உள்ளடக்கத்துக்குச் செல்

பாமாசா விளையாட்டரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாமாசா விளையாட்டரங்கம்
Bhamashah Stadium
அமைவிடம்மீரட், உத்தரப் பிரதேசம்
உருவாக்கம்2003
இருக்கைகள்4,500
உரிமையாளர்மீரட் மாவட்ட துடுப்பாட்ட சங்கம்
இயக்குநர்உத்தரப்பிரதேச துடுப்பாட்ட சங்கம்
குத்தகையாளர்உத்தரப்பிரதேச துடுப்பாட்ட அணி
மூலம்: Cricinfo

பாமாசா விளையாட்டரங்கம் (Bhamashah Stadium) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மீரட் நகரில் அமைந்துள்ள துடுப்பாட்ட விளையாட்டரங்கமாகும். 2003 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச துடுப்பாட்ட அணி பஞ்சாப் துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடிய போது போட்டி சமநிலையில் முடிவடைந்தது.[1] [2] அப்போது முதல் நவம்பர் 2013 வரை உத்தரப் பிரதேச துடுப்பாட்ட அணிக்காக ஐந்து போட்டிகள் இங்கு நடைபெற்றுள்ளன. கருநாடகா துடுப்பாட்ட அணிக்கும் சொந்த அணியான உத்தரப்பிரதேச துடுப்பாட்ட அணிக்கும் இடையேயான போட்டியில் மனீசு பாண்டே 194 ஓட்டங்கள் எடுத்தார்.[3] உள்நாட்டு துடுப்பாட்ட அரங்கமான இந்த விளையாட்டரங்கம் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பிரவீன் குமார் மற்றும் புவனேசுவர் குமார் ஆகியோருக்கு சொந்த மண்ணில் உள்ள விளையாட்டரங்கமாகத் திகழ்கிறது.[4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. First-class Matches
  2. Scorecard
  3. Uttar Pradesh v Karnataka
  4. "Praveen, Bhuvneshwar and Meerut's ascent". Archived from the original on 23 August 2015. பார்க்கப்பட்ட நாள் 27 August 2015.
  5. A role model to the core!

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாமாசா_விளையாட்டரங்கம்&oldid=3813460" இலிருந்து மீள்விக்கப்பட்டது