டோம்மசோ சேவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டோம்மசோ சேவா
டோம்மசோ சேவா
பிறப்புதிசம்பர் 20, 1648
மிலன்
இறப்புபெப்ரவரி 3, 1737
மிலன்
தேசியம்இத்தாலியர்
துறைகணிதம்
பின்பற்றுவோர்கியோவன்னி கிரோலமோ சச்சேரி

டோம்மசோ சேவா (Tommaso Ceva) (திசம்பர் 20, 1648 – பிப்ரவரி 3, 1737) இத்தாலிய இயேசு சபை கணிதவியலாளர். இவர், கணிதவியலாளர் கியோவன்னி சேவாவின் சகோதரர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

டோம்மசோ சேவா மிலனிலுள்ள ஒரு பணக்காரக் குடும்பத்தில் 1648 ஆம் ஆண்டு பிறந்தார். 1663 இல் இயேசு சபையில் சேர்ந்தார். மிலனிலுள்ள இயேசு சபை கல்லூரியில் முப்பத்தியெட்டு ஆண்டுகள் கணிதம் மற்றும் அணியியல் பயிற்றுவித்தார். "கியோவன்னி கிரோலமோ சச்சேரி" இவரது புகழ்பெற்ற மாணவராவார். இவரது முதல் அறிவியல் நூலில் (De natura gravium (1669)) ஈர்ப்பு விசை, இயல் வீழ்ச்சி ஆகிய இயற்பியல் கருத்துருக்களை தத்துவார்த்தமாக அளித்துள்ளார். இவரது ஒரேயொரு கணித நூல் (Opuscula Mathematica) 1699 இல் வெளியானது. அந்நூலில் வடிவவியல், ஈர்ப்புவிசை, எண்கணிதம் ஆகியவற்றைப் பற்றியக் கருத்துக்களைக் கொண்டிருந்தது. ஒரு செங்கோணத்தை குறிப்பிட்ட என்ணிக்கையிலான சமபாகங்களாகப் பிரிக்க உதவும் கருவியை வடிவமைத்தார். இவர் அறியப்பட்ட கவிஞருமாவார்.

1737 இல் மிலனில் இறந்தார்.


ஆதார நூற்பட்டியல்[தொகு]

  • Ramat, Raffaello, "La critica del padre Ceva," Civiltà moderna, 10 (1938), 385-95, and 11 (1939), 139-66. (Reprinted in Sette contributi agli studi di storia della letteratura italiana, (Florence, 1947), pp. 5-44.
  • Sommervogel, Carlos (1891). Bibliothèque de la Compagnie de Jésus. Vol. 2. Brusels. pp. 1015–24.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  • Argelati, Filippo (1745). Bibliotheca scriptorum mediolanesium. Milan. pp. 417–20.
  • Riccardi, Pietro (1870). Biblioteca matematica italiana. Vol. 1. Modena. pp. 343–4.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டோம்மசோ_சேவா&oldid=3622620" இலிருந்து மீள்விக்கப்பட்டது