தாய்பெய் பெரிய பள்ளிவாசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரவில் தைபே பெரிய பள்ளிவாசல்

தாய்பெய் பெரிய பள்ளிவாசல் (சீனம்: 台北清真寺பின்யின்: Táiběi QīngzhēnsìPe̍h-ōe-jī: Tâi-pak Chheng-chin-sī) தாய்வானில் உள்ள பெரிய மற்றும் மிகவும் புகழ்பெற்ற பள்ளிவாசல் ஆகும். இதன் மொத்தப் பரப்பளவு 2,747 சதுர கிலோமீற்றர்கள்.[1] இது தாய்பெய் நகரின் தான் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது தாய்வான் நாட்டிலுள்ள கட்டிடங்களில், மிக முக்கிய இசுலாமியக் கட்டிடக் கலை எனக் கருதப்படுகிறது. இது வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாக, 1999 ஆம் ஆண்டு சூன் மாதம் 29 ஆம் நாள் அன்று தாய்பெய் நகர அரசினால் அறிவிக்கப்பட்டது.[2]

வரலாறு[தொகு]

முதலாவது கட்டிடம்[தொகு]

1945 ஆம் ஆண்டு தாய்வான் நிலப்பகுதியானது, யப்பானிய அரசிடமிருந்து, சீன அரசிடம் ஒப்படைக்கப்பட்டப் பிறகு, நாஞ்சிங்கின் சீன முசுலீம் சங்கமும், தாய்வானில் சீன முசுலிம் சங்கத்தின் கிளையை உருவாக்குவதற்கு முயற்சித்தனர். இதற்கான தயாரிப்புக் குழுவில், சாங் சிசுன் (常子春), வாங் யிங்சாய் (王靜齋), செங் ஊரன் (鄭厚仁) ஆகிய மூவரும், 1947 ஆம் ஆண்டு திசம்பர் 23 நாள் நிருவாகம் நியமித்தது.

பின்னர், தாய்வானுக்கு குடிபெயர்ந்த பல சீன முசுலிம்கள், தொழுவதற்கான சரியான இடம் இல்லாததால், அவர்கள் தாய்வானின் முதலாவது பள்ளிவாசலைக் கட்டுவதற்காக நிதி சேகரித்தனர். அவர்கள் எண். 2, ஒழுங்கை17, இலிசூ தெரு (麗水街) என்ற இடமுள்ள தாய்பெய் நகரத்தில் கட்ட முடிவெடுத்தனர். இந்த இடம் தான் மாவட்ட ஆட்சியின் கீழ் அமைந்து, மேற்படி முகவரியில் பள்ளிவாசலைக் கட்டினர். இதற்கான நிலம், சாங் சி-சுன், செங் ஊரன் என்ற இருவரால் நன்கொடையாக அளிக்கப்பட்டது.[3] சீன பெரு நிலப்பகுதியிலிருந்து வந்த முசுலிம்கள், இந்தப் பள்ளியில் 1948 ஆம் ஆண்டுஆகத்து மாதத்திலிருந்து தொழுவதற்குத் தொடங்கினர். KMT அரசில் சீன முசுலிம்களின் எண்ணிக்கை அதிகரித்தமையால், இப்பள்ளிவாசல் வளர்ந்து வரும் தொழுகையாளிகளின் எண்ணிக்கைக்கு போதுமானதாக இல்லை. எனவே, அவர்கள் பள்ளிவாசலைக் கட்டுவதற்காக புதிய இடம் தேட வேண்டிய சூழ்நிலை வந்தது.[2] இப்போது எண். 2, ஒழுங்கை 17, இலிசூ தெருவில் ஒரு அடுக்கக் கட்டிடம் உள்ளது.[4]

தற்போதைய கட்டிடம்[தொகு]

பாய் சோங்சி

சீன உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின், 1950 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், சீன தேசிய அரசு சீன பெருநிலப் பகுதியில் இருந்து, தாய்வான் இடம்பெயர்ந்தது. அதன் பிறகு, சீன முசுலிம் சங்கத்தின் தலைமை இயக்குநர் பாய் சோங்சி என்பவரும், சீனக்குடியரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜியோர்சு யே என்பவரும் இணைந்து, பெரிய இசுலாமிய பாணியிலான பள்ளிவாசலைக் கட்டுவதற்குப் பரிந்துரைத்தனர். அது புகழ் பெற்ற கட்டிடக் கலைஞரான, யாங் சோ-செங்கினால் வடிவமைக்கப்பட்டது. இவர் தாய்பெய் கிராண்ட் ஓட்டல், சங் கை செக் நினைவு மண்டபம், தாய்பெய் தேசிய நாடக, கலை அரங்கு போன்ற தாய்வானின் பல முக்கிய இடங்களைக் வடிவமைத்துள்ளார்.[5] தலைமை இயக்குநர் பாய் சோங்சி, சி சிசோகு (時子周), வாரியத்தின் தலைவரான சாங் சிசுவான் (常子萱) ஆகிய மூவரின் தலைமையில், காண்டினென்டல் பொறியியல் நிறுவனத்தால்,சின்சங் தெற்கு தெருவில் நன்கொடையாக வழங்கப்பட்ட நிலத்தில் பள்ளிவாசல் கட்டப்பட்டது. சீனக் குடியசின் துணைக் குடியரசுத் தலைவர், சென் சாங், 1960 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 நாளன்று, இப்பள்ளிவாசலைத் திறந்து வைத்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Taiwan Culture Portal - The history of the Taipei Grand Mosque". Culture.tw. 2010-04-23. பார்க்கப்பட்ட நாள் 2014-05-07.
  2. 2.0 2.1 2.2 "Taipei Mosque - 台灣大百科全書 Encyclopedia of Taiwan". Taiwanpedia.culture.tw. Archived from the original on 2013-12-03. பார்க்கப்பட்ட நாள் 2014-05-07.
  3. "清真寺 中文版.wmv". YouTube. 2012-01-17. பார்க்கப்பட்ட நாள் 2014-05-07.
  4. "Lìshuǐ St, Daan District, Taipei City, Taiwan - Google Maps". Maps.google.com. 1970-01-01. பார்க்கப்பட்ட நாள் 2014-05-07.
  5. "Taipei Grand Mosque". Department of Cultural Affairs.