பதியே தெய்வம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பதியே தெய்வம் 1957 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] 1955 ஆம் ஆண்டு வெளியான கன்யாதானம் என்ற தெலுங்குப்படத்தின் மொழிமாற்றுத் திரைப்படம் இதுவாகும். பி. விட்டலாச்சாரியா இயக்கத்தில் காந்தாராவ், சௌகார் ஜானகி, சுரபி பாலசரஸ்வதி, வஹீதா ரெஹ்மான், அப்பா துரைசாமி மற்றும் பலர் நடித்த இப்படத்துக்கான வசனங்களை எழுதியவர் கே. தேவநாராயணன்.

பாடல்கள்[தொகு]

இத் திரைப்படத்துக்கு இசையமைத்தவர் எம். ரங்காராவ். பாடல்களை இயற்றியவர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி. ஏ. எம். ராஜா பாடிய 'பெண்ணின் பெருமையே பெருமை', டி. ஏ. மோதி பாடிய 'இன்பம் பொங்குமே', ஜிக்கி பாடிய 'எல்லாம் மோசமடா' ஆகிய பாடல்கள் பிரபலமாகின.

மேற்கோள்கள்[தொகு]

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2020-01-18 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20200118131705/http://www.lakshmansruthi.com/cineprofiles/1957.asp. பார்த்த நாள்: 2022-04-05. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதியே_தெய்வம்&oldid=3796911" இலிருந்து மீள்விக்கப்பட்டது