் மனிதர் ((3 தடவை சுற்றினார்).
- மேர்க்குரி-அட்லஸ் 7 - ஸ்கொட் கார்பென்ரர், மே 24, 1962 இல் 4 மணி 56 நிமி 15 செக் நேரம் 3 தடவை பூமியைச் சுற்றினார்.
- மேர்க்குரி-அட்லஸ் 8 - வொல்லி ஷீர்ரா, அக்டோபர் 3, 1962 இல் 9 மணி 13 நிமி 11 செக் நேரம் 6 தடவை பூமியைச் சுற்றினார்.
- மேர்க்குரி-அட்லஸ் 9 - கோர்டன் கூப்பர், மே 15, 1963 இல் 1 நாள் 10 மணி 19 நிமி 49 செக் நேரம் 22 தடவை பூமியைச் சுற்றினார்.
வெளி இணைப்புகள்
[தொகு]- மேர்க்குரித் திட்டம் பரணிடப்பட்டது 2001-10-31 at the வந்தவழி இயந்திரம்