ஆவி (வளிமம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு சூடான தேநீர் கோப்பையிலிருந்து ஆவியாக வெளியேறிய நீரானது குளிர்ச்சியடைந்து கண்ணால் பார்க்கக்கூடிய துளிகளாக (வளிமக்கரைசல்) காணப்படுகிறது.

இயற்பியலில் ஆவி என்பது பொருளொன்று அதன் நிலைமாறு வெப்பநிலைக்குக் கீழான வெப்பநிலையில் வளிம நிலையில் காணப்படும் நிலையாகும். அதாவது, ஆவியானது, வெப்பநிலையைக் குறைக்காமலேயே, அழுத்தத்தை மட்டும் அதிகரிப்பதன் காரணமாக, திரவமாக குளிர்விக்கப்படலாம் என்பதாகும்.[1] ஒரு வளிமக் கரைசல் என்பதிலிருந்து ஆவியானது வேறுபட்டதாகும்.[2] ஒரு வளிமத்தில் திரவத்தின் நுண்ணிய துகள்களோ அல்லது திண்மத்தின் நுண்ணிய துகள்களோ அல்லது இவை இரண்டுமோ தொங்கல் நிலையில் காணப்படும் நிலையே வளிமக்கரைசல் எனப்படுகிறது.[2]

உதாரணமாக, நீரானது நிலைமாறு வெப்பநிலையாக 647 கெல்வினைக் (374°செல்சியசு அல்லது 705° பாரன்ஹீட்) கொண்டுள்ளது. இந்த வெப்பநிலையே நீரானது திரவ நிலையில் காணப்படக்கூடிய மிக உயர்ந்தபட்ச வெப்பநிலையாகும். புவியின் வளிமண்டலத்தில், சாதாரண வெப்பநிலைகளில், பகுதி அழுத்தமானது போதுமான அளவு அதிகரிக்கப்பட்டால், வளிம நிலையிலுள்ள நீர் (நீராவி என அழைக்கப்படுவது) குளிர்வித்தலின் காரணமாக திரவ நிலை நீராக சுருங்குகிறது.  

ஒரு ஆவியானது திரவத்துடனோ, திண்மத்துடனோ இயைந்தே இருக்கும் வாய்ப்பு உள்ளது. இந்தக்கூற்று உண்மையாக இருக்கும் போது, இந்த இரண்டு நிலைகளும் சமநிலையில் காணப்படும். வாயுவின் பகுதி அழுத்தமானது திரவம் அல்லது திண்மத்தின் சமநிலை ஆவியமுக்கத்திற்கு சமமாக இருக்கும் நிலை காணப்படும்.[1]

பண்புகள்[தொகு]

நிலைமை விளக்கப்படத்தில் திரவ - ஆவி நிலைமாறு நிலையானது திரவ - வாயு அதிஎல்லையில் உயர் வெப்பநிலையில் காணப்படுகிறது. (பச்சை நிற புள்ளியிட்ட கோடானது நீரின் முரணான பண்பைக் குறிக்கிறது)

ஒரு பொருளின் நிலைமாறு வெப்பநிலைக்கும் கீழான ஒரு பொருளானது திண்மம் மற்றும் திரவ நிலையிலும் இருக்க சாத்தியமான வெப்பநிலையொன்றில் காணப்படும் வளிம நிலையே ஆவி எனப்படுகிறது. (உதாரணமாக, நீரானது 374 °செல்சியசு (647 கெல்வின்) என்பதை நிலைமாறு வெப்பநிலையாகக் கொண்டுள்ளது. இதுவே, நீரானது மிக திரவ நிலையில் இருக்க வாய்ப்புள்ள மிக உயர்ந்தபட்ச வெப்பநிலையாகும்.)ஆவியானது திட அல்லது திரவ நிலையோடு தொடர்பில் இருக்கும் போது இந்த இரு நிலைகளும் வெப்ப இயக்கவியற் சமநிலையில் காணப்படும். வளிமம் அல்லது வாயு என்ற பதமானது, அமுக்கத்திற்குட்படும் திரவ நிலையைக் குறிக்கிறது. நிலையான வாயுக்கள் எனப்படுபவையால் அந்த வெப்பநிலையில் திரவத்தையோ, திண்மத்தையோ உருவாக்க இயலாது. ஒரு திண்மமோ அல்லது திரவமோ ஆவியாவதற்கு கொதிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

ஆவியானது மேகம் மற்றும் ஆவி ஒடுக்கம் போன்ற நிகழ்வுகளுக்கு காரணமாக உள்ளது. இந்நிகழ்வு பொதுவாக வடித்திறக்கல் (distillation) துாய்மைப்படுத்த வேண்டிய திரவத்தை வளிம வண்ணப்படிவுப் பிரிகைக்கு உட்படுத்துவதற்கு முந்தைய நிலையில் சுற்றுப்புறத்தில் காணப்படும் காற்றில் கலந்துள்ள நாற்றத்திற்குக் காரணமான பொருட்களை தெளிவாக்குதல் செயல்முறை போன்ற இயற்பியல் செயல்முறைகளில் சாதாரணமாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஆவியின் கூறாக உள்ள மூலக்கூறுகள் அதிர்வியக்கம், சுழல் இயக்கம், நகர்வியக்கம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இந்த இயக்கங்கள் வளிமங்களின் இயக்கக் கோட்பாட்டில் நன்கு விவரிக்கப்பட்டுள்ளன.

ஆவியமுக்கம்[தொகு]

ஆவியமுக்கம் அல்லது சமநிலையின் ஆவியமுக்கம் என்பது ஒரு மூடிய அமைப்பில் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ஆவியும் அதன் ஒடுக்கப்பட்ட நிலையும் (திண்மம் அல்லது திரவம்) வெப்ப இயக்கவியல் சமநிலையில் உள்ள போது அந்த ஆவியால் வெளிப்படுத்தப்படும் அழுத்தம் என வரையறுக்கப்படுகிறது.

ஒரு திரவத்தின் இயல்பான கொதிநிலையானது எந்த வெப்பநிலையில் அதன் ஆவியமுக்கமானது திட்ட வளிமண்டல அழுத்தத்திற்கு சமமாக இருக்கிறதோ அந்த வெப்பநிலையாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 R. H. Petrucci, W. S. Harwood, and F. G. Herring, General Chemistry, Prentice-Hall, 8th ed. 2002, p. 483–86.
  2. 2.0 2.1 Cheng, T. (2014). "Chemical evaluation of electronic cigarettes". Tobacco Control 23 (Supplement 2): ii11–ii17. doi:10.1136/tobaccocontrol-2013-051482. பன்னாட்டுத் தர தொடர் எண்:0964-4563. பப்மெட்:24732157. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவி_(வளிமம்)&oldid=2749370" இலிருந்து மீள்விக்கப்பட்டது