இராய் சந்த் போரல்
இராய் சந்த் போரல் | |
---|---|
রাইচাঁদ বড়াল | |
2013இல் இந்திய அரசு வெளியிட்ட அஞ்சல் முத்திரையில் போரல் | |
தாய்மொழியில் பெயர் | রাইচাঁদ বড়াল |
பிறப்பு | இராய் சந்த் போரல் 19 அக்டோபர் 1903 பாகல்பூர், வங்காளம், பிரிதானைய இந்தியா |
இறப்பு | 25 நவம்பர் 1981 கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா | (அகவை 78)
தேசியம் | இந்தியன் |
பணி | இசையமைப்பாளர் |
இராய் சந்த் போரல் (Rai Chand Boral) (பிறப்பு: 1903 அக்டோபர் 19 - இறப்பு: 1981 நவம்பர் 25) இவர் ஓர் இந்திய இசையமைப்பாளர் ஆவார். இவர் இசை அறிவாளர்களால் பாலிவுட் திரைப்பட இசையின் பீஷ்ம பிதாமகர் என்று கருதப்படுகிறார். [1]
1978ஆம் ஆண்டில் இந்திய அரசு இந்தியத் திரைப்படத்துறையின் மிக உயர்ந்த விருதான தாதாசாகெப் பால்கே விருது இவருக்கு வழங்கப்பட்டது. அதே ஆண்டில், இந்திய நாடக அகாடமி, சங்க நாடக அகாடமி விருது, இந்தியாவின் தேசிய இசை, நடனம் மற்றும் நாடகம் அகாடாமியான சங்கீத நாடக அகாதமி விருது வழங்கி இவரை கௌரவித்தது.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பயிற்சி
[தொகு]போரல் கொல்கத்தாவில் பிறந்தார். இவரது தந்தை இலால் சந்த் போரல் ஒரு பரம்பரிய இசைக்கலைஞர் (துருபதம் என்ற இசையில் நிபுணர்) ஆவார். அவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். அதில் இராய் சந்த் இளையவர். இராம்பூர் மற்றும் குவாலியரைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள் இவருக்கு பயிற்சியளிக்க அழைக்கப்பட்டனர். இவர்களில் ராம்பூர்-சஹாஸ்வான் கரானாவின் உஸ்தாத் முஷ்டாக் உசேன் கான், மாசித் கான் (தப்லா வீரர்), உஸ்தாத் ஹபீஸ் அலிகான் (சரோத் வீரர்) ஆகியோர் அடங்குவர். ராய் சந்த் தபலாவில் "சாத் சங்கத்" என்ற பானியைக் கற்றுக் கொண்டார். லக்னோ, அலகாபாத் மற்றும் வாரணாசி போன்ற இடங்களில் நடந்த இசை மாநாடுகளிலும் கலந்து கொண்டார்.
தொழில்
[தொகு]இராய் சந்த் போரல் பெரும்பாலும் இந்திய திரைப்பட இசையின் முன்னோடியாக விளங்குகிறார். பங்கஜ் முல்லிக் உடன், நியூ தியேட்டர்களின் இசைத் துறையின் பொறுப்பாளராக இருந்தார். இவர்கள் ஆரம்ப நாட்களில் திரைப்பட இசையையும் வடிவமைத்தனர் . இந்தி திரைப்பட இசையில் முதல் 20-30 ஆண்டுகளாக அவற்றின் வடிவம் பின்பற்றப்பட்டது. சைகலின் வளரும் வாழ்க்கையை வடிவமைப்பதற்கும் இவர் பொறுப்பேற்றார். இசையமைப்பாளர் அனில் பிஸ்வாஸ் போரலை 'திரைப்பட இசையின் பீஷ்ம பிதாமகர்' என்று அழைத்தார்.
இவர் தனது 78 வயதில் 1981 இல் இறந்தார். பிரபல பின்னணி பாடகரும், மத்திய வெளியுறவு அமைச்சராக இருந்த பாபுல் சுப்ரியோ மறைந்த ஆர்.சி.போரலின் பேரன் ஆவார்.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Rai Chand Boral – Biography". imdb.com. பார்க்கப்பட்ட நாள் 23 October 2008.