ரிதுபேதம்
ரிதுபேதம் (1987) | |
---|---|
இயக்கம் | பிரதாப் போத்தன் |
கதை | எம். டி. வாசுதேவன் நாயர் |
திரைக்கதை | எம். டி. வாசுதேவன் நாயர் |
நடிப்பு | திலகன் கீதா வினீத், மோனிஷா உண்ணி, |
ஒளிப்பதிவு | அசோக் குமார் |
வெளியீடு | ஏப்ரல் 9, 1987 |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
ரிதுபேதம் (Rithubhedam) என்பது 1987 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாளத் திரைப்படம் ஆகும். இப்படத்தின் இயக்குநர் பிரதாப் போத்தன் ஆவார். இதன் கதை, மற்றும் திரைக்கதை உருவாக்கியவர் எம். டி. வாசுதேவன் நாயர். இப்படத்தில் வினீத், மோனிஷா உண்ணி, திலகன், கீதா முக்கிய வேடங்கள் ஏற்று நடித்திருந்தனர். இப்படத்தில் நடித்ததற்காக 1987 ஆம் ஆண்டுக்கான சிறந்த துணை நடிகருக்கான விருது திலகனுக்குக் கிடைத்தது.[1][2][3]
கதை
[தொகு]உயர் குடியில் வாழ்ந்து நொடிந்து போன ஒரு பெரிய குடும்பத்தின் தலைவராக மூப்பிலி நாயர் (திலகன்). இக்குடும்பத்தின் மேல் உள்ள சொத்திற்காக மூப்பிலி நாயரின் மைத்துனர் கருநாகர பனிக்கர் (சங்கராடி) நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். அக்குடும்பத்தின் வேலைக்காரிக்கும், தெருக்கூத்து ஆட்டக்காரருக்கும் பிறந்த மகன் கேசவ் (வினீத்) சென்னையில் வேலை சரியாக அமையாததால் ஊருக்கு திரும்புகிறான். அதே வேளையில் கேரளத்தின் தென்பகுதியில் அமைந்துள்ள (வைக்கம்) என்ற அந்த ஊருக்கு ஆசிரியராக வரும் ராசன் கேசவின் வீட்டில் தங்குகிறார்.
தன் படிப்பு சம்பந்தமாக மூப்பிலி நாயரை சந்திக்கும் ராசன் அவரின் மகளும், குடிகாரனான கிருஷ்ணன் உண்ணியின் (நெடுமுடி வேணு) மனைவியுமான தேவகியை (கீதா) சந்திக்கிறார். தேவகியும் அவளின் இளைய சகோதரியான தங்கமணியும் (மோனிசா உன்னி) தன் தேவகியின் குடிகார கணவனால் துன்பப்படுவது கண்டு தேவகியை ராசன் மருமணம் செய்ய கேட்கிறார். தேவகி மறுத்துவிடுகிறார்.
அதேவேளையில் இந்த குடும்பத்தின் வழக்கை முடித்துவைக்க நீதிமன்றம் தீர்மானித்து ஒருவரை நியமிக்கிறது. அதன்பின்னர் வழக்கு முடிக்கப்பட்டு இவர்களின் குடும்பத்தில் உள்ள 16 நபர்களுக்கு 48 லட்சங்களை பகிர்ந்து அளிக்க முன்வருகிறது. இதில் கடைசியாக ஒரு சதம் மூளை வளர்ச்சி இல்லாமல் அலையும் அப்பு என்பவருக்கு 3 லட்சம் கிடைக்கிறது. அதுவரை மூலை வளர்ச்சி இல்லாமல் ஆதரிக்க யாருமில்லாத அனாதையாக வாழ்ந்துவந்த அப்புவின் மேல் அனைவரும் கரிசணம் காட்டுகிறார்கள். எல்லோருக்கும்மேல் மூப்பிலி நாயர் தனது மகள் தங்கமணியை அப்புவிற்கு திருமணம் முடிக்க நினைக்கிறார்.
இதற்கிடையில் நீதிமன்றம் நியமிக்கும் நபருக்கும் மூப்பிலி நாயரின் இரண்டாவது மனைவிக்கும் தவறான உறவு ஏற்படுகிறது. இதனை மூப்பிலி நாயர் கண்டுபிடித்து தனது இரண்டாவது மனைவியை துரத்திவிடுகிறார்.
அந்த வேளையில் தங்கமணியின் ஆசிரியரான வயது முதிர்ந்த ராசனிடம் தன் தங்கை தங்கமணியை திருமணம் செய்துகொள்ளும்படி தேவகி கேட்கிறாள். இதுபற்றி நாளை முடிவு சொல்வதாக சொல்லிவிட்டுவரும் ராசனிடம் தங்கமணியை தான் காதலிப்பதாகவும் கண்டிப்பாக கல்யாணம் செய்யப்போவதாகவும் கேசவ் கூறுகிறான். இதன் காரணமாக ராசன் தங்கமணியை கேசவிற்கு கண்யானம் செய்துவைக்கலாம் என கூறுகிறார். ஆனால் தேவகி கேசவின் இனம் பற்றி கூறி மறுத்துவிடுகிறார்.
ஒருநாள் தங்கமணிக்கும் அப்புவிற்கும் கல்யாணம் செய்துவைக்க மூப்பிலி நாயர் இறங்குகிறார். ஆனால் ராசனும், கிருஷ்ணன் உண்ணியும் தங்கமணியை கேசவிற்கு திருமணம் செய்துவைக்க சண்டை நடக்கிறது. அப்போது நான் தங்கமணியை கல்யாணம் செய்து கொள்ளுகிறேன் என்று கேசவ் சொல்ல, மூப்பிலி நாயர் கேசவிடம், தங்கமணி என் மகள், அதேபோல் நீயும் என் மகன், உன் அம்மா என் வீட்டில் வேலை செய்தபோது நீ எனக்கு தவறான முறையில் பிறந்தவன். ஆகையினால் தங்கமணி உனக்கு தங்கை என்று கூறி அடித்துவிரட்டுகிறார்.
தன் கோபம் தலைக்கேறிய கேசவ் மூப்பிலி நாயரை ஆயுதம் கொண்டு கொலை செய்துவிட்டு சிறைக்கு செல்லுகிறான். சில ஆண்டுகள் கழித்து சிறையில் தங்கமணி தன் பெண்குழந்தையுடன், தன் கணவன் ராசன், கிருஷ்ணன் உண்ணி மற்றும் தேவகியுடன் சென்று பார்க்கிறார்கள்.
தொடர்புடைய திரைப்படங்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rithubedam". www.malayalachalachithram.com. பார்க்கப்பட்ட நாள் 2014-10-01.
- ↑ "Rithubedam". malayalasangeetham.info. பார்க்கப்பட்ட நாள் 2014-10-01.
- ↑ "Rithubedam". nthwall.com. Archived from the original on 6 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 1 அக்டோபர் 2014.