சாட்டியக்குடி வேதநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாட்டியக்குடி வேதநாதர் கோயில் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில், ஒன்றாகும்.

அமைவிடம்[தொகு]

இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் கீவளூரிலிருந்து கச்சனம் வழியாக திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் உள்ளது.[1] இவ்வூர் மக்கள் வழக்கில் சாட்டியக்குடி என்றும் அழைக்கப்படுகிறது.[2]

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் வேதநாதர், வேதபுரீசுவரர், ரிக்வேதநாதர் என்றழைக்கப்படுகிறார். இறைவி வேதநாயகி ஆவார்.[3]

சிறப்பு[தொகு]

சாட்டிய (சாண்டில்ய) முனிவர் வழிபட்ட தலமென்றும் கூறப்படுகிறது. கோயிலின் திருச்சுற்றில் அவரது சிற்பம் உள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. வீ.ஜெயபால், திருவிசைப்பா திருப்பல்லாண்டு சிவத்தலங்கள், அருணகிரிநாதசுவாமிகள் அருளிச்செய்தி திருப்புகழ் பாடல் பெற்ற முருகன் திருத்தலங்கள், 108 வைணவ திவ்ய தேசங்கள், அம்மையப்பா பதிப்பகம், சைவ சித்தாந்த ஆய்வு மையம், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, மே 2016
  2. 2.0 2.1 திருச்சாட்டியக்குடி
  3. பு.மா. ஜெயசெந்தில்நாதன், திருமுறைத் தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009