மணீஷ் சிசோடியா
மணீஷ் சிசோடியா | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
2017-இல் மணீஷ் சிசோடியா | |||||||||||
தில்லி மாநில துணை முதலமைச்சர் | |||||||||||
பதவியில் 14 பிப்ரவரி 2015 – 28 பிப்ரவரி 2023 | |||||||||||
துணைநிலை ஆளுநர் | நஜீப் ஜங் அணில் பைஜால் வினை குமார் சக்சேனா | ||||||||||
அமைச்சரவை | அரவிந்த் கெஜ்ரிவாலின் மூன்றாம் அமைச்சரவை | ||||||||||
முன்னையவர் | புதிய பதவி உருவாக்கம் | ||||||||||
| |||||||||||
தில்லி சட்டமன்ற உறுப்பினர் | |||||||||||
பதவியில் உள்ளார் | |||||||||||
பதவியில் 10 பிப்ரவரி 2015 | |||||||||||
முன்னையவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி | ||||||||||
தொகுதி | பத்பார்கஞ்ச் சட்டமன்றத் தொகுதி | ||||||||||
பதவியில் 8 டிசம்பர் 2013 – 10 பிப்ரவரி 2014 | |||||||||||
முன்னையவர் | அணில் குமார் சௌத்திரி | ||||||||||
பின்னவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி | ||||||||||
தொகுதி | பத்பார்கஞ்ச் சட்டமன்றத் தொகுதி | ||||||||||
தனிப்பட்ட விவரங்கள் | |||||||||||
பிறப்பு | 5 சனவரி 1972 ஹாப்பூர், உத்தரப் பிரதேசம், இந்தியா | ||||||||||
தேசியம் | இந்தியர் | ||||||||||
அரசியல் கட்சி | ஆம் ஆத்மி கட்சி | ||||||||||
முன்னாள் கல்லூரி | பாரதிய வித்தியா பவன் | ||||||||||
மணீஷ் சிசோடியா (Manish Sisodia) (பிறப்பு: 2 பிப்ரவரி 1972) இந்தியாவின் ஆம் ஆத்மி கட்சியில் அரசியல்வாதி ஆவார். ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனத் தலைவர்களில் மணீஷ் சிசோடியாவும் ஒருவர் ஆவார். இவர் 2015-ஆம் ஆண்டு முதல தில்லி மாநில துணை முதலமைச்சராக உள்ளார். மணீஷ் சிசோடியா மூன்றாவது முறையாக பத்பார்கஞ்ச் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தில்லி சட்டமன்ற உறுப்பின்ராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். [1] அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் இவர் நிதி, கல்வி, தொழிற்கல்வி, பொதுப்பணித்துறை, தொழிலாளர் துறை மற்றும் கலால் துறை அமைச்சராக உள்ளார்.[2] [3] [4]மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட மணீஷ் சிசோடியா 28 பிப்ரவரி 2023 அன்று அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.
குற்றச்சாட்டுகள்
[தொகு]சூன் 2022-இல் பாரதிய ஜனதா கட்சியினர் பள்ளிகள் மற்றும் வகுப்பறைகள் கட்டுமானத்தில் ஊழல் புரிந்ததாக மணிஷ் சிசோடியா மீது குற்றச்சாட்டுக்கள் வைத்தனர். இக்குற்றச்சாட்டுகக்ள் மீது தில்லி லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.[5]
சூலை 2022-இல் தில்லி துணைநிலை ஆளுநர் வினை குமார் சக்சேனா, தில்லி மாநில அரசின் மதுபானக் கொள்கை 2021-22 குறித்தும், மதுபானங்களை விற்க தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டது மற்றும் விற்பனை உரிமம் வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக தில்லி மாநில துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனை அடுத்து அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சி பி ஐ-க்கு சோதனை மேற்கொண்டனர்.[6][7] [8][9]தில்லி மதுபானக் கொள்கையில் முறைகேடு தொடர்பாக சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 15 குற்றவாளிகள் பட்டியலில் மணீஷ் சிசோடியா முதலிடத்தில் உள்ளார்.இது தொடர்பாக சிபிஐ வெளியிட்டுள்ள 11 பக்க ஆவணத்தில் ஊழல், குற்றவியல் சதி மற்றும் கணக்கு முறைகேடு உள்ளிட்ட குற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் 12 பேருக்கு எதிராக கவன ஈர்ப்பு சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் மணீஷ் சிசோடியாவின் வீடு மற்றும் 30 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.[10]
27 பிப்ரவரி 2023 அன்று சிபிஐ-விசாரணைக்குச் சென்ற மணீஷ் சிசோடியாவை விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, கேள்விகளுக்கு முறையாக பதில் தரவில்லை என சிபிஐ குற்றம்சாட்டி கைது செய்து செய்தனர். [11][12]
பதவி விலகல்
[தொகு]முறைகேடு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர்களான மணீஷ் சிசோடியா மற்றும் சத்தியேந்திர குமார் ஜெயின் ஆகியோர் அமைச்சர் பதவியிலிருந்து விலகினர்.[13][14]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Manish Sisodia – Patparganj election results: Close fight for Manish Sisodia". https://economictimes.indiatimes.com/news/elections/assembly-elections/delhi/patparganj-results-close-fight-for-manish-sisodia/articleshow/74076381.cms?from=mdr.
- ↑ "Delhi deputy CM Manish Sisodia gets additional charge of PWD ministry". 23 February 2022.
- ↑ "Sisodia gets charge of labour, employment departments in Delhi govt". Business Standard India. Press Trust of India. 14 October 2020. https://www.business-standard.com/article/current-affairs/sisodia-gets-charge-of-labour-employment-departments-in-delhi-govt-120101401292_1.html.
- ↑ "Delhi Government". http://delhi.gov.in/wps/wcm/connect/DoIT/delhi+govt/delhi+home/departments/executives/ministers.
- ↑ "Newsmaker | AAP on offensive, raids against Delhi Deputy CM Manish Sisodia strike at heart of its showcase policies" (in en). The Indian Express. 19 August 2022. https://indianexpress.com/article/political-pulse/aap-cbi-raids-delhi-deputy-cm-manish-sisodia-8098909/.
- ↑ "Delhi L-G recommends CBI probe into AAP's new Excise Policy, cites violation of rules, procedural lapses". Financialexpress (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-19.
- ↑ "CBI Raids Delhi Deputy Chief Minister Manish Sisodia Over Liquor Policy". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2022-08-19.
- ↑ "Manish Sisodia among 15 persons named in CBI’s FIR on alleged excise scam in Delhi". Scroll.in. 19 August 2022. https://scroll.in/latest/1030868/manish-sisodia-among-15-persons-named-in-cbis-fir-on-alleged-excise-scam.
- ↑ Anand, Jatin (August 19, 2022). "Centre trying to derail Delhi’s health, education revolution: Kejriwal". https://www.thehindu.com/news/cities/Delhi/centre-trying-to-derail-delhis-health-education-revolution-kejriwal/article65788671.ece.
- ↑ மணீஷ் சிசோடியா வெளிநாடு தப்பிச்செல்ல தடை: அடுத்த அதிரடியில் இறங்கியது சிபிஐ!
- ↑ Manish Sisodia arrested: What is Delhi’s alleged liquor scam?
- ↑ மணீஷ் சிசோடியா கைது: டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் புகார் என்ன?
- ↑ Manish Sisodia, Satyendar Jain quit Arvind Kejriwal's cabinet, what next?
- ↑ Arrested AAP leaders Jain, Sisodia quit Delhi Cabinet