ஆய்கன் கூல்ட்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆய்கன் யூலியசு தியோடர் கூல்ட்சு
Eugen Julius Theodor Hultzsch
பிறப்பு(1857-03-29)29 மார்ச்சு 1857
திரெசுடன், சாக்சனி இராச்சியம்
இறப்பு16 சனவரி 1927(1927-01-16) (அகவை 69)
பணிஇந்தியவியல், வியாகரணம், கல்வெட்டியல்

ஆய்கன் யூலியசு தியோடர் கூல்ட்சு (Eugen Julius Theodor Hultzsch; 29 மார்ச் 1857 – 16 சனவரி 1927) என்பவர் ஒரு செருமானிய இந்தியவியலாளர் ஆவார். 1886 ஆம் ஆண்டில் இந்தியத் தொல்லியல் துறையில் கல்வெட்டியல் பிரிவு உருவாக்கப்பட்டபோது இவர் அங்கே பணியில் அமர்ந்தார். பின்னர், அரச கல்வெட்டியலாளர் ஆன இவர் 1903 ஆம் ஆண்டு வரை அப்பதவியில் இருந்தார். அக்காலத்தில் தென்னிந்தியக் கோயில்களில் இருந்த பெருமளவிலான கல்வெட்டுக்களைப் படியெடுத்ததுடன், அவற்றை தென்னிந்திய கல்வெட்டியல் ஆண்டு அறிக்கையிலும் அவற்றை வெளியிட்டார். தென்னிந்தியக் கல்வெட்டியல் தொகுதியை முதலில் வெளியிட்டவரும் இவரே. "எப்பிகிரபியா இண்டிக்கா" (Epigraphia Indica) என்னும் வெளியீட்டின் மூன்றாம், எட்டாம் தொகுதிகளினதும் ஒன்பதாம் தொகுதியின் ஒரு பகுதியினதுக்கும் தொகுப்பாசிரியராகச் செயல்பட்டார். "கார்ப்பசு இன்சுக்கிரிப்சனம் இண்டிகாரம்" (Corpus Inscriptionum Indicarum) என்னும் தொகுப்பின் முதலாவது தொகுதியைத் திருத்தி வெளியிட்டமை இவரது முக்கியமான பங்களிப்பு எனலாம். இந்தக் "கார்ப்பசு இன்சுக்கிரிப்சனம் இண்டிகாரம்" தொகுதி-1 இல் பேரரசர் அசோகரின் கல்வெட்டுகள் அடங்கி உள்ளன

மேற்கோள்கள்[தொகு]

  • "Prominent Epigraphists of Sanskrit and Dravidian". இந்தியத் தொல்லியல் ஆய்வகம்.
  • The Indian Biographical Dictionary (1915)
  • Hultzsch's 1925 edition of the Inscriptions of Aśoka at archive.org
  • Janert, Klaus Ludwig (1974), "Hultzsch, Eugen" in: Neue Deutsche Biographie 10, p. 31 f.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆய்கன்_கூல்ட்சு&oldid=3267978" இலிருந்து மீள்விக்கப்பட்டது