உள்ளடக்கத்துக்குச் செல்

கியோவன்னி சேவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கியோவன்னி சேவா
பிறப்பு(1647-09-01)1 செப்டம்பர் 1647
இத்தாலி
இறப்புஇத்தாலி
13 மே 1734(1734-05-13) (அகவை 86)
வாழிடம்இத்தாலி
குடியுரிமைஇத்தாலி
தேசியம்இத்தாலியர்
துறைவடிவவியல்
பணியிடங்கள்
  • பைசாவின் பல்கலைக்கழகம்
  • மந்துவாவின் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்
அறியப்படுவதுயூக்ளீடிய வடிவவவியலில் சேவாவின் தேற்றம்

கியோவன்னி சேவா (Giovanni Ceva) (செப்டம்பர் 1, 1647 – மே 13, 1734) இத்தாலியக் கணிதவியலாளராவார். யூக்ளிடிய வடிவவியலின் சேவாவின் தேற்றத்திற்காக நன்கறியப்பட்டவர். இவரது சகோதரர் டோம்மசோ சேவாவும் நன்கறியப்பட்டக் கவிஞரும் கணிதவியலாளருமாவார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

மிலனிலுள்ள இயேசுசபை கல்லூரியில் பயின்றார். பின்னர் பிசா -இன் பல்கலைக்கழகத்தில் தனது கல்வியைத் தொடர்ந்தார். படிப்பை முடித்தபின்னர் அப்பல்கலைக்கழகத்திலேயே பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர் 1686 இல் மந்துவா -இன் பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராகித் தன் வாழ்நாள் முழுதும் அப்பணியில் தொடர்ந்திருந்தார்.

பணி

[தொகு]
De lineis rectis se invicem secantibus statica constructio, 1678

கியோவன்னி சேவா, வாழ்நாளில் பெரும்பகுதி கணிதத்தைப் பயின்றார். பதினோராம் நூற்றாண்டிலேயே அறியப்பட்டிருந்த முக்கோணங்கள் பற்றிய மிக முக்கியமான தேற்றமான சேவாவின் தேற்றத்தைத் 1678 இல் தனது நூலில் (De lineis rectis) வெளியிட்டார். மெனலாசின் தேற்றத்தை மீண்டும் கண்டுபிடித்து வெளியிட்டார். 1682 இல் Opuscula mathematica, 1692 இல் Geometria Motus என்ற நூல்களை வெளியிட்டார். நுண்கணிதம் குறித்தும் அவர் முன்பே கணித்திருந்தார். அவர் எழுதிய நூலான De Re Nummeraria 1711 இல் "மேத்தமேட்டிக்கல் எக்னாமிக்சில்" வெளியானது.

வடிவவியல் தொகுதிகளில் விசையியல் மற்றும் நிலையியல் பயன்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். ஒரு காலகட்டத்தில் இரு ஊசல்களின் அலைவு நேரங்கள் அவ்வூசல்களின் நீளங்களுடன் சமவிகிதத்தில் இருக்குமென்று தவறுதலாகக் கணித்தார். ஆனால் பின்னர் தனது தவற்றைத் திருத்திக்கொண்டார். சேவா, நீர்ம இயக்கவியலிலும் ஆய்வு மேற்கொண்டார். நீர்ம இயக்கவியலில் அவர் மேற்கொண்ட ஆய்வுகளை Opus hydrostaticum என்ற நூலில் 1728 இல் வெளியிட்டார். நீர்ம இயக்கவியலில் அவரது பணியானது ரெனோ ஆற்றை, போ ஆற்றுக்குத் திசைமாற்றும் திட்டத்தைக் கைவிட உதவியது.

நூல்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியோவன்னி_சேவா&oldid=3617396" இலிருந்து மீள்விக்கப்பட்டது