ஓமன குஞ்சம்மா
Appearance
ஓமன குஞ்சம்மா (Omana Kunjamma) இந்தியாவின் முதல் பெண் குற்றவியல் நீதிபதியாவார். [1] திருவாங்கூரின் ஒரு பகுதியாக இருந்த நாகர்கோவில் பகுதியிலுள்ள திக்குறிச்சி கிராமத்தில் ஒரு பிரபுத்துவ மலையாளி நாயர் குடும்பத்தில் மாங்கட் சி. கோவிந்த பிள்ளை மற்றும் என். லட்சுமி அம்மா தம்பதியருக்கு மகளாக ஒமன குஞ்சம்மா பிறந்தார். தற்போது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் நகரத்தில் நாஞ்சில் நாடு என்ற பெயரில் இப்பகுதி அறியப்படுகிறது.
மலையாள நடிகர் திக்குரிசி சுகுமாரன் நாயரின் மூத்த சகோதரியாகவும் குஞ்சம்மா அறியப்படுகிறார். கேரளாவைச் சேர்ந்த முதல் பெண் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி என்ற சிறப்பும் ஒமன குஞ்சம்மாவுக்கு இருக்கிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Samyukta: A Journal of Women's Studies, Volume 3, Issue 1 p. 40 Google Books
- ↑ "Former District Collectors" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-14.