பூஞ்சையால் புணர்புழை, அல்குல் அழற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூஞ்சையால் புணர்புழை, அல்குல் அழற்சி
candidal vulvovaginitis
ஒத்தசொற்கள்அல்குல் நுரைநொதிம (ஈசுட்டு) தொற்று, அல்குல் வெண்புண்
Vaginal wet mount of candidal vulvovaginitis.jpg
சியூடோகைப்பே, காண்டிடல் அல்பிகான்சு அமைந்த அல்குல் ஈரப் புடைப்பு, பூஞ்சையால் புணர்புழை, அல்குல் அழற்சி candidal vulvovaginitis.
சிறப்புமகப்பேறியல்
அறிகுறிகள்அல்குல் அரிப்பு, சிறுநீர்க் கழிப்பில் எரிச்சல், அடர் வெண் ஒழுக்கு, பாலுறவில் வலி, அல்குல் சுற்றி செந்நிறம்[1]
காரணங்கள்காண்டிடா எனும் பூஞ்சை கூடுதலாக வளர்தல்[1]
சூழிடர் காரணிகள்உயிர்க்கொல்லிகள், கருவுறல், சிறுநீரிழிவு, HIV/AIDS[2]
நோயறிதல்அல்குல் ஒழுக்கின் ஓர்வு[1]
ஒத்த நிலைமைகள்கிளாமிடியா தொற்று, வெட்டைநோய்த் தொற்று, நுண்ணுயிரியால் அல்குல் நோய்[3][1]
சிகிச்சைபூஞ்சைத் தடுப்பு மருந்துகள்[4]
நிகழும் வீதம்75% பெண்களைத் தம் வாழ்நாளில் ஒருபுள்ளியில் இந்நோய் தாக்குகிறது.[1]

அல்குல் நுரைநொதிம (ஈசுட்டு) தொற்று எனப்படும் பூஞ்சையால் புணர்புழை, அல்குல் அழற்சி (candidal vulvovaginitis) அல்லது அல்குல் வெண்புண் (vaginal thrush), என்பது எரிச்சலைத் தரும் நுரைநொதிமம் (ஈசுட்டு) கூடுதலாக வளர்தலால் ஏற்படும் அழற்சி ஆகும்.[5][1] மிகப் பொதுவான அறிகுறியாக அல்குல் கடும் எரிச்சல் அமைகிறது.[1] மற்ற அறிகுறிகளாக, சிறுநீர்க்கழிப்பில் எரிச்சல், நாற்றம் இல்லாத அடர் அல்குல் வெண் ஒழுக்கு, பாலுறவில் வலி, அல்குல் சுற்றி செந்நிறம் ஆகியன அமைகின்றன.[1] இந்த அறிகுறிகள் மாத விடாயின்போது கடுமை அடைகிறது.[2]

இந்த நோய் காண்டிடா எனும் பூஞ்சை கூடுதலாக வளர்தலால் ஏற்படுகிறது.[1] இந்த காண்டிடா பூஞ்சை அல்குலில் சிற்றளவில் அல்குலில் உள்ளது.[1] இது பாலுறவால் கடத்தப்படும் தொற்றல்ல; என்றாலும், முனைவாக பாலுறவில் ஈடுபட்பவர்களுக்கு இந்நோய் அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.[1][2] இடர்க் காரணிகளாக, நுண்ணுயிரிக் கொல்லிகள் கருவுறல், நீரிழிவு, HIV/AIDS ஆகியவை அமைகின்றன.[2] இனிப்பு மிக்க உணவை உண்ணலும் இந்நோயை உருவாக்கும்.[1] இந்நொய் தாக்க, இறுக்கமான உடைகளோ உள்ளாடை வகைகளோ சொந்த தூய்மைப் பொருட்களோ காரணிகளாக அமைவதில்லை.[2] நோய் அல்குல் ஒழுக்குப் பதக்கூற்றின் ஓர்வுவழி அறியப்படுகிறது.[1]இதன் அறிகுறிஅக பாலுறவில் கடத்தப்படும் தொற்றுகளை ஒத்து இருப்பதால் கிளாமிடியா தொற்று, வெட்டைநோய்த் தொற்று சார்ந்த ஓர்வுகள் பரிந்துரைக்கப்படுகின்றன.[1]

