ராத்தாபானி புலி காப்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காட்டுப்பகுதிக்குள் உள்ள சாலை
Ratapani wildlife sanctuary road sign board

ராத்தாபானி புலி காப்பகம், இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டத்தில் உள்ள விந்திய மலைத்தொடரில் அமைந்துள்ளது.[1] [2] மாநிலத் தலைநகரான போபாலில் இருந்து கிட்டத்தட்ட 50 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

1976ஆம் ஆண்டில் இந்த காட்டுப்பகுதியை காட்டுயிர் காப்பகமாக மத்திய அரசு அறிவித்தது. 2013ஆம் ஆண்டில், இதை புலி காப்பகமாக மாற்ற திட்டமிடப்பட்டது.[3]

இந்த காட்டுப்பகுதி 823.84 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த காட்டுப்பகுதியில் தேக்கு மரங்களை அதிகளவில் காண முடியும்.

இந்த காட்டுப்பகுதியில் பீம்பேட்கா பாறை வாழிடம் அமைந்துள்ளது. இந்தப்பகுதியை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது. இந்த காட்டுப்பகுதியில் ராத்தாபானி அருவி, கின்னோர்கட் கோட்டை, கேர்பானா கோயில் ஆகியவை உள்ளன.

காட்டு விலங்குகள்[தொகு]

இங்கு புலி, நாய், கழுதைப்புலி, ஓநாய், நரி, எருமை, குரங்கு, கரடி ஆகிய விலங்குகளைக் காண முடியும். அணில், முயல், பல்லி, பாம்பு உள்ளிட்டவற்றையும் காண முடியும். மரங்கொத்தி, கிளி, புறா, ஈபிடிப்பான் உள்ளிட்ட பறவைகளையும் காணலாம். இங்கு வெண்முதுகுக் கழுகு, சாரசு கொக்கு, மஞ்சள் மூக்கு நாரை உள்ளிட்ட அரிய வகை பறவைகளும் வாழ்கின்றன.[4]

சான்றுகள்[தொகு]