கூட்டு அறுவடை எந்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலேலி திறந்த அறை கூட்டு எந்திரம்.
ஒருங்கிணைந்த அறுவடை இயந்திரத்தின் ட்ரோன் வீடியோ 2022
Claas Lexion 570ஆறுவடை எந்திரத்தால் புல்லரிசியை அறுவடை செய்தல். (மூடிய காற்றுப்பதன அறை, சுழல் கதிரடிப்பான், வழிகாட்டுத்ல் உள்ள ஒருங்கொளி தன்னிக்கத் திசைதிருப்பி)யுடன்
"Sunshine" அறுவடை எந்திரம், கென்டி, ஆத்திரேலியா,வட்டாரம்
ஜான் தீரே கூட்டு எந்திரம் 9870 STS, 625D அமைப்புடன்

கூட்டு அறுவடை எந்திரம் (combine harvester), அல்லது எளிமையாக கூட்டெந்திரம் (combine)என்பது பலவகைக் கூலப்பயிர்களை அறுவடை செய்யும்படி வடிவமைத்த பொதுப்பயன் எந்திரமாகும். இது மூன்று அறுவடைச் செயல்முறைகளைக் கூட்டாக ஒருங்கே செய்கிறது. அவையாவன,கதிர் அறுத்தல், கதிரடித்தல், காற்றில் தூற்றுதல் என்பனவாகும்.

தற்காலக் கூட்டு அறுவடை எந்திரம் (combine harvester) என்பது பலவகைக் கூலக் கதிர்களைத் திறம்பட அறுவடை செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கதிர் அறுத்தல், கதிரடித்தல், தூற்றுதல் ஆகிய தனித்தனி பணிகளைக் கூட்டாக செய்வதால் இப்பெயர்பெற்றது. இந்த எந்திரம் கோதுமை, ஓட்சு, புல்லரிசி, பார்லி, சோளம், மக்காச் சோளம் , சோயா அவரை, ஆளி (ஆமணக்கு), சூரியகாந்தி சனோலா எனப் பலவகைகளையும் அறுவடை செய்ய வல்லதாக உள்ளது. பிரிக்கப்பட்ட தாள் அல்லது தட்டு வயலில் விடப்படுகிறது. இதில் மூட்டவளம் குறைந்த தண்டும் இலையும் (தாளும்) அமையும் : இது இறகு வெட்டி வயலில் பரப்பப்பட்டு உழப்படுகிறது அல்லது கட்டு கட்டகக் கட்டிக் கால்நடைகளுக்குத் தீவனமாகவும் பயன்படுத்தப்படுகிறது.

கூட்டு அறுவடை எந்திரம் உழைப்பை மிச்சப்படுத்தும் புதிய புதுமைபுனைவுகளில் ஒன்றாகும். இது வேளாண்மையில் ஈடுபடும் மக்கள் எண்ணிக்கையைக் கணிசமாக குறைக்கிறது.[1]

வரலாறு[தொகு]

இசுகாட்லாந்தில் 1826 இல், பாட்ரிக் பெல் எனும் புதுமைபுனைவாளர் ஓர் அறுவடை எந்திரத்தை வடிவமைத்தார். ஆனால், அவர் அதற்குக் காப்புரிமம் ஏதும் விண்னப்பித்துப் பெறவில்லை. இது கத்திரியால் அறுக்கும் கோட்பாட்டைப் பின்பற்றியது. இந்தக் கோட்பாடு இன்றும் நடைமுறையில் உள்ளது. பெல் எந்திரத்தைகுதிரைகள் ஓட்டின. இன்றும் அமெரிக்காவில் சில பெல் எந்திரங்கள் உள்ளன. ஐக்கிய அமெரிக்காவில்1835 இல், கிராம் மூர் என்பவர் முதல் கூட்டு அறுவடைஎந்திரத்தை வடிவமைத்துக் கப்புரிமமும் பெற்றார். இது கத்ர் அறுத்தல், கதிரடித்தல், தூற்றுதல் ஆகிய மூன்று பணிகளையும் கூட்டக செய்ய வல்லது . இவற்றின் முதல்வகைகள் குதிரை அல்லது கோவேறு கழுதை, எருதுகளால் ஒட்டப்பட்டுள்ளன.[2]

