உள்ளடக்கத்துக்குச் செல்

ஜூலி பெயெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேதகு, மாண்புமிகு
ஜூலி பெயெட்
Julie Payette in Ottawa in 2017
29 ஆவது கனடாவின் கவர்னல் ஜெனரல்
பதவியில் உள்ளார்
பதவியில்
அக்டோபர் 2, 2017
ஆட்சியாளர்ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
பிரதமர்ஜஸ்டின் துரூடோ
முன்னையவர்திராவிட் ஜான்ஸ்டன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅக்டோபர் 20, 1963 (1963-10-20) (அகவை 61)
மொண்ட்ரியால், கியூபெக், கனடா
துணைவர்(கள்)பிராங்கோயில்ஸ் பிரிஸெட்(திருமண முறிவு 1999)
வில்லியம் பிலின் (திருமண முறிவு.2015)
பிள்ளைகள்1 மகன் (aged 21)[1]
வாழிடம்ரெடோ ஹால்
கல்விமக்கில் பல்கலைக்கழகம் (BEng)
ரொறன்ரோ பல்கலைக்கழகம் (MASc)
ஜூலி பெயெட்
கனடிய விண்வெளி மையம்
விண்வெளிவீரர்
விண்வெளி நேரம்
25 நாட்கள் 11 மணிகள் 57 நிமிடங்கள்
தெரிவு1992 கனடிய விண்வெளிக் குழு
பயணங்கள்STS-96, STS-127
திட்டச் சின்னம்

ஜூலி பெயெட் (Julie Payette, பிறப்பு: அக்டோபர் 20, 1963) தற்போதைய கனடாவின் கவர்னர் ஜெனரலாவார். இவர் கனடியன் கூட்டமைப்பின் 29 வது ஆளுநர் ஜெனரல் ஆவார்.[2][3][4] சூலை 13, 2017 அன்று, பிரதம மந்திரி ஜஸ்டின் துரூடோ, இராணி ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் கனடாவின் அடுத்த கவர்னர் ஜெனரலாக பெயெட்டை நியமித்துள்ளதாக அறிவித்தார்.[2][3][5] 2017, அக்டோபர் 2 ஆம் நாள் பெயெட் கனடாவின் ஆளுநராகப் பதவியேற்றார்.[6] ஜூலி பெயெட், இப்பதவி வகிக்கும் நான்காவது பெண் மற்றும் ஆறாவது பிரெஞ்சு மொழிபேசும் பிராங்கோபோன் ஆவார்.

பெயெட் ஒரு பொறியியலாளரும், வணிகரும், கனடிய வின்வெளி வீரரும் கனடிய வின்வெளி நிறுவனத்தின் முன்னாள் உறுப்பினராகவும் உள்ளார். எஸ்.டி.எஸ் -96 மற்றும் எஸ்.டி.எஸ்-127 ஆகிய இரண்டு விண்வெளி விமானங்களிலும் பெயெட் 25 நாட்களுக்கு மேலாக தங்கியிருந்துள்ளார். அவர் கனடிய விண்வெளி நிறுவனத்தின் (CSA) தலைமை விண்வெளி வீரராக பணியாற்றியுள்ளார், மேலும் ஹூஸ்டனில் உள்ள நாசாவின் குழுக் கட்டுப்பாட்டு மையத்தில் விமானக் கட்டுப்பாட்டாளராகவும் பணியாற்றியுள்ளார்.

