வாத்வான் இராச்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாத்வான் இராச்சியம்
વઢવાણ રિયાસત
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா
1630–1948 [[சௌராஷ்டிர மாநிலம்|]]
கொடி சின்னம்
கொடி சின்னம்
Location of Wadhwan
Location of Wadhwan
இந்தியாவின் சௌராஷ்டிரா தீபகற்பத்தில் வாத்வான் இராச்சியத்தின் அமைவிடம்
தலைநகரம் வாத்வான்
வரலாறு
 •  நிறுவப்பட்டது 1630
 •  சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி இந்தியாவுடன் இணைதல் 1948
பரப்பு
 •  1931 627 km2 (242 sq mi)
Population
 •  1931 42,602 
மக்கள்தொகை அடர்த்தி Expression error: Unrecognized punctuation character ",". /km2  (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi)

வாத்வான் இராச்சியம் (Wadhwan state), இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவில் இருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால குஜராத் மாநிலத்தின் சௌராட்டிரா தீபகற்பத்தில் சுரேந்திரநகர் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1931-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மோர்வி இராச்சியம் 627 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 42,602 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இதன் தலைநகரம் வாத்வான் (சுரேந்திரநகர்) ஆகும்.[1]

வரலாறு[தொகு]

வாத்வான் இராச்சியம் 1681-ஆம் ஆண்டில் பகத்சிங் உதய்சிங்ஜி நிறுவினார். 1807-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற வாத்வான் இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக விளங்கினர். இது பம்பாய் மாகாணத்தின் கத்தியவார் முகமையின் கீழ் இருந்தது. 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி மோர்வி இராச்சியம் 1948-ஆம் ஆண்டு முதல் 1956-ஆம் ஆண்டு முடிய சௌராஷ்டிர மாநிலத்துடன் இணக்கப்பட்டது. மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, மோர்வி இராச்சியம் 1956-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட குஜராத் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.

ஆட்சியாளர்கள்[தொகு]

வாத்வான் ஆட்சியாளர்கலை தாக்கூர் சாகிப் என்பர்.[2]

  • 1681 – 1707 பகத்சிங் உதய்சிங்
  • 1707 – 1739 அர்ஜுன் சிங் மாதவ சிங் (இ. 1739)
  • 1739 – 1765 சபல் சிங் இரண்டாம் அர்ஜுன் சிங் (இ. 1765)
  • 1765 – 1778 சந்திர சிங் சபல் சிங் (இ. 1778)
  • 1778 – 1807 பிரிதிராஜ் சந்திர சிங்(இ. 1807)
  • 1807 – 1827 ஜலம் சிங் பிரிதிராஜ் சிங் (இ. 1827)
  • 1827 – 1875 ராய் சிங் ஜலம் சிங் (இ. 1875)
  • 1875 – 5 மே 1885 தாஜிராஜ் சந்திர சிங் (பி. 1861 – இ. 1885)
  • 20 மே 1885 – 25 மே 1910 பால்ச் சிங் சந்திர சிங் (பி. 1863 – இ. 1910)
  • 25 மே 1910 – 22 பிப்ரவரி 1918 ஜஸ்வந்த் சிங் பெச்சர் சிங் (இ. 1918)
  • 22 பிப்ரவரி 1918 – 1934 ஜோர்வர் சிங் ஜஸ்வந்த் சிங் (பி. 1899 – இ. 1934)
  • 1934 – 15 ஆகஸ்டு 1947 சுரேந்திர சி ஜோர்வார் சிங் (பி. 1922 – இ. 1983)

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Princely States of India
  2. "Indian Princely States K-Z". www.worldstatesmen.org. பார்க்கப்பட்ட நாள் 15 August 2019.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாத்வான்_இராச்சியம்&oldid=3368972" இலிருந்து மீள்விக்கப்பட்டது