ஸ்ப்பாக்ட்டீரியா சமர்

ஆள்கூறுகள்: 36°55′48.49″N 21°39′56.61″E / 36.9301361°N 21.6657250°E / 36.9301361; 21.6657250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ப்பாக்ட்டீரியா சமர்
பெலோபொன்னேசியன் போர் பகுதி
நாள் கிமு 425
இடம் ஸ்ப்பாக்ட்டீரியா, பைலோஸ் விரிகுடாவின் நுழைவாயிலில் உள்ள ஒரு சிறிய தீவு
ஏதென்சின் வெற்றி
பிரிவினர்
ஏதென்சு எசுபார்த்தா
தளபதிகள், தலைவர்கள்
Demosthenes
Cleon
எபிடடாஸ்
ஹிப்பாகிரேட்டாஸ்
ஸ்டைஃபோன்
பலம்
3,000+ வீரர்கள்,
8,000 இலகுரக ஆயுதம் ஏந்திய படகோட்டிகள்
440
இழப்புகள்
சிலர் 148 கொல்லபட்டனர்,
மீதமுள்ளவர் கைதுசெய்யப்பட்டனர்

ஸ்ப்பாக்ட்டீரியா சமர் (Battle of Sphacteria) என்பது பெலோபொன்னேசியன் போரின்போது நடந்த ஒரு தரைச் சமராகும். இது கிமு 425 இல் ஏதென்சுக்கும் எசுபார்த்தாவிற்கும் இடையில் நடந்தது. பைலோஸ் சமர் மற்றும் அடுத்தடுத்த அமைதி பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பல எசுபார்த்தன்கள் ஸ்ப்பாக்ட்டீரியா தீவில் சிக்கித் தவித்தனர். கிளியோன் மற்றும் டெமோஸ்தீனசின் தலைமையிலான ஏதெனியன் படை தீவை சுற்றிவளைத்து அவர்களை சரணடைய கட்டாயப்படுத்தியது.

பருந்துப்பார்வை[தொகு]

அமைதி பேச்சுவார்த்தை தோல்வியுற்றதை அடுத்து, ஸ்ப்பாக்ட்டீரியா தீவிவில் ஸ்பார்டான்களை பட்டினி போட்டு பணியவைக்க தளபதி டெமோஸ்தீனஸ் முயன்றார். ஆனால் தீவை இறுக்கமாக முற்றுகையிட இயலவில்லை. ஏதென்சில் குளிர்காலம் நெருங்கி வருவதால் முற்றுகையில் உள்ள முட்டுக்கட்டையை நீக்கி அவர்களை வெல்லவேண்டும் இல்லையேல் முற்றுகையை கைவிட வேண்டிய அவசியம் ஏற்படும் என்று கவலையும் இருந்தது. அரசியல்வாதியான கிளியோன் ஏதென்சிலிருந்து மேலும் படைகளுடன் வந்து டெமோஸ்தீனசுடன் இணைந்தார். பின்னர் ஏதெனியர்கள் ஸ்ப்பாக்ட்டீரியா மீதான தாக்குதலைத் தொடங்கினர். பலவீனமாக பாதுகாக்கப்பட்ட இடத்தில் பெரும் படையுடன் தரையிறங்கிய ஏதெனியர்கள், கடற்கரையோரப் பாதுகாப்புப் பகுதிகளைச் சமாளித்து, தீவின் உட்பகுதிக்கு நகர்ந்து, எசுபார்த்தன்களை வில் மற்றும் ஈட்டிகளைப் பயன்படுத்தி தாக்கினர். அவர்களை ஏதெனியன் ஹாப்லைட்டுகள் பிடிக்க முயற்சிக்கும் போதெல்லாம். எசுபார்த்தன்கள் தீவின் வடக்குப் பகுதிக்கு பின்வாங்கி, அவர்களின் கோட்டைகளுக்குப் பின்னால் மறைந்தனர். ஆனால் மெசேனியன் தளபதி காமன் தனது படைகளை அசாத்தியமான நிலப்பரப்பு வழியாக அவர்களின் பின்புறமாக கொண்டு வருந்தபிறகு, எசுபார்த்தன்கள் சரணடைந்தனர்.

