பூஞ்சையால் புணர்புழை, அல்குல் அழற்சி
பூஞ்சையால் புணர்புழை, அல்குல் அழற்சி candidal vulvovaginitis | |
---|---|
ஒத்தசொற்கள் | அல்குல் நுரைநொதிம (ஈசுட்டு) தொற்று, அல்குல் வெண்புண் |
சியூடோகைப்பே, காண்டிடல் அல்பிகான்சு அமைந்த அல்குல் ஈரப் புடைப்பு, பூஞ்சையால் புணர்புழை, அல்குல் அழற்சி candidal vulvovaginitis. | |
சிறப்பு | மகப்பேறியல் |
அறிகுறிகள் | அல்குல் அரிப்பு, சிறுநீர்க் கழிப்பில் எரிச்சல், அடர் வெண் ஒழுக்கு, பாலுறவில் வலி, அல்குல் சுற்றி செந்நிறம்[1] |
காரணங்கள் | காண்டிடா எனும் பூஞ்சை கூடுதலாக வளர்தல்[1] |
சூழிடர் காரணிகள் | உயிர்க்கொல்லிகள், கருவுறல், சிறுநீரிழிவு, HIV/AIDS[2] |
நோயறிதல் | அல்குல் ஒழுக்கின் ஓர்வு[1] |
ஒத்த நிலைமைகள் | கிளாமிடியா தொற்று, வெட்டைநோய்த் தொற்று, நுண்ணுயிரியால் அல்குல் நோய்[3][1] |
சிகிச்சை | பூஞ்சைத் தடுப்பு மருந்துகள்[4] |
நிகழும் வீதம் | 75% பெண்களைத் தம் வாழ்நாளில் ஒருபுள்ளியில் இந்நோய் தாக்குகிறது.[1] |
அல்குல் நுரைநொதிம (ஈசுட்டு) தொற்று எனப்படும் பூஞ்சையால் புணர்புழை, அல்குல் அழற்சி (candidal vulvovaginitis) அல்லது அல்குல் வெண்புண் (vaginal thrush), என்பது எரிச்சலைத் தரும் நுரைநொதிமம் (ஈசுட்டு) கூடுதலாக வளர்தலால் ஏற்படும் அழற்சி ஆகும்.[5][1] மிகப் பொதுவான அறிகுறியாக அல்குல் கடும் எரிச்சல் அமைகிறது.[1] மற்ற அறிகுறிகளாக, சிறுநீர்க்கழிப்பில் எரிச்சல், நாற்றம் இல்லாத அடர் அல்குல் வெண் ஒழுக்கு, பாலுறவில் வலி, அல்குல் சுற்றி செந்நிறம் ஆகியன அமைகின்றன.[1] இந்த அறிகுறிகள் மாத விடாயின்போது கடுமை அடைகிறது.[2]
இந்த நோய் காண்டிடா எனும் பூஞ்சை கூடுதலாக வளர்தலால் ஏற்படுகிறது.[1] இந்த காண்டிடா பூஞ்சை அல்குலில் சிற்றளவில் அல்குலில் உள்ளது.[1] இது பாலுறவால் கடத்தப்படும் தொற்றல்ல; என்றாலும், முனைவாக பாலுறவில் ஈடுபட்பவர்களுக்கு இந்நோய் அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.[1][2] இடர்க் காரணிகளாக, நுண்ணுயிரிக் கொல்லிகள் கருவுறல், நீரிழிவு, HIV/AIDS ஆகியவை அமைகின்றன.[2] இனிப்பு மிக்க உணவை உண்ணலும் இந்நோயை உருவாக்கும்.[1] இந்நொய் தாக்க, இறுக்கமான உடைகளோ உள்ளாடை வகைகளோ சொந்த தூய்மைப் பொருட்களோ காரணிகளாக அமைவதில்லை.[2] நோய் அல்குல் ஒழுக்குப் பதக்கூற்றின் ஓர்வுவழி அறியப்படுகிறது.[1]இதன் அறிகுறிஅக பாலுறவில் கடத்தப்படும் தொற்றுகளை ஒத்து இருப்பதால் கிளாமிடியா தொற்று, வெட்டைநோய்த் தொற்று சார்ந்த ஓர்வுகள் பரிந்துரைக்கப்படுகின்றன.[1]
