இலங்கை கூன்வாள் சிலம்பன்
இலங்கை கூன்வாள் சிலம்பன் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | திம்மாலிடே
|
பேரினம்: | பொமடோரைனசு
|
இனம்: | பொ. மெலனுரசு
|
இருசொற் பெயரீடு | |
பொமடோரைனசு மெலனுரசு பிளைத், 1836 |
இலங்கை கூன்வாள் சிலம்பன் அல்லது சிலோன் கூன்வாள் சிலம்பன் (பொமடோரைனசு மெலனுரசு) ஒரு பழைய உலக சிலம்பன் ஆகும். இது இலங்கைத் தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இது முன்னர் இந்திய கூன்வாள் சிலம்பனின் துணையினமாகக் கருதப்பட்டது.[2] பரிந்துரைக்கப்பட்ட சிற்றினம் இலங்கையின் ஈரமான மலைப் பகுதிகளின் மேற்குப் பகுதியில் காணப்படுகிறது. அதே சமயம் இனம் ஹோல்ட்சுவொர்த்தி வறண்ட தாழ் நிலங்கள் மற்றும் கிழக்கு மலைப்பகுதிகளில் காணப்படுகிறது.[3]
கலாச்சாரத்தில்
[தொகு]பெரும்பாலான கூன்வாள் சிலம்பன் சிற்றினங்கள் சிங்கள மொழி பேசும் சமூகத்தால் பரண்டல் குருல்லா[4] என்று குறிப்பிடப்படுகின்றன. 'பரண்டெல்' என்ற சொல் உலர்ந்த புல்லைக் குறிக்கிறது. இந்தப் பறவையின் நிறம் உலர்ந்த புல் போன்றது. பரண்டல் குருல்லா என்று கூறப்படும் இந்தப் பறவையின் வட்டாரப் பெயரானது ஆங்கிலத்தில் 'உலர்ந்த புல் நிற பறவை' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த பறவையின் படமானது இலங்கையின் 4.50 ரூபாய் தபால் தலையில் அச்சிடப்பட்டது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Pomatorhinus melanurus". IUCN Red List of Threatened Species 2016: e.T22734513A95088372. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22734513A95088372.en. https://www.iucnredlist.org/species/22734513/95088372. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ Collar, NJ (2006) A partial revision of the Asian babblers (Timaliidae).
- ↑ Kaluthota, CD (2009) Sri Lanka Scimitar Babbler - A recent addition to the endemic birds of Sri Lanka.
- ↑ Anonymous (1998). "Vernacular Names of the Birds of the Indian Subcontinent". Buceros 3 (1): 53–109. http://www.bnhsenvis.nic.in/pdf/vol%203%20(1).pdf.
- ↑ "Birds on stamps: Sri Lanka".