வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கிள்ளிகுளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கிள்ளிகுளம்
Agricultural College and Research Institute, killikulam
Killikulam Campus
குறிக்கோளுரைஉழுவோம் உழைப்போம் உயர்வோம்
வகைபொதுத்துறை
உருவாக்கம்1984 - 1985
அமைவிடம், ,
சேர்ப்புதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
இணையதளம்www.tnau.ac.in/kkm/a.html

வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கிள்ளிகுளம் என்பது தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், வள்ளநாடு கிள்ளிகுளத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் மூன்றாவதாக அமைக்கப்பெற்ற வேளாண் கல்லூரி ஆகும்.

கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய நுழைவாயில்

உாிமைக்கட்டளை[தொகு]

இக்கல்வி நிறுவனம் மூன்று முக்கிய நோக்கங்களை உள்ளடக்கியது.

  • கல்வி
  • ஆராய்ச்சி
  • விரிவாக்கம்

துறைகள்[தொகு]

இந்நிறுவனத்தில் 8 முக்கிய துறைகள் செயல்படுகின்றன.[1] அவையாவன

  • உளவியல் துறை
  • மரபியல் மற்றும் பயிா் பெருக்கத் துறை
  • மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை
  • தோட்டக்கலையியல் துறை
  • வேளாண்பூச்சியியல் துறை
  • சமூகவியல் துறை
  • பயிா் நோயியல் துறை
  • பண்னை நிர்வாகத் துறை

வளாக புவியியல் அமைப்பு:[தொகு]

கல்லூாியின் வளாகம் மற்றும் பண்னை புவியியல் அமைப்புபடி 8°46 வடக்கு அட்சரேகை,77°42. கிழக்கு தீர்க்கரேகை மற்றும் கடல் மட்டத்திலிருந்து 40 மீட்டா் குத்துயரத்திற்கு மேல் அமைந்துள்ளது.[2] இங்கு ஆண்டு சராசரி மழையளவு 736.7 மி.மீ ,40 மழை நாட்களில் கிடைக்கும் படி அமைந்தள்ளது. இது வள்ளநாடு வெளிமான்கள் சரணாலத்தின் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது . இது 476.61 ஹெக்கடா்கள் பரப்பளவு உடையது. இப் பரந்த பரப்பில் நீா் பிடிப்பு அல்லது நீா் ஆதாரப்பரப்பகுதியின், கிள்ளிகுளம் நீா் தொட்டியும் அமைந்துள்ளது, இப்பண்ணை நிலப்பரப்பு ஆராய்ச்சிகளுக்காகவும், விதை உற்பத்திக்காகவும் பல்வேறு துறைகளுக்கு பிரித்தளிக்கப்பட்டுள்ளது.

வளாக வசதிகள்[தொகு]

இந்நிறுவனத்தின் எல்லாத் துறைகளும் தகுந்த ஆய்வகங்களுடன் அமைந்துள்ளது. மேலும் இக்கல்வி நிறுவனம், நூலகம், கணிணி நிலையம் , உடற்பயிற்சிக்கூடம் , கலையரங்கம் , விளையாட்டு மைதானம் , இணையத்துடன் உள்ள தேர்வறை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-12-27. பார்க்கப்பட்ட நாள் 2017-07-09.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-12-27. பார்க்கப்பட்ட நாள் 2017-07-09.

மேலும் காண்க[தொகு]