மும்மெத்தில் புரோப்பேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மும்மெத்தில் புரோப்பேன்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-எத்தில்-2-(ஐதரோமெத்தில்)புரோப்பேன்-1,3-டையால்
வேறு பெயர்கள்
முமெபு, 2-எத்தில்-2-ஐதராக்சிமெத்தில்-1,3-புரோப்பேன்டையால்
இனங்காட்டிகள்
77-99-6 Y
ChemSpider 6264 Y
EC number 201-074-9
InChI
  • InChI=1S/C6H14O3/c1-2-6(3-7,4-8)5-9/h7-9H,2-5H2,1H3 N
    Key: ZJCCRDAZUWHFQH-UHFFFAOYSA-N N
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த C018163
பப்கெம் 6510
  • CCC(CO)(CO)CO
UNII 090GDF4HBD Y
பண்புகள்
C6H14O3
வாய்ப்பாட்டு எடை 134.17 கி/மோல்
தோற்றம் வெண் திண்மம்
மணம் இலேசான நெடி
அடர்த்தி 1.084 கி/மி.லி
உருகுநிலை 58 °C (136 °F; 331 K)
கொதிநிலை 289 °C (552 °F; 562 K)
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 172 °C (342 °F; 445 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

மும்மெத்தில் புரோப்பேன் (Trimethylolpropane) CH3CH2C(CH2OH)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். நிறமற்றது முதல் வெண்மையானது வரையிலான நிறத்தைக் கொண்டிருக்கும் இதில் மூன்று ஐதராக்சில் வேதி வினைக்குழுக்கள் இடம்பெற்றுள்ளன. பரவலாக பலபடித் தொழிற்சாலைகளில் கட்டுறுப்புத் தொகுதியாக மும்மெத்தில் புரோப்பேன் பயன்படுத்தப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

மும்மெத்தில் புரோப்பேன் இரண்டு படிநிலை வினைகளின் வழியாகத் தயாரிக்கப்படுகிறது. பியூட்டனாலுடன் பார்மால்டிகைடைச் சேர்த்து வினையில் ஈடுபடுத்தி ஒடுக்க வினைக்கு உட்படுத்துவது முதல் படிநிலையாகும்:

CH3CH2CH2CHO + 2 CH2O → CH3CH2C(CH2OH)2CHO

கன்னிசாரோ வினை இரண்டாவது படிநிலையாகும்:

CH3CH2C(CH2OH)2CHO + CH2O + NaOH → CH3CH2C(CH2OH)3 + NaO2CH

தோராயமாக ஓர் ஆண்டுக்கு 200,000,000 கிலோகிராம் மும்மெத்தில் புரோப்பேன் இம்முறையில் தயாரிக்கப்படுகிறது.[1]

பயன்பாடுகள்[தொகு]

முக்கியமாக அல்கைடு வகை பிசின்கள் தயாரிப்பில் மும்மெத்தில் புரோப்பேன் ஒரு முன்னோடி சேர்மமாகப் பயன்படுத்தப்படுகிறது. இல்லையெனில், அக்ரைலேற்றப்பட்டும் அல்காக்சிலேற்றம் செய்யப்பட்டும் பல்வேறு பூச்சுகளை உருவாக்க உதவும் பல்வினை ஒருமங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.மும்மெத்தில் புரோப்பேனின் எப்பாக்சைடு வழிப்பெறுதிகள் நெகிழ் பாலியுரித்தேன்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன. அல்லைல் ஈத்தர் வழிப்பெறுதிகள் அயனிப் பரிமாற்ற பிசின்கள் தயாரிப்புக்கான முன்னோடிகளாகும். மும்மெத்தில் புரோப்பேன் ஆக்சிடேன் ஒளித்தூண்டல் பலபடியாக்கல் வினைகளுக்கான தொடக்க வேதிப்பொருளாக செயல்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Peter Werle, Marcus Morawietz, Stefan Lundmark, Kent Sörensen, Esko Karvinen, Juha Lehtonen “Alcohols, Polyhydric” in Ullmann’s Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2008.