உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர்க்கிமெடீசு திருகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கையால் இயக்கும் ஆர்க்கிமெடீசு திருகு நீரைத் திறம்பட மேலேற்றுதல்
ஆர்க்கிமெடீசு திருகு , வாக்சுயோவுக்குத் தெற்கில் உள்ள குசேபி, சுவீடன்
ஆர்க்கிமெடீசு திருகு
சுரங்க நீரை வெளியேற்றும் உரோமத் திருகு , எசுபானியம்
நெதர்லாந்து, கிந்தர் திய்க்கில் காற்றாலைகளுக்கு மாற்றாக அமைந்த தற்கால ஆர்க்கிமெடீசு திருகு
ஆர்க்கிமெடீசு திருகு ஓவியம், தோனி கிரேகு, 's-Hertogenbosch, நெதர்லாந்து


நீர்த் திருகு (water screw) அல்லது ஆர்க்கிமெடீசு திருகு (Archimedes' screw) அல்லது திருகு எக்கி அல்லது எகுபதியத் திருகு,[1] என்பது நீரைத் தாழ்வான நீர்நிலையில் இருந்து பாசனக் கால்வாய்க்கு ஏற்றும் ஓர் எந்திரம் ஆகும். குழாயின் உள்ளே அமைந்த திருகு வடிவ பரப்பைச் சுழற்றும்போது, நீர் மேலே ஏறுகிறது. ஆர்க்கிமெடீசு திருகு கூலங்களஈயும் தூள்நிலைப் பொருள்களையும் கூட மேலே ஏற்றவல்லது. இந்தத் திருகு பொதுவாக ஆர்க்கிமெடீசு பெயரில் வழங்கினாலும் அவர் காலத்துக்கு முன்பே இது பண்டைய எகிப்தில் பயன்பட்டு வந்துள்ளது.

வரலாறு

[தொகு]

திருகு எக்கி தான் மிகவும் பழைய நேர் இடப்பெயர்ச்சி எக்கியாகும்.[1] இந்த இயந்திரத்தைப் பற்றிய முதலாவது பதிவு பண்டைய எகிப்தின் 3 ஆம் நூற்றாண்டு முன்பே காணப்படுகிறது.[1][2] நைலாற்றில் இருந்து நீரை ஏற்ற பயன்பட்ட எகுபதியத் திருகு, ஓர் உருளையைச் சுற்றிலும் உட்புறமாக சுருள் வடிவ அலகு பொறுத்தப்பட்டு இருந்தது; இந்த முழு திருகு அணியும் சழலும்போதளெழுசுருள் அலகு ஊடாக நீர் மேலே உயர்மட்டத்துக்கு ஏற்றப்பட்டது. பிந்தைய வடிவமைப்பில் திண்மர உருளையின் வெளிப்புறத்தில் சுருள் வடிவ காடிகள் அமைத்து பிறகு அந்த மர உருளைப் பரப்புக் காடிகளுக்கு நெருக்கமாக மரப்பலகை அல்லது பொன்மத் தகடால் மூடப்பட்டது.[1]

பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான பாபிலோன் தொங்கு தோட்டப் பாசனத்துக்கு இந்தத் திருகு தான் பயன்பட்டதாக சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சென்னாசெறிபு எனும் அசீரிய அரசனின் கூம்பெழுத்துக் கல்வெட்டு (704–681 BC) அக்காலத்துக்கு முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே செம்பாலான நீர்த்திருகுகள் இருந்ததை விவரிப்பதாகக் சுட்டெப்பானி தாலே விளக்குகிறார்[3] பழஞ்செவ்வியல் எழுத்தாளர் சுட்டிராபோ பாபிலோன் தொங்கு தோட்டம் திருகுகளால் நீர் பாய்ச்சப்பட்டதாக கூறுவதோடு இது ஒத்துப் போகிறது.[4]

பிறகு திருகு எக்கி எகுபதியில் இருந்து கிரேக்கர்களுக்கு அறிமுகப் படுத்தப்படுகிறது.[1] இது கிமு 234 இல் ஆர்க்கிமெடீசால்,[5] அவர் எகுபதிக்குச் செறிருந்தபோது விவரிக்கப்பட்டது.[6] இது எலனியக் காலத்துக்கு முன்பு கிரேக்கர்கள் திருகு எக்கியை அறிந்திருக்கவில்லை என்பதைத் தெளிவாக்குகிறது.[5] ஆர்க்கிமெடீசு திருகு எக்கியை வடிவமைத்ததாக எங்குமே கோரவில்லை. ஆனால், இருநூறு ஆன்டுகளுக்குப் பிறகு தியோதோரசு தான் திருகு எக்கியை எகுபதியில் நிகழ்ந்த ஆர்க்கிமெடீசின் புனைவாகக் கூறுகிறார்.[1] கிரேக்க, உரோமானிய விவரிப்புகள் நீர்த்திருகுகள் கைவினை ஆற்றலால் வெளி உறையைச் சுழற்றி முழு அணியும் சுழற்றப்பட்டதாக கூறுவதால், திருகும் வெளி உறையும் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருக்க வேண்டுமென அறியமுடிகிறது.

செருமானியப் பொறியாளரான கோன்றாடு கியேசர் ஆர்க்கிமெடீசு திருகுக்கு ஒரு குறங்கு இயங்கமைவை தன் பெல்லிபோட்டிசு வடிவமைப்பில் இணைத்தார் (1405). இது திருகைச் சுழற்ற கையாற்றல் பயன்பாட்டை எந்திர ஆற்றல் பயன்பாட்டுக்கு மாற்றியது.[7]

வடிவமைப்பு

[தொகு]

வேறுவடிவங்கள்

[தொகு]
கூட்டு அறுவடை எந்திரம் பயன்படுத்தூம் ஆர்க்கிமெடீசு திருகு

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Stewart, Bobby Alton; Terry A. Howell (2003). Encyclopedia of water science. USA: CRC Press. p. 759. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8247-0948-9.
  2. "Screw". Encyclopædia Britannica online. The Encyclopaedia Britannica Co. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-03-24.
  3. Stephanie Dalley, The Mystery of the Hanging Garden of Babylon: an elusive World Wonder traced, (2013), OUP பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-966226-5
  4. Dalley, Stephanie; Oleson, John Peter (2003). "Sennacherib, Archimedes, and the Water Screw: The Context of Invention in the Ancient World". Technology and Culture 44 (1): 1–26. doi:10.1353/tech.2003.0011. https://muse.jhu.edu/article/40151/. 
  5. 5.0 5.1 Oleson 2000, ப. 242–251
  6. Haven, Kendall F. (2006). One hundred greatest science inventions of all time. USA: Libraries Unlimited. pp. 6–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-59158-264-4.
  7. White, Jr. 1962, ப. 105, 111, 168

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்க்கிமெடீசு_திருகு&oldid=2898940" இலிருந்து மீள்விக்கப்பட்டது