சான்றுகள் ஏதும் இல்லை என்றாலும், முன்காப்பு நடவடிக்கையாக பருத்தி உள்ளாடைகளை அணிதலும் தளர்ந்த உள்ளாடைகள் அணிதலும் பரிந்துரைக்கப்படுகின்றன.[1][2] மேலும், தாரைவீச்சுக் கழுவலும் வாசனையுள்ள துப்புரவுப்பொருள் தவிர்த்தலும் பரிந்துரைக்கப்படுகின்றன.[1] பூஞ்சைத் தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்தலாம்.[4] இவற்றுக்கு எடுத்துகாட்டாக, கிளாட்ரிமாசோல் குழைவையும் வாய்வழி உட்கொள்ளும் உளூக்கான்சோல் போன்ற மருந்துகளைப் பயன்படுத்தலாம்.[4] கடுமையான இந்நோய்த் தொற்றுகளைத் தவிர்க்கும் நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தல் பயன் தருவதில்லை.[6]
பெண்கள் தம் வாழ்நாளில் ஒருபுள்ளியில் ஏறத்தாழ 75% பேர் ஒருதடவையும் 50% பேர் இருதடவைகளும் இந்நோயைப் பெறுகின்றனர்.[1][7] ஒரே ஆண்டில் 5% பெண்கள் மும்முறை இந்நோயைப் பெறுகின்றனர்.[7]அல்குல் அழற்சி ஏற்படுத்தும் பொதுவான காரணமாக நுண்ணுயிரியால் அல்குல் நோய்க்கு அடுத்தபடியாக இந்த நோய் இரண்டாவது காரணியாக அமைகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 "Vaginal yeast infections fact sheet". womenshealth.gov. December 23, 2014. Archived from the original on 4 March 2015. பார்க்கப்பட்ட நாள் 5 March 2015.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Sobel, JD (9 June 2007). "Vulvovaginal candidosis.". Lancet 369 (9577): 1961–71. doi:10.1016/S0140-6736(07)60917-9. பப்மெட்:17560449.
- ↑ 3.0 3.1 Ilkit, M; Guzel, AB (August 2011). "The epidemiology, pathogenesis, and diagnosis of vulvovaginal candidosis: a mycological perspective". Critical Reviews in Microbiology 37 (3): 250–61. doi:10.3109/1040841X.2011.576332. பப்மெட்:21599498.
- ↑ 4.0 4.1 4.2 "Sexually transmitted diseases treatment guidelines, 2006". MMWR Recomm Rep 55 (RR-11): 1–94. August 2006. பப்மெட்:16888612 இம் மூலத்தில் இருந்து 2014-10-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141020212427/http://www.cdc.gov/mmwr/preview/mmwrhtml/rr5511a1.htm.
- ↑ James, William D.; Berger, Timothy G.; et al. (2006). Andrews' Diseases of the Skin: clinical Dermatology. Saunders Elsevier. p. 309. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7216-2921-0.
- ↑ Abad, CL; Safdar, N (June 2009). "The role of lactobacillus probiotics in the treatment or prevention of urogenital infections – a systematic review.". Journal of chemotherapy (Florence, Italy) 21 (3): 243–52. doi:10.1179/joc.2009.21.3.243. பப்மெட்:19567343.
- ↑ 7.0 7.1 "Diagnosis of vaginitis". Am Fam Physician 62 (5): 1095–104. September 2000. பப்மெட்:10997533 இம் மூலத்தில் இருந்து 2011-06-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110606054114/http://www.aafp.org/afp/20000901/1095.html.
வெளி இணைப்புகள்
[தொகு]வகைப்பாடு | |
---|---|
வெளி இணைப்புகள் |
|