உள்ளடக்கத்துக்குச் செல்

நுண் நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐக்கிய இராச்சித்தின் கடற்கரையோரத்தில் இருக்கும் ஒரு செயற்கைத் தீவின் மேல் உள்ள நுண் நாடான சீலாந்து வேள்புலம்.

நுண் நாடு (micronation) என்பது சில சமயம் மாதிரி நாடு அல்லது புதிய நாடு திட்டம், என்று அழைக்கப்படுவது, தன்னை இறையாண்மை கொண்ட தேசம் அல்லது நாடாக கூறிக்கொள்வது ஆகும். ஆனால் இதற்கு உலக அரசாங்கங்கள் அல்லது முக்கிய சர்வதேச அமைப்புகளின் அங்கீகரிக்காரம் கிடையாது.

பல நுண் நாடுகள் நாணயங்கள், கொடிகள், அஞ்சல் தலை, கடவுச் சீட்டுகளே, பதக்கங்கள் மற்றும் பிற பொருட்களை வெளியிட்டுள்ளன. இந்த பொருட்கள் அந்த சொந்த சமூகத்திற்கு வெளியே அரிதாகவே ஏற்றுக் கொள்ளப்படுகின்றன, ஆனால் ஆர்வமுள்ளவர்களிடமிருந்து பணம் திரட்ட அல்லது புதுமையானவற்றை சேகரிப்பவர்களுக்கு விற்கப்படலாம்.

19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து நுண் நாடுகள் குறித்து தகவல்கள் அறியப்படுகிறது. இணையதளத்தின் வருகையானது பல புதிய நுண் நாடுகளை உருவாக்க வழிகளை வகுத்தது. அதன் உறுப்பினர்கள் உலகம் முழுவதிலும் சிதறி பெரும்பாலும் மின்னணு சாதனங்கள் வழியாக தொடர்பு கொள்கின்றனர். பெரும்பாலும் தங்கள் நாடுகளை "நாடோடி நாடுகள்" என்று அழைக்கிறனர். இத்தகைய இணைய நுண் நாடுகளுக்கு இடையிலான வேறுபாடுகள், பிற வகையான சமூக வலைப்பின்னல் குழுக்கள் மற்றும் பங்களிப்பு விளையாட்டு (Role-playing game) போன்று வேறுபாடுகளை பெரும்பாலும் வரையறுப்பது கடினமாக உள்ளது.[1]

அந்த பொருளை விவரிக்கும் "நுண் நாடு" என்ற சொல் 1970 களுக்கு பிற்பட்டது ஆகும்.[2] சிலர் இறைமை மிக்க தேசிய நாடுகளே "நுண் நாடுகள்" என்று குறிப்பிடுகின்றனர்.

சொற்பிறப்பு

[தொகு]

இதை ஆங்கிலத்தில் குறிப்பிடும் சொல்லான மைக்ரோநேசன் ('micronation') என்பதற்கு "சிறிய நாடு" என்று பொருள். இது 1970 களின் நடுப்பகுதியில் தோன்றிய ஒரு சொல் ஆகும், அக்காலகட்டத்தில் அநேகமாக ஆயிரக் கணக்கான சிறிய அங்கீகாரமற்ற இதுபோன்ற நாடுகளை குறிப்பிட உருவானது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mateusz Kudła,"Jak zostać premierem nie odchodząc od komputera" (in Polish). onet.pl. Archived from the original on 2011-11-21. பார்க்கப்பட்ட நாள் 2013-04-27.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. The People's Almanac #2, page 330.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நுண்_நாடு&oldid=3823736" இலிருந்து மீள்விக்கப்பட்டது