மோனிசா உண்ணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மோனிசா உன்னி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மோனிசா உண்ணி
பிறப்பு24 சனவரி 1971 பன்னியங்கர, கோழிக்கோடு, கேரளா, இந்தியா
இறப்பு5 திசம்பர் 1992(1992-12-05) (அகவை 21)
எக்ஸ்ரே புறவழிச் சாலை சந்திப்பு, சேர்தலா ஆலப்புழா மாவட்டம், கேரளா, இந்தியா
இறப்பிற்கான
காரணம்
வாகன விபத்து
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்மவுண்ட் கார்மல் கல்லூரி, பெங்களூர், கருநாடகம், இந்தியா
பணிதிரைப்ப நடிகை, பரதநாட்டிய கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
1986–1992
அறியப்படுவதுநகக்‌ஷதங்கள், பெருந்தச்சன், கமலதளம்
பெற்றோர்நாராயணன் உன்னி சிறிதேவி உன்னி

மோனிசா உண்ணி (Monisha Unni;24 சனவரி 1971 - 5 திசம்பர் 1992) ஒரு இந்திய திரைப்பட நடிகை, மலையாள சினிமாவில் தனது படைப்புகளுக்கு பெயர் பெற்றவர். [1] [2]

மோனிசா உண்ணி மலையாள திரைப்பட நடிகையாவார். இவர் நடித்து 1986 ஆண்டில் வெளியான முதல் திரைப்படம் நகக்க்ஷதங்கள். இந்த திரைப்படம் மூலம் இவர் சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றார்.[3]

சாரதா, சோபனா, மீரா ஜாஸ்மின், சுரபி இலட்சுமி மற்றும் ஷோபாஆகியோருடன் சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்ற ஆறு மலையாள நடிகைகளில் மோனிசா உன்னியும் ஒருவர்.[4] [5]

தனது குறுகிய கால திரையுலக வாழ்வில், எம். டி. வாசுதேவன் நாயர்,அரிகரன், பிரியதர்சன், அசயன்,கமல் மற்றும் சிபி மலையில் போன்ற இயக்குனர்களுடன் மோனிஷா பணியாற்றியுள்ளார்.[6]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

மோனிஷா உன்னி 1971 ஆம் ஆண்டில் கோழிக்கோடு பன்னியங்கராவில் நாராயணன் உண்ணி மற்றும் ஸ்ரீதேவி உண்ணி ஆகியோருக்கு பிறந்தார்.

நாராயணன் உண்ணி கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டடத்திலுள்ள சோர்னூரிலிருந்து வந்து பெங்களூரில் தோல் வியாபாரம் செய்து வந்தார், அங்கு மோனிசா வளர்க்கப்பட்டார்.

ஸ்ரீதேவி உண்ணி மோகினியாட்டத்தில் பயிற்சி பெற்ற நடனக் கலைஞர். மோனிசா தனது குழந்தை பருவத்தில் நடனம் கற்கத் தொடங்கினார், மேலும் ஒன்பது வயதாக இருந்தபோது மேடையில் தனது முதல் நடன அறங்கேற்றம் செய்தார்.

1985 இல் கர்நாடக மாநில அளவிலான மோகினியாட்டம் போட்டியில் கெளசிகா விருதை வென்றார்.

பெங்களூரிலுள்ள செயின்ட் சார்லஸ் உயர்நிலைப் பள்ளியிலும், பெங்களூர் பிஷப் காட்டன் பெண்கள் பள்ளியிலும் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.

பெங்களூரில் உள்ள மவுண்ட் கார்மல் கல்லூரியில் உளவியலில் பட்டம் பெற்றார். அவருக்கு சசித் உண்ணி என்ற மூத்த சகோதரும் உள்ளார்.

மரணம்[தொகு]

மோனிசா உண்ணி செப்படிவித்யா என்ற மலையாள திரைப்படத்தில் பணிபுரிந்து வந்தபோது கார் விபத்தில் இறந்தார்.

திசம்பர் 5, 1992 அன்று, மோனிசா மற்றும் அவரது தாயார் சிறிதேவி உண்ணி ஆகியோருடன் சென்ற கார், ஆலப்புழாவில் உள்ள சேர்த்தலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சேர்ந்தலாவில் இருந்து முஹம்மா நோக்கிச் சென்ற கேரள அரசுப் பேருந்து மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது.

அவரது தாயார் எலும்பு முறிவுகள் மற்றும் காயங்களுடன் உயிர் தப்பினார். பலத்த காயமடைந்த மோனிசா உயிரிழந்தார்.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. "Monisha Biography". entertainment.oneindia.in. Archived from the original on 5 December 2013. பார்க்கப்பட்ட நாள் 24 Jan 2013.
  2. "Archived copy". Archived from the original on 3 December 2013. பார்க்கப்பட்ட நாள் 29 November 2013.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. National Best Actress Award for Nakhashathangal – IMDB Page
  4. "Archived copy". Archived from the original on 30 November 2013. பார்க்கப்பட்ட நாள் 18 November 2013.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  5. "Archived copy". Archived from the original on 15 April 2014. பார்க்கப்பட்ட நாள் 14 April 2014.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  6. "Archived copy". Archived from the original on 3 December 2013. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோனிசா_உண்ணி&oldid=3903254" இலிருந்து மீள்விக்கப்பட்டது