சேகர் கொய்ராலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Dr. சேகர் கொய்ராலா
Shekhar Koirala
डा. शेखर कोईराला
நேபாள அரசியலமைப்பு நிர்ணய மன்றம் உறுப்பினர், மொரங் மாவட்டம் தொகுதி எண் 7
பதவியில் உள்ளார்
பதவியில்
2013
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஆகத்து 25, 1950 (1950-08-25) (அகவை 73)
பிரத்நகர், மொரங் மாவட்டம்
அரசியல் கட்சிநேபாளி காங்கிரஸ்
துணைவர்பூனம் கொய்ராலா
பெற்றோர்s
  • கேசவ் பிரசாத் கொய்ராலா (father)
  • நோனா கொய்ராலா (mother)
முன்னாள் கல்லூரிமகேந்திர மொராங்கு வளாகம்
இணையத்தளம்shekharkoirala.com

சேகர் கொய்ராலா (Shekhar Koirala) நேபாளி காங்கிரசு அரசியல்வாதியும் 2 ஆவது நேபாள அரசியலமைப்பு சபையின் உறுப்பினரும் ஆவார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

மொரங்கு மாவட்டத் தொகுதி எண் 6 ஐப் சேகர் கொய்ராலா பிரதிநிதித்துவப்படுத்தினார். அரசியல் நகரமான பிரத்நகரின் மேற்குப் பகுதியைக் கொண்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு நேபாள அரசியல் நிர்ணய சபை தேர்தலில் இப்பகுதியிலிருந்து சேகர் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] முன்னதாக இவர், தன்னாட்சி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகமான பி.பி. கொய்ராலா சுகாதார அறிவியல் நிறுவனத்தில் துணைவேந்தராக பணியாற்றினார். [2] நேபாளி காங்கிரசு மத்திய செயற்குழு உறுப்பினர் பதவிக்கு அதிக வாக்குகளைப் பெற்றவர் என்ற சிறப்பும் சேகருக்கு உண்டு. [3]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

மருத்துவர் கொய்ராலா கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்குப் பிறகு நோர்விக் சர்வதேச மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். [4] இவரது மாமா பிபி கொய்ராலா கைது செய்யப்பட்டபோது, நேபாளத்தில் தீவிர அரசியலுக்கு திரும்புமாறு இந்திய பிரதமர் மொரார்சி தேசாய் இவருக்கு கடிதம் அனுப்பினார். [1]

பிறப்பு மற்றும் குடும்பம்[தொகு]

கொய்ராலா குடும்பத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளான தந்தை கேசவ் பிரசாத் கொய்ராலா மற்றும் தாய் நோனா கொய்ராலா ஆகியோருக்கு 1950 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 25 அன்று சேகர் கொய்ராலா பிறந்தார். [1]

மருத்துவத் தொழில்[தொகு]

தொழிலில் இவர் ஒரு மருத்துவர். பிர் மருத்துவமனை, பி.பி. கொய்ராலா சுகாதார அறிவியல் நிறுவனம் மற்றும் கோசி மண்டல மருத்துவமனை ஆகியவற்றில் சேகர் கொய்ராலா பணியாற்றியுள்ளார். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Dr. Shekhar Koirala". election.ujyaaloonline.com. Archived from the original on 2017-06-05. பார்க்கப்பட்ட நாள் 2017-06-11.
  2. "ampnews/2014-09-17/bpkihs-registrar-appeals-to-end-strike". kathmandupost.ekantipur.com. பார்க்கப்பட்ட நாள் 2017-06-11.
  3. "Shekhar Koirala maintains lead in NC CWC vote count". thehimalayantimes.com. March 12, 2016. பார்க்கப்பட்ட நாள் 2017-06-11.
  4. "Access Denied – Sucuri Website Firewall". thehimalayantimes.com. பார்க்கப்பட்ட நாள் 2017-06-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேகர்_கொய்ராலா&oldid=3584561" இலிருந்து மீள்விக்கப்பட்டது