ஏதென்சால் 292 ஹோப்லைட்டுகள் (அதில் 120 எசுபார்த்தன்கள்) கைதுசெய்த பிறகு போரில் அதிகார சமநிலை தீவிரமாக மாறியது. எசுபார்த்தா அட்டிகா மீது படையெடுத்தால் தன் பிடியில் உள்ள கைதிகளை தூக்கிலிடுவதாக ஏதென்சு அச்சுறுத்தியது. போர் அறிவிக்கப்பட்டதிலிருந்து ஆண்டுதோறும் எசுபார்த்தா நிகழ்த்திய படையெடுப்புகள் அதிலிருந்து நிறுத்தப்பட்டது. [1] இதற்கிடையில், ஏதென்சு அதிக நம்பிக்கையுடன், பல ஆண்டுகள் அதிக வீரியத்துடனும் முன்முயற்சியுடனும் போரைத் தொடர்ந்தது. வரிசையான தோல்விகள் அதன் நிலையை சிதைத்த பின்னரே பேச்சுவார்த்தைக்கு வந்தது.

ஆரம்ப நகர்வுகள்[தொகு]

பைலோஸ் போருக்குப் பிறகு, ஸ்ப்பாக்ட்டீரியா தீவில் 400 க்கும் மேற்பட்ட ஸ்பார்டா வீரர்கள் மட்டிக்கொண்ட நிலையில் எசுபார்த்தா அமைதி பேச்சுவார்த்தைக்காக அழைப்பு விடுத்தது. மேலும் பெலோபொன்னேசியன் கடற்படையின் கப்பல்களுடன் சரணடையச் செய்வதன் மூலம் பைலோசில் போர்நிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்த எசுபார்த்தா பின்னர் ஏதென்சுக்கு ஒரு தூதுவரை அனுப்பியது. [2] எவ்வாறாயினும், இந்த பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை, மேலும் சேச்சுவார்த்தை தோல்வியடைந்த செய்தியுடன் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது. ஏதெனியர்கள் பெலோபொன்னேசியக் கப்பல்களைத் திருப்பித் தர மறுத்துவிட்டனர், போர்நிறுத்தத்தின் போது தங்கள் கோட்டைகளுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டினர். [3] மீட்பு முயற்சிகளுக்கு எதிராக ஏதெனியர்கள் இரவும் பகலும் தீவைக் காத்து வந்ததால், பகையுணர்வுகள் ஏற்பட்டன.

ஏதெனியப் படைக்கு தலைமை தாங்கிய டெமோஸ்தீனஸ், துவக்கத்தில் எசுபார்த்தன்களைத் தாக்குவதற்குப் பதிலாக அவர்களைப் பட்டினியால் கொல்லத் திட்டமிட்டார். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல எசுபார்த்தன்கள் எதிர்பார்த்ததை விட நீண்ட காலம் தாக்குப் பிடிப்பார்கள் என்பது தெளிவாகியது. [4] விடுதலை அளிப்பதாக வாக்களிக்கப்பட்ட அடிமைகளான எலட்களுக்கு பண வெகுமதிகளை வழங்குவதன் மூலம், எசுபார்த்தன்கள்களால் ஒரளவு அனுப்ப முடிந்தது. இந்த மனிதர்களில் சிலர் மோசமான காலநிலையில் இரவில் கடலோரப் பக்கத்திலிருந்து தீவை அடைந்தனர்; மற்றவர்கள் நீருக்கடியில் உணவுப் பைகளை இழுத்துச் சென்றனர். இதற்கிடையில், ஏதெனியர்கள் தங்களுக்கு அடிக்கடி உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதைக் கண்டறிந்தனர். மேலும் முழுப் படையும் தங்களுக்கான குடி நீருக்காக ஒரு நீரூற்றைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த பாதகமான சூழ்நிலைகளில், ஏதெனியர்கள் முற்றுகை மூலமாக குளிர்காலத்திற்கு முன்பு பிரச்சினையை தீர்க்க முடியுமா என்று ஐயம் கொள்ளத் தொடங்கினர். [5]