சான்றுகள் ஏதும் இல்லை என்றாலும், முன்காப்பு நடவடிக்கையாக பருத்தி உள்ளாடைகளை அணிதலும் தளர்ந்த உள்ளாடைகள் அணிதலும் பரிந்துரைக்கப்படுகின்றன.[1][2] மேலும், தாரைவீச்சுக் கழுவலும் வாசனையுள்ள துப்புரவுப்பொருள் தவிர்த்தலும் பரிந்துரைக்கப்படுகின்றன.[1] பூஞ்சைத் தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்தலாம்.[4] இவற்றுக்கு எடுத்துகாட்டாக, கிளாட்ரிமாசோல் குழைவையும் வாய்வழி உட்கொள்ளும் உளூக்கான்சோல் போன்ற மருந்துகளைப் பயன்படுத்தலாம்.[4] கடுமையான இந்நோய்த் தொற்றுகளைத் தவிர்க்கும் நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தல் பயன் தருவதில்லை.[6]

பெண்கள் தம் வாழ்நாளில் ஒருபுள்ளியில் ஏறத்தாழ 75% பேர் ஒருதடவையும் 50% பேர் இருதடவைகளும் இந்நோயைப் பெறுகின்றனர்.[1][7] ஒரே ஆண்டில் 5% பெண்கள் மும்முறை இந்நோயைப் பெறுகின்றனர்.[7]அல்குல் அழற்சி ஏற்படுத்தும் பொதுவான காரணமாக நுண்ணுயிரியால் அல்குல் நோய்க்கு அடுத்தபடியாக இந்த நோய் இரண்டாவது காரணியாக அமைகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 "Vaginal yeast infections fact sheet". womenshealth.gov. December 23, 2014. 4 March 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 5 March 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Sobel, JD (9 June 2007). "Vulvovaginal candidosis.". Lancet 369 (9577): 1961–71. doi:10.1016/S0140-6736(07)60917-9. பப்மெட்:17560449. 
  3. 3.0 3.1 Ilkit, M; Guzel, AB (August 2011). "The epidemiology, pathogenesis, and diagnosis of vulvovaginal candidosis: a mycological perspective". Critical Reviews in Microbiology 37 (3): 250–61. doi:10.3109/1040841X.2011.576332. பப்மெட்:21599498. 
  4. 4.0 4.1 4.2 "Sexually transmitted diseases treatment guidelines, 2006". MMWR Recomm Rep 55 (RR-11): 1–94. August 2006. பப்மெட்:16888612. Archived from the original on 2014-10-20. https://web.archive.org/web/20141020212427/http://www.cdc.gov/mmwr/preview/mmwrhtml/rr5511a1.htm. 
  5. James, William D.Expression error: Unrecognized word "etal". (2006). Andrews' Diseases of the Skin: clinical Dermatology. Saunders Elsevier. பக். 309. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7216-2921-0. 
  6. Abad, CL; Safdar, N (June 2009). "The role of lactobacillus probiotics in the treatment or prevention of urogenital infections – a systematic review.". Journal of chemotherapy (Florence, Italy) 21 (3): 243–52. doi:10.1179/joc.2009.21.3.243. பப்மெட்:19567343. 
  7. 7.0 7.1 "Diagnosis of vaginitis". Am Fam Physician 62 (5): 1095–104. September 2000. பப்மெட்:10997533. Archived from the original on 2011-06-06. https://web.archive.org/web/20110606054114/http://www.aafp.org/afp/20000901/1095.html. 

வெளி இணைப்புகள்[தொகு]

வகைப்பாடு
வெளி இணைப்புகள்
  • மெடிசின்பிளசு: 001511