தேசம்
தேசம் (Nation) என்பது பெரும்பாலும் ஒரே மொழியை தாய்மொழியாய் கொண்ட இனக் குழுக்கள் வாழும் தாய்நிலப் பகுதிகளாகும். நாடு (Country) என்பது நிர்வாகத்துக்காக தோற்றுவிக்கப்பட்ட பகுதியாகும். உலகில் பல தேசங்களை கொண்ட நாடுகளும் உண்டு.[1] ஒரே மொழியை தாய்மொழியாய் கொண்ட இனக் குழுக்கள் வாழும் தாய்நிலப் பகுதிகள் பல நாடுகளாக பிரிந்தும் காணப்படுகின்றன.[2][3]
தமிழ் மரபும் உலக மரபும்
[தொகு]பெரும்பாலும் தேசம் என்பதற்கு மொழி, மரபு, இனக்குழு, குடிவழக்கு போன்றவை ஒருங்கே அமையப்பெற்றதாக வரையறை வைக்கப்படுகிறது. சங்க இலக்கியங்களில் தமிழ்த்தேசம் என்பதற்கு வரையறையாக மொழியே வைத்துச் சொல்லப்படுகிறது.[கு 1] அதன்படி வேங்கடம் முதல் குமரி வரை தமிழ்த்தேசம் என வரையறுக்கப்பட்டது.[கு 2] வேங்கடத்துக்கு வடக்கில் வேற்று மொழியாளர்களான வடுகர்கள் வாழும் வடுகர் தேஎம் என்னும் மொழி பெயர்ந்த தேயம் வருவதாக கூறப்படுகிறது.[கு 3][கு 4]
குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழ்கெழு மூவர் காக்கும் மொழிபெயர் தேஎத்த பன்மலை யிறந்தே" (அகம். 31:14-15)
- ↑ வடவேங்கடம் தென்குமரி அவ்இடை தமிழ் கூறும் நல்லுலகு
- ↑ "குல்லைக் கண்ணி வடுகர் முனையது பல்வேற் கட்டி நன்னாட் டும்பர் மொழிபெயர் தேஎத்த ராயினும் வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே" (குறுந்தொகை 11::5-8)
- ↑ "பனிபடு சோலை வேங்கடத் தும்பர் மொழிபெயர் தேஎத்த ராயினும் நல்குவர்" (அகம்.211:7-8)