ஏதென்சில் விவாதம்[தொகு]

ஸ்ப்பாக்ட்டீரியா முற்றுகை தொடர்ந்து நடந்து வருவது ஏதென்சில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியது. முற்றுகை நீடிக்குமானானல் அது ஏதெனிய கடற்படைக்கு ஆபத்தாக முடியலாம் என அவையினர் உணர்ந்தனர். எசுபார்த்தாவின் அமைதிப் பேச்சுவார்த்தையின் வழியாக வந்த வாய்ப்பை நிராகரித்த முடிவு மிகவும் வருத்தத்திற்குரிய முடிவாக கருதப்பட்டது. [6] இந்நிலையில் ஜன சபையினர் கிளியோனை திரும்ப அழைத்தனர். முன்னமே அமைதி உடன்பாட்டுக்கு இணங்கி இருக்கவேண்டும் என்று அவர் மீது குறை கூறினர். நாவன்மை படைத்த கிளியோன், ஸ்ரடிகொஸ் எனப்படும் பத்து படைத் தலைர்கள் மீது குறை கூனிறார். 'அவர்கள் ஆண்களாக இருந்தால் ஸ்ப்பாக்ட்ரீரியாவுக்குச் சென்று அங்குள்ள எசுபார்த்தன்களை நிறைப்படுத்திக் கொண்டு வருவார்கள்; நானாயிருந்தால் அப்படித்தான் சென்வேன்' என்று ஏளனமாக உரைத்தார். கிளியோனின் அரசியல் எதிர்ப்பாளரும், அந்த ஆண்டுக்கான ஸ்ரடிகெஸ்களில் ஒருவரான நிக்கியாஸ், அந்த சவாலை படைத்தலைவர்கள் சார்பாக ஏற்றுக் கொண்டார். இந்த தருணத்தின் உற்சாகமடைந்த சட்டசபை கிளியனுடன் அவரையும் அனுப்பினர். [7]

தலைமைப் பொறுப்பே ஏற்றுக் கொண்ட கிளியோன் 'இன்னும் இருபது நாட்களுக்குள் ஸ்ப்பாக்ட்டீரியாவிலுள்ள ஸ்பாட்டன்களை சிறை கொண்டுவருவேன், அல்லது அவர்களை கொன்றுவிட்டு வருவேன்'. என்று சபதம் செய்தார். டெமோஸ்தீனசை [8] தனது கூட்டாளியாகக் கொண்டு அவரது போர்த் தந்திரங்களுடன் படைக்கு தலைமை தாங்கி, ஏதென்ஸ் மாலுமிகள் மற்றும் பெல்டாஸ்ட்கள் எனப்படும் இலகுரக காலாட் படையினர் மற்றும் வில்லாளர்களைக் கொண்ட கப்பல்களைக் கொண்ட ஒரு படையுடன் ஏதென்சிலிருந்து புறப்பட்டார்.

ஸ்பேக்டீரியா மீது தாக்குதல்[தொகு]

டெமோஸ்டெனிஸ் ஏற்கனவே ஸ்ப்பாக்ட்டீரியா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார். ஏனெனில் முற்றுகை நீடிக்கநீடிக்க தங்களுகே அது பாதகமாக முடியும் என எண்ணினார். மேலும், எசுபார்த்தன் மாலுமிகளால் தீவில் அவ்வப்போது தீ பற்றவைக்கபடுவதால், தாவரங்கள் நிறைந்த தீவின் உட்பகுதியில் இல்லாமல் தீவின் எல்லையிலேயே இருக்கவேண்டிய நிலையில் இருந்தனர். [9] பைலோசிலிருந்து விலகி, தீவின் தெற்குப் பகுதியில் முப்பது ஸ்பார்டான்கள் மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததைக் கண்டு, டெமோஸ்தீனஸ் தனது 800 ஹாப்லைட்களை ஒரு இரவில் தீவின் கடல் மற்றும் தரைப் பக்கங்களில் இறக்கினார். உள்ளே சென்ற படையினர் அங்கு இருந்த எசுபார்டன்களை பிடித்து படுகொலை செய்தனனர். விடியற்காலையில், ஏதெனியன் படையின் கரைக்கு ஓடினர். [10]

