ரிச்சர்டு நெட்டைக்காலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரிச்சர்டு நெட்டைக்காலி
தாய்லாந்தில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
மோடாசிளிடே
பேரினம்:
ஆந்தசு
இனம்:
ஆ. ரிச்சர்டி
இருசொற் பெயரீடு
ஆந்தசு ரிச்சர்டி
வியோலியாட், 1818

ரிச்சர்டு நெட்டைக்காலி (Richard's pipit - ஆந்தசு ரிச்சர்டி) என்பது ஒரு நடுத்தர அளவுள்ள, (மரத்தை) அடையும் பாசரீன் வகைப் பறவை ஆகும். இவை வட ஆசியப்பகுதிகளின் திறந்த புல்வெளிகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. இவை இங்கிருந்து இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியப்பகுதிகளுக்கு நீண்ட தூரம் வலசை போகின்றன.[2][3]

களக்குறிப்புகள்[தொகு]

நெட்டைக்காலிகளில் பெரியவை இவை. இவற்றின் உடல் நீளம் 17 முதல் 20 செ. மீ. நீளமும் எடை 25 முதல் 36 கிராம் வரை இருக்கும். பெரும்பாலும் நிமிர்ந்து நிற்கும் வழக்கமுடைய மெல்லிய பறவை இந்த பறவை, தொந்தரவு செய்யப்படும் போது இறக்கைகளை ஆழமாக அடித்து எழும்பி, அதிக உயரத்துக்குச் செல்லும் தன்மையுடையன.

உடல் தோற்றம்[தொகு]

  • நீண்ட, மஞ்சள் பழுப்பு நிறக் கால்கள், தெளிவான புருவக்கோடு (குறிப்பாக, கண்ணிற்குப் பின்புறம்), பூங்குருவியைப் போன்ற தோற்றம்;
  • நன்றான கோடுகளுடைய மேல் பாகங்கள் மற்றும் மார்பு, நீளமான பருத்த அலகு
  • நீளமான பின்புறம் மற்றும் வளைந்த நகம் [4]

வாழிடம்[தொகு]

வயல்கள், ஈர நிலங்கள், புல்வெளிகள், ஏரிகளை ஒட்டிய கரைப்பகுதிகள்

வெளியிணைப்புகள்[தொகு]

  • பொதுவகத்தில் Anthus richardi பற்றிய ஊடகங்கள்
  • விக்கியினங்களில் Anthus richardi பற்றிய தரவுகள்

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2013). "Anthus richardi". IUCN Red List of Threatened Species (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2013: e.T22718471A50429016. doi:10.2305/IUCN.UK.2013-2.RLTS.T22718471A50429016.en. http://www.iucnredlist.org/details/22718471/0. பார்த்த நாள்: 27 August 2016. 
  2. Jobling, James A. (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London, United Kingdom: Christopher Helm. பக். 49, 335. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4081-2501-4. https://archive.org/details/Helm_Dictionary_of_Scientific_Bird_Names_by_James_A._Jobling. 
  3. Mearns, Richard; Gouraud, Christophe; Chevrier, Laurent (2015). "The identity of Richard of Richard's pipit (Anthus richardi Vieillot, 1818)". Archives of Natural History 42 (1): 85–90. doi:10.3366/anh.2015.0281. 
  4. தென் இந்திய பறவைகள் - கிரிமிட், இன்சுகிப், மகேஷ்வரன் - பக். 212:1
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிச்சர்டு_நெட்டைக்காலி&oldid=3819801" இலிருந்து மீள்விக்கப்பட்டது