பி. ஆர். பட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெலியர் ராம்தாஸ் பட் (Beliyar Ramdas Bhat ) என்பவர் ஒரு இந்திய பேராசிரியர் மற்றும் புள்ளியியல் துறை நிபுணர்  ஆவார். இவர் இருபது ஆண்டுகளாக தார்வாடில் உள்ள கர்நாடக பல்கலைகழகத்தில் புள்ளியல் துறை தலைவராக பணியாற்றினார். இவர் பன்னாட்டு புள்ளியில் நிறுவனத்தின் உறுப்பினராகவும் ராயல் புள்ளியியல் கழகத்தின் உறுப்பினராகவும் தேர்ந்துதெடுக்கபட்டார்.

அவ்யக பிராமணச் சமூகத்தவரான பட் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கணித பாடத்தில் தனது எம்.ஏ பட்டத்தை பெற்றார். கர்நாடகப் பல்கலைக்கழகத்தில் புள்ளியியலில் எம்.ஏ பட்டமும், தனது முனைவர் பட்டத்தை 1961 இல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் டேவிட் பிளாக்வெலின் வழிகாட்டுதலில் முடித்தார். பட் புள்ளியியல் இன்ஸ்டிடியூட்ட் மற்றும் தென் ஆப்பிரிக்க புள்ளிவிவர சங்கம் ஆகியவற்றின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இந்திய நிகழ்தகவு மற்றும் புள்ளியியல் சங்கத்தின் செயலாளர், ஆசிரியர், தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்தார். மேலும் அவர் இந்திய அறிவியல் காங்கிரஸ் சங்கத்தின் புள்ளியியல் பிரிவின் முன்னாள் தலைவர் ஆவார்

தேர்ந்தெடுத்த படைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

கணித மரபியல் திட்டத்தில் பி. ஆர். பட்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ஆர்._பட்&oldid=3314226" இலிருந்து மீள்விக்கப்பட்டது