ஸ்பார்டன்களுக்கும், ஏதெனியன் ஹாப்லைட்டுகளுடன் இடையில் மோதல்கள் உண்டாயின. டெமோஸ்தீனஸ் தனது இலகுரக ஆயுதம் ஏந்திய துருப்புக்களில், சுமார் 200 பேரை உயரமான இடங்களில் இருக்கவைத்து எதிரிகள் மீது தாக்குதலை செய்தனர். அவர்கள் நெருங்கும் போதெல்லாம் அம்புகளை வீசினர். முன்பு எசுபார்டன்கள் தீவில் மூட்டிய தீயினால் ஏற்பட்ட தூசி, சாம்பல் போன்றவை, காற்றில் பரவி ஸ்பார்டன்களை இக்கட்டான நிலைக்கு தள்ளியன. தங்களை தாக்குபவர்களை சாம்பல் தூசு அவர்களின் பார்வையில் இருந்து மறைத்தது. இதனால் எசுபார்த்தன்கள் தீவின் வடக்கு முனைக்கு குழப்பத்துடன் பின்வாங்கினர், அங்கு அவர்கள் தங்கள் கோட்டைகளுக்குப் பின்னால் மறைந்திருந்து தாக்குப்பிடிக்க நினைத்தனர். எச்பார்த்தன்களை அங்கிருந்து வெளியேற்ற ஏதெனியர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியுற்றதால், போரில் அந்த முட்டுக்கட்டை உண்டானது. இந்த கட்டத்தில், ஏதெனியன் படையில் உள்ள மெசெனியன் பிரிவின் தளபதி, காமன், டெமோஸ்தீனசை அணுகி, தீவின் கரையோரமாக வெளித்தோற்றத்தில் அசாத்தியமான நிலப்பரப்பாக காணப்படும் பகுதி வழியாக செல்ல துருப்புக்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கை ஏற்கப்பட்டது, மேலும் காமன் தனது ஆட்களை ஸ்பார்டன்கள் மறைந்திருக்கும் இடத்தின் பின்புறம் அதன் மோசமான நிலப்பரப்பு காரணமாக பாதுகாப்பில் கவனமின்றி விடப்பட்ட ஒரு பாதை வழியாக அழைத்துச் சென்றார். அவர் தனது படையுடன் நுழைந்தபோது, எசுபார்த்தன்கள், அவநம்பிக்கை அடைந்தனர். ஏதெனியர்கள் கோட்டைக்கான பாதைகளைக் கைப்பற்றினர், மேலும் எசுபார்த்தன் படை அழிவின் விளிம்பில் நின்றது.

சரணடைதலும், பின்விளைவுகளும்[தொகு]

இந்த கட்டத்தில், கிளியோன் மற்றும் டெமோஸ்தீனஸ் தாக்குதலை மேலும் தீவிரமாக்காமல், தங்களால் இயன்ற அளவு எசுபார்த்தன்களை சிறைபிடிக்க விரும்பினர். [11] ஒரு ஏதெனியன் அறிவிப்பாளர் எசுபார்த்தன்களை சரணடையுமாறு கேட்டுக்கொண்டார். பின்னர் எசுபார்த்தன்கள், தங்கள் கேடயங்களைத் தூக்கி எறிந்து, கடைசியாக பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டனர். எசுபார்ட்டன்கள் வெற்றியடையவோ, தப்பிக்கவோ வாய்ப்பு இல்லாமையால் வேறுவழியின்றி சரணடைந்தனர். ஸ்பேக்டீரியாவுக்குச் சென்ற 440 ஸ்பார்டான்களில் உயிரிழந்தவர்கள் போக எஞ்சிய, 292 பேர் சரணடைந்து உயிர் தப்பினர்; இவர்களில் 120 பேர் உயரடுக்கு எசுபார்டியேட் வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

