வசந்தி ஸ்டான்லி
Appearance
வசந்தி ஸ்டான்லி | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
பதவியில் 2008-2014 | |
தொகுதி | தமிழ்நாடு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | தமிழ்நாடு, தேவக்கோட்டை | மே 8, 1962
இறப்பு | ஏப்ரல் 27, 2019 சென்னை | (அகவை 56)
அரசியல் கட்சி | திமுக |
துணைவர் | ஸ்டான்லி ராஜன் |
வாழிடம் | சென்னை |
As of மே 27, 2009 மூலம்: [1] |
வசந்தி ஸ்டான்லி (Vasanthi Stanley, 8 மே 1962 – 27 ஏப்ரல் 2019) என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி, எழுத்தாளர், பத்திரிக்கையாளர் ஆவார். இவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவை உறுப்பினராக 2008 முதல் 2014வரை பணியாற்றினார். இவர் உடல் நலக்குறைவின் காரணமாக தன் 56ஆவது வயதில் 2019 ஏப்ரல் 27 அன்று சென்னையில் உள்ள மருத்துவமனையில் காலமானார்.