2013, ஜூலை மாதம் மொண்ட்ரியால் அறிவியல் மையத்திற்கு தலைமை நிர்வாக அதிகாரியாக பெயெட் நியமிக்கப்பட்டார்.ஏப்ரல் 2014 இல், அவர் கனடா தேசிய வங்கியின் இயக்குநர்கள் குழுவில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.[7]

கல்வியும் தொடக்க காலப் பணிகளும்

[தொகு]

1963 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி , கியூபெக்கில் உள்ள மொண்ட்ரியால் எனுமிடத்தில் பெயெட் பிறந்தார்.[8] அன்குன்சிக், மவுண்ட்-செயிண்ட்-லூயிஸ் கல்லூரியிலும், ரெஜினா அசூம்ப்டா கல்லூரியிலும் தனது உயர்கல்வியைப் பெற்றார்.[9][10] 1982 ஆம் ஆண்டில் அவர் பிரித்தானியாவின் சவுத் வேல்சில் உள்ள அட்லாண்டிக் கல்லூரியில் சர்வதேச இளங்கலைப் பட்டயப் படிப்பை முடித்தார்.[11]

தனது இளங்கலைக் கல்விக்காக மக்கில் பல்கலைக் கழகத்தில் பெயெட் சேர்ந்தார். அங்கு 1986 ஆம் ஆண்டில் அவர் மின்னணுப் பொறியியலில் இளங்கலைப் பொறியியல் பட்டம்பெற்றார். 1990 ஆம் ஆண்டு டொராண்டோ பல்கலைக்கழகத்தில் கணினி பொறியியல் துறையில் பயன்பாட்டு அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். அவரது ஆய்வானது, மொழியியல் நுண்ணறிவு, செயற்கை நுண்ணறிவு ஆகிய துறையில் கவனம் செலுத்தியது.[9][12][13] அவர் 55,000 உறுப்பினர்கள் கொண்ட கியூபெக் பொறியாளர் அமைப்பின் உறுப்பினராக உள்ளார் [14]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Rakobowchuk, Peter (June 13, 2009). "Astronaut's family has nerves of steel". The Globe and Mail. https://www.theglobeandmail.com/news/national/astronauts-family-has-nerves-of-steel/article4212186/. பார்த்த நாள்: December 30, 2017. 
  2. 2.0 2.1 "Governor General: Ms. Julie Payette, Governor General". Governor General of Canada. July 13, 2017.
  3. 3.0 3.1 "Former astronaut Julie Payette to be Canada's next governor general". CBC News. July 12, 2017.
  4. "Julie Payette: Meet Canada's next governor general". July 13, 2017. http://globalnews.ca/news/3595524/julie-payette-meet-canadas-new-governor-general/. 
  5. "Prime Minister Trudeau announces The Queen's approval of Canada's next Governor General". Government of Canada. July 13, 2017. Archived from the original on ஜூலை 13, 2017. பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 24, 2019. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  6. "Julie Payette becomes Canada's 29th Governor General". October 2, 2017. https://www.thestar.com/news/canada/2017/10/02/julie-payette-to-be-installed-as-canadas-29th-governor-general.html. 
  7. National Bank of Canada (May 23, 2014). "Appointment Notice Julie Payette". The Globe and Mail. https://www.theglobeandmail.com/partners/advappointmentnotices/julie-payette/article18799222. 
  8. "Biography of Julie Payette". Canadian Space Agency. September 10, 2013.
  9. 9.0 9.1 "Determination, generosity and spaghetti sauce: Meet Canada's new GG". CBC News. July 14, 2017. http://www.cbc.ca/news/canada/montreal/julie-payette-montreal-friends-remember-1.4202846. 
  10. "Julie Payette – Celebrating Women's Achievements". Library and Archives Canada. Archived from the original on 2017-09-25. பார்க்கப்பட்ட நாள் 2019-02-24.
  11. Women in Space Who Changed the World. The Rosen Publishing Group. December 2011.
  12. "Julie Payette: Astronaut, Canadian Space Agency (Biographical data)". Houston, Texas: National Aeronautics and Space Administration. June 2012. Archived from the original on February 18, 2017.
  13. "Blasting off into space with Massey mementoes". February 1, 2009. https://www.thestar.com/news/2009/02/01/blasting_off_into_space_with_massey_mementoes.html. 
  14. "Biography of Julie Payette". Longueuil, Quebec: Canadian Space Agency. January 21, 2013. Archived from the original on July 12, 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூலி_பெயெட்&oldid=4063240" இலிருந்து மீள்விக்கப்பட்டது