கீழ்க்கோட்டூர் மணியம்பலநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கீழ்க்கோட்டூர் மணியம்பலநாதர் கோயில் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.

அமைவிடம்[தொகு]

இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி வட்டத்தில் திருத்துறைப்பூண்டிக்கு வடமேற்கில் 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. [1] கோட்டூர் மேலக்கோட்டூர், கீழக்கோட்டூர் என்றுள்ளது. மேலக்கோட்டூர் திருமுறை பாடல் பெற்றது. கீழ்க்கோட்டூர்தான் திருவிசைப்பா பாடல் பெற்றது. [2]

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் மணியம்பலநாதர், இறைவி மணியம்பலநாயகி. [3]

வழிபட்டோர்[தொகு]

இத்தலத்தில் பிரமனும், ஐராவதமும் வழிபட்டனர் என்பது தொன்நம்பிக்கை.

அருகில் உள்ள கோயில்[தொகு]

இக்கோயிலுக்கு அருகில் மேலக்கோட்டூரில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றான கோட்டூர் கொழுந்தீசுவரர் கோயில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. வீ.ஜெயபால், திருவிசைப்பா திருப்பல்லாண்டு சிவத்தலங்கள், அருணகிரிநாதசுவாமிகள் அருளிச்செய்தி திருப்புகழ் பாடல் பெற்ற முருகன் திருத்தலங்கள், 108 வைணவ திவ்ய தேசங்கள், அம்மையப்பா பதிப்பகம், சைவ சித்தாந்த ஆய்வு மையம், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, மே 2016
  2. கீழ்க்கோட்டூர் மணியம்பலம்
  3. பு.மா. ஜெயசெந்தில்நாதன், திருமுறைத் தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009