ஜின்னோர்கர்
ஜின்னோர்கர் (Ginnorgarh) அல்லது ஜின்னர்கர் ( இந்தி गिन्नोर्गढ़) என்பது மத்திய பிரதேசத்தின் செஹோர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோட்டையாகும்.[1] 700 மீட்டர் உயரமுள்ளஒரு பாறையின் உச்சியில் ராத்தாபானி புலி காப்பகப் பகுதியில் அமைந்துள்ள ஜின்னோர்கரில் இரண்டு இயற்கை நீர்நிலைகளும் பல அரண்மனைகளும், நுழைவாயில்களும், கோட்டைகளின் எச்சங்களும் உள்ளன.
தற்போதைய கட்டமைப்புகளில் காணப்படும் சான்றுகளின்படி, ஜின்னோர்கர் பரமாரப் பேரரசின் பிற்பகுதியில் கட்டப்பட்டது. ஆனால் இந்த இடம் முதலில் கோண்டு ஆட்சியாளர்களின் கீழ் முக்கியத்துவம் பெற்றது. [2] அரண்மனையை சக்திவாய்ந்த கோண்டு போர்வீரரான நிஜாம் ஷா கட்டியிருக்கலாம். இந்தக் கட்டிடம் இந்தியாவிலுள்ள மற்ற அரண்மனைக் கட்டிடக்கலைகளைப் போலவே கட்டப்படுலுள்ள கர்பூஜா மகால் பாணிக்கு நெருக்கமாக உள்ளது. நிஜாம் ஷாவின் மருமகனால்,நஞ்சு வைத்து கொள்ளப்பட்ட பின்னர், அவரது விதவை இராணி கமலாபதியும் அவரது மகனும் கோட்டையில் தஞ்சம் புகுந்தனர். இராணி மாநிலத்தின் உண்மையான ஆட்சியாளரான தோஸ்த் முஹம்மது கானிடம் பாதுகாப்பு கோரினார். 1723இல் கமலாபதி இறந்தவுடன், அவரது மகன் நவால் ஷா கோட்டையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். தோஸ்த் முஹம்மது கான் பின்னர் போபாலில் இருந்து ஜின்னோர்கருக்கு சென்று கோட்டையை திருட்டுத்தனமாக கைப்பற்றவும் முடிந்தது.
ஜின்னோர்கரில் போபால் ஆட்சியாளர்களின் இருப்பு பற்றிய சான்று பிற்கால கட்டிடங்களின் நுழைவாயில்களில் ஒன்றில் 1725-26 தேதியிட்ட பாரசீக மொழியில் எழுதப் பட்ட ஒரு கல்வெட்டுகளில் உள்ளது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், கட்டிடங்கள் இடிந்து விழுவதாக தொல்லியலாளர் சி.இ. லுவார்ட் பதிவு செய்தார். [3] மத்திய பிரதேசத்தின் தொல்பொருள் மற்றும் அருங்காட்சியகத் துறையின் கீழ் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக இருந்தபோதிலும், கட்டமைப்புகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து அழிக்கப்பட்டன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://sehore.nic.in/en/tourism/
- ↑ https://velpu.com/poi/Fort/GINNORGARH-FORT/MTg5Ng==
- ↑ C. E. Luard, Gazetteer of the Bombay Presidency W. Western States (Malwa) Gazetteer (Bombay, 1908).