"இதன் விளைவு கிரேக்க உலகையே உலுக்கியது" என்று டொனால்ட் ககன் குறிப்பிட்டார். [12] அதுவரை எசுபார்டியேட்கள், ஒருபோதும் சரணடைய மாட்டார்கள் என்று கருதப்பட்டது. இப்போது, எசுபார்த்தன் பணயக்கைதிகள் தங்கள் கைகளில் இருப்பதால், ஏதெனியர்கள் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டனர்; இனி எசுபார்த்தன்கள் அட்டிகா மீதான எந்தவொரு படையெடுப்பை நிகழ்த்தினாலும் தாங்களிடம் சரண்டைந்த கைதிகளை தூக்கிலிடவேண்டி இருக்கும் என்றனர். போர் துவங்கியதிலிருந்து அதன்பிறகுதான் முதல் முறையாக, ஏதென்ஸ் மக்கள் தங்கள் பயிர்களை போரில் நாசமாகாமல் பாதுகாப்பாக பயிரிட முடிந்தது. பைலோஸ் துறைமுகத்தை, நன்கு அரண் செய்து அங்கு மெசேனியர்களைக் கொண்ட ஒரு காவற் படையை நிறுவியது ஏதென்சு. இந்த வீரர்கள் எசுபார்த்தன்களின் பகுதிகள் மீது அவ்வப்போது தாக்குதலை நடத்தி குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தி, ஏராளமான ஹெலட்களை தங்கள் பகுதியை விட்டு வெளியேறுமாறு செய்தனர். ஏதென்சில், கிளியோன், அவரது பைத்தியக்காரத்தனமான ஜனரஞ்சக வாக்குறுதியை நிறைவேற்றத்தொடங்கினார். அதனால் பேரரசானது தனக்கு கீழ்பட்ட நாடுகளிடம் அதிகமான கப்பத்தை விதித்து வசூலித்தது. [13] ஸ்பேக்டீரியா போரின் வெற்றியானது போரின் தன்மையை மாற்றியது. அடுத்த சில ஆண்டுகள் புதித்துணர்ச்சிமிக்க ஆக்ரோசமான ஏதென்சைக் காணும்படியானது.

கிமு 418 இல் மாண்டினியா சமரில் வெற்றி பெற்றதன் மூலம் தான் எசுபார்த்தா "கோழைத்தனத்துக்காகவோ, தீவில் ஏற்பட்ட பேரழிவு காரணமாகவோ, அல்லது திறமையின்மைக்காகவோ, எலினியர்களால் தங்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட அனைத்து நிந்தைகளையும் நீங்கியது" என்கிறார் துசிடிடீஸ். [14]

குறிப்புகள்[தொகு]

  1. Thucydides "History of the Peloponnesian War", Penguin Books, (c) 1954, p289
  2. Thucydides, The Peloponnesian War 4.16
  3. For all details of events immediately after the end of the truce, see Thucydides, The Peloponnesian War 4.23.
  4. Unless otherwise noted, all details of the siege are drawn from Thucydides, The Peloponnesian War 4.26.
  5. Thucydides, The Peloponnesian War 4.27
  6. Unless otherwise noted, all details of the debate at Athens and its results are drawn from Thucydides, The Peloponnesian War 4.27-29.
  7. Kagan, The Peloponnesian War, 149-150
  8. Kagan, The Peloponnesian War, 148
  9. Unless otherwise noted, all details of the battle are drawn from Thucydides, The Peloponnesian War 4.29-36.
  10. Kagan, The Peloponnesian War, 151
  11. Unless otherwise noted, all details of the surrender and aftermath are drawn from Thucydides, The Peloponnesian War 4.37-41.
  12. Kagan, The Peloponnesian War, 152
  13. Kagan, The Peloponnesian War, 152-3
  14. Thucydides (1954). History of the Peloponnesian war. Penguin classics. பக். 395. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780140440393. 


வெளிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ப்பாக்ட்டீரியா_சமர்&oldid=3504666" இலிருந்து மீள்விக்கப்பட்டது