கவன ஈர்ப்பு சுற்றறிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கவன ஈர்ப்பு சுற்றறிக்கை (Look out circular (LOC)) குற்ற வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நபர், சொந்த நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு பயணம் செல்வதோ அல்லது வெளி நாட்டிலிருந்து உள்நாட்டிற்கு வருவதை தடுக்கும் நோக்கத்துடன், இந்தியக் காவல் துறையால் விடுக்கப்படும் சுற்றறிக்கையாகும்.[1]

குற்றம் சாட்டப்பட்ட நபர் நாட்டை விட்டு தப்பிக்க இயலாதவாறு, வானூர்தி நிலையங்கள், துறைமுகங்கள் போன்ற பன்னாட்டு எல்லைச் சாவடிகளில் செயல்படும் குடிவரத் துறை அதிகாரிகளுக்கு கவன அறிவிப்பு சுற்றறிக்கைகள் அனுப்பி வைக்கப்படும்.

கவன அறிவிப்பு சுற்றறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவரின் புகைப்படம், பெயர், கடவுச் சீட்டு விவரங்கள் இருக்கும். கவன ஈர்ப்பு சுற்றறிக்கையில் குறித்த நபர் வானூர்தி அல்லது கப்பல்களில் பயண செய்ய முற்பட்டால் குடிவரவுத் துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு, காவல் துறையிடம் ஒப்படைப்பர்.

கவன ஈர்ப்பு சுற்றறிக்கையின் ஆயுட்காலம்[தொகு]

கவன ஈர்ப்பு சுற்றறிக்கை வெளியிட்ட நாளிலிருந்து, ஓராண்டு காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்.

கவன ஈர்ப்பு அறிவிப்பு தொடர்பான வழக்குகள்[தொகு]

  • அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்பிருப்பதாகக் கூறி, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு இந்திய உள்துறை அமைச்சகம் சார்பில் கவன ஈர்ப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டது. தன் மீதான கவன ஈர்ப்பு அறிவிப்பை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கில் இந்திய உள்துறை அமைச்சகம் விடுவித்த கவன ஈர்ப்பு அறிவிக்கையை சென்னை உயர்நீதி மன்றம் விதித்த தடைக்கு, இந்திய உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.[2]
  • அரியானாவில் பாலியல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட தேரா சச்சா சௌதா அமைப்பின் நிறுவனத் தலைவர் ராம் ரகீம் சிங்கின் வளர்ப்பு மகளும், அரியானா மாநில அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டருமான அனிபிரீத்துக்கு எதிராக அரியானா அரசு கவன ஈர்ப்பு சுற்றறிக்கையை நாடு முழவதும் உள்ள அனைத்து பன்னாடு வானூர்தி நிலையங்களுக்கு அனுப்பியுள்ளது.[3]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Chapter 25 of Crime Manual of நடுவண் புலனாய்வுச் செயலகம், India
  2. "கார்த்தி சிதம்பரம் மீதான லுக் அவுட் நோட்டீஸ் நவ.9 வரை நீட்டிப்பு: சுப்ரீம் கோர்ட்டு". Archived from the original on 2017-11-06. பார்க்கப்பட்ட நாள் 2017-11-06.
  3. Lookout notice against Dera chief’s adopted daughter

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கவன_ஈர்ப்பு_சுற்றறிக்கை&oldid=3774920" இலிருந்து மீள்விக்கப்பட்டது