வீ. சா. இளஞ்செழியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீ. சா. இளஞ்செழியன் (V. S. Ilanchezhiyan)(பிறப்பு செப்டம்பர் 30, 1937) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சார்ந்தவர். கீரனூரில் பள்ளிக் கல்வியினை இளஞ்செழியன் முடித்துள்ளார். இவர், திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஆவார். இவர் 1967 மற்றும் 1971ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல்களில் திமுக வேட்பாளராக விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் ஆனார்.[1]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1971 விராலிமலை திமுக 41,813 55.54

மேற்கோள்கள்[தொகு]

  1. Written at Madras. தமிழ்நாடு சட்டப் பேரவை ”யார் எவர்”. 01.01.1972: Tamil Nadu Legislative Assembly Department. 1971. p. 118. {{cite book}}: More than one of |pages=, |at=, and |page= specified (help); Unknown parameter |trans_title= ignored (help)CS1 maint: location (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீ._சா._இளஞ்செழியன்&oldid=3538190" இலிருந்து மீள்விக்கப்பட்டது