கேசு குழும அறுவடை எந்திரம், 20+ கோவேறு குழு
ஜான் தீரே 9870 STS வகை
கேசு குழும IH வகை அச்சுப் பாய்வு கூட்டெந்திரம்

ஐக்கிய அமெரிக்காவில் அன்றும் இன்றும் கூட்டெந்திரத் தயாரிப்பாளர்களாக ஆலிசு சல்மர்சு, மாசே ஆரிசு, பன்னாட்டு ஆர்வெசுட்டர் குழும்ம், கிளீனர் தாயாரிப்புக் குழுமம், ஜான் தீரே, மின்னியாபோலிசு மோலைன் ஆகிய குழுமங்களே அமைகின்றனர் ஆத்திரேலியரான தாமசு கரோல் 1937 இல் கனடாவின் மாசே ஆரிசு குழுமத்தில் பணிபுரிந்தபோது த்ந்செலுத்த எந்திரப் படிமம் ஒன்றை சீராக்கி 1940 இல் வெளியிட்டார். மிக எடைகுறைந்த இந்த எந்திரம் அக்குழுமதுக்காகப் பரவலாகச் சந்தைபடுத்தப்பட்டது.[3] Lyle Yost invented an auger that would lift grain out of a combine in 1947, making unloading grain much easier.[4] கிளயேசு 1952 இல் முதல் தந்செலுத்த கூட்டு அறுவடை எந்திரத்தை ஐரோப்பாவில் வெளியிட்டார்;[5] கிளாசு எனும் ஐரோப்பிஅக் குழுமம் 1953 இல் ஒரு தந்செலுத்தக் கூட்டு அறுவடை எந்திரத்தை உருவாக்கி, எர்க்குலிசு என்ற பெயரில் வெளியிட்டது. இது நாளொன்றுக்கு 5 டன் கோதுமையை அறுவடை செய்ய வல்லது.[6] இந்தப் புதுவகைக் கூட்டெந்திரங்கள் இன்றும் நடைம்முறையில் உள்ளன. இவை பெட்ரோல் அல்லது டீசலால் இயங்குகின்றன. இவை 1960 களில் தந்தூய்மிப்பு சுழல்திரை கண்டுபிடிக்கும் வரை கதிர்வீசிகளில் பதரடைத்துக் கொண்டுக் குளிர்த்தலைக் கட்டுபடுத்தியதால் மிகைச் சூடாக்கத்தால் தாக்கமுற்று வந்தன. .

கணிசமான கூட்டெந்திர முன்னேற்றமாக சுழல்வகை வடிவமைப்பு திகழ்ந்தது. இதில் எழுசுருள் சுற்றகம் வழியாக தாள் கடத்தப்படும்போது கூலமணிகள் பிரிந்தன. சு ழல்வகை கூட்டெந்திரங்கள் 1975 இல் புது ஆலந்து வேளாண் குழுமத்தால் அறிமுகப் படுத்தப்பட்டன.[7]

1980 களில் கதிரடிப்புத் திறமையை அளக்கும் மின்னனியல் கருவிகள் அறிமுகப் படுத்தப்பட்டன. இந்தப் புதிய கருவி நல்ல கூலமணி விளைச்சலைப் பெற வேகத்தையும் மற்ற அளபுருக்களையும் கட்டுபடுத்த வழிவகுத்தது.

கூல மேடை இணைந்த புதிய ஆலந்து TX68 எந்திரம்.
கூலதை இறக்கும் ஜான் தீரே தித்தன் வகைமை எந்திரம்.

மேற்கோள்கள்[தொகு]

குறிப்புகள்
நூல்தொகை

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Combine harvester
என்பதின் ஊடகங்கள் உள்ளன.