பஸ்தர் தசரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பஸ்தர் தசரா என்பது சத்தீஸ்கரின் தனித்துவமான கலாச்சார தசரா திருவிழாவாகும். மாநிலத்தின் உள்ளூர் மக்களால் கொண்டாடப்படும் தசரா திருவிழா, தண்டேஸ்வரி தேவியின் உச்ச சக்தியைக் குறிக்கிறது. தசராவின் போது, பஸ்தரில் வசிப்பவர்கள் ஜகதல்பூர் தண்டேஸ்வரி கோவிலில் சிறப்பு வழிபாடுகளை ஏற்பாடு செய்கிறார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் தேவி அமர்ந்திருக்கும் ரதம் செய்யப்பட்டு ஊர்வலத்திற்கு தயாராகிறது . [1]

ஜக்தல்பூரில் பஸ்தர் தசரா விழா கொண்டாட்டம்

வரலாறு[தொகு]

மகாராஜா புருஷாத்தம் தியோ முதன்முதலில் தசரா விழாவை 15 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடங்கினார் என்று நம்பப்படுகிறது. இந்த புனித திருவிழாவில் பங்கேற்க பஸ்தர் முழுவதுமே தயாராக காத்துக்கொண்டிருக்கும். பஸ்தரின் மரியாதைக்குரிய ராஜ குடும்பத்தினர் இந்த நிகழ்வின் முழு பத்து நாட்களிலும், நடைபெறும் எல்லா வழிபாட்டு அமர்வுகளை ஏற்பாடு செய்கிறார்கள், அதில் தண்டேஸ்வரி தேவியின் பண்டைய ஆயுதங்கள் தெய்வீக சக்திகளாக கருதப்படுகின்றன. பஸ்தர் தசராவின் உள்ளார்ந்த பண்புகளில் ஒன்று, திருவிழா காலம் முழுவதும் ஜமீன்தாரையும் ஊரின் மற்ற முக்கிய பிரமுகர்களையும் சாட்சிகளாக வைத்துக்கொண்டு அரசின் கட்டுப்பாடு முழுவதுமாக திவானுக்கு மாற்றப்படுகிறது. குன்வர் அமாவாசை தசராவின் முதல் நாள். முதல் நாள் இரவு வழக்கமான கட்டுப்பாடு பரிமாற்றம் நடைபெறுகிறது. இந்த விழாவின் ஒரு விசித்திரமான அம்சம் என்னவென்றால், அதிகாரத்தை திவானிடம் ஒப்படைப்பதற்கு முன், ஆன்மீக சக்திகள் இருப்பதாக நம்பப்படும் ஒரு பெண்ணிடம் அனுமதி கேட்கப்படுகிறது. இந்த பெண் மர வாளுடன் காணப்படுகிறார் மற்றும் போர் வீராங்கனை போன்ற தோரணையில் நிற்கிறார். தசராவின் இரண்டாவது நாள் பிரதிபதா என்று அழைக்கப்படுகிறது, அதைத் தொடர்ந்து ஆரத்தி மற்றும் சலாமி. ஒன்பதாம் நாளில், பஸ்தரின் ராஜா, தேரில் அல்லது பல்லக்கில் நகரின் நுழைவாயிலுக்கு வரும் தண்டேஸ்வரி தேவியை வரவேற்கிறார். திருவிழாவின் பத்தாம் நாள் தசரா என்று அழைக்கப்படுகிறது, ராஜா ஒரு தர்பார் ஏற்பாடு செய்கிறார், அங்கு மக்கள் வந்து தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். தசராவின் கடைசி நாளில் ஆரத்தி விழாவும் நடைபெறுகிறது. பொதுவாகவே தசரா திருவிழா இந்தியாவின் புகழ்பெற்ற நிகழ்வாகும், ஆனால் பஸ்தரின் தசரா, நாட்டின் பொதுவாக அறியப்பட்ட மற்ற தசரா திருவிழாவிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. சத்தீஸ்கரின் அனைத்து பழங்குடியினரின் மரியாதைக்குரிய தெய்வமான தண்டேஸ்வரி தேவியின் தெய்வீக ஆனந்தத்தையும் அருளையும் வேண்டி பஸ்தர் தசரா கொண்டாடுகிறது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Bastar Dussehra. Dussehra of Bastar (PDF). Archived from the original (PDF) on 14 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 21 பிப்ரவரி 2023. {{cite book}}: Check date values in: |access-date= and |archivedate= (help)
  2. Chhattisgarh : Exp CG: Bastar Dussehra. "Details". பார்க்கப்பட்ட நாள் 14 April 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஸ்தர்_தசரா&oldid=3690025" இலிருந்து மீள்விக்கப்பட்டது