பதஞ்செரு

ஆள்கூறுகள்: 17°32′N 78°16′E / 17.53°N 78.27°E / 17.53; 78.27
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதஞ்செரு
ஐதராபாத்து
பதஞ்செரு is located in தெலங்காணா
பதஞ்செரு
பதஞ்செரு
தெலங்காணாவில் பதஞ்செருவின் அமைவிடம்
பதஞ்செரு is located in இந்தியா
பதஞ்செரு
பதஞ்செரு
பதஞ்செரு (இந்தியா)
ஆள்கூறுகள்: 17°32′N 78°16′E / 17.53°N 78.27°E / 17.53; 78.27
நாடு இந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்சங்காரெட்டி
நகரம்ஐதராபாத்து
அரசு
 • வகைபெருநகர ஐதராபாத்து மாநகராட்சி
ஏற்றம்522 m (1,713 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,50,000
இனங்கள்மொழிகள்
அஞ்சல் குறியீட்டு எண்502319
வாகனப் பதிவுடிஎஸ்-15
இணையதளம்telangana.gov.in

பதஞ்செரு (Patancheru) என்பது இந்திய மாநிலமான தெலங்காணாவின்ஐதராபாத்தின் வடமேற்கு முனையில் அமைந்துள்ள ஒரு தொழில்துறை மண்டலமாகும். இது ஐதராபாத்து-சோலாப்பூர் நெடுஞ்சாலையில் நகர மையத்திலிருந்து 32 கி.மீ தொலைவிலும், ஹைடெக் நகரத்திலிருந்து 18 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது 12 முதல் 15ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்ட பல கோயில்களைக் கொண்டுள்ளது. பதஞ்சேரு, அரை வறண்ட வெப்பமண்டலங்களுக்கான சர்வதேச பயிர் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமையிடமாகவும், பல மருந்து உற்பத்தி நிறுவனங்களின் தலைமையிடமாகவும் இருக்கிறது. இதன் விளைவாக உள்ளூர் ஆற்று நீர் கடந்த காலங்களிலிருந்து உலகிலேயே அதிக மருந்து மாசுபட்ட நீராக இருக்கிறது. [1]

சொற்பிறப்பியல்[தொகு]

இது, பதான் செரு என்றும் அழைக்கப்படுகிறது. செருவு என்றால் தெலுங்கு மொழியில் ஏரி எனப்பொருள் படும். இது போட்லா ஏரியிலிருந்து பெறப்பட்ட பெயராகும். இது நிசாம்களின் காலத்தில் உருவாக்கப்பட்டது. இதற்கு போட்லா செருவு என்ற பழைய பெயரும் உள்ளது.

மூன்றாம் சோமேசுவரரின் ஆட்சியின் போது இது பொட்டாலா கெரே என்றும் அழைக்கப்பட்டது [2]

நிலவியல்[தொகு]

பதஞ்சேரு 17.53 ° வடக்கிலும் 78.27 ° கிழக்கிலும் அமைந்துள்ளது. [3] கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 522 மீட்டர் (1712 அடி) உயரத்தில் பதஞ்செரு அமைந்துள்ளது. சாகி ஏரி பதஞ்செரு பேருந்து நிறுத்தத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது.

புள்ளிவிவரங்கள்[தொகு]

2001, இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்புப்படி, நகரத்தின் மக்கள் தொகை 40,332 என்ற அளவில் இருந்தது. இதில், ஆண்கள் 53% எனவும் பெண்கள் 47% எனவும் இருந்தனர். இதன் சராசரி கல்வியறிவு விகிதம் 65% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும். ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 57% இருக்கிறது . பதஞ்செருவின், மக்கள் தொகையில் 14% 6 வயதுக்குட்பட்டவர்கள்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "World's Highest Drug Pollution Levels Found In Indian Stream". http://www.huffingtonpost.com/2009/01/26/worlds-highest-drug-pollu_n_160867.html. 
  2. Andhra Pradesh Government archaeological series No. 3, Hd.1
  3. Falling Rain Genomics, Inc – Patancheru
  4. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதஞ்செரு&oldid=3145860" இலிருந்து மீள்விக்கப்பட்டது