உள்ளடக்கத்துக்குச் செல்

சக்ரா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சக்ரா ஆறு (Chakra River) என்பது மேற்கு இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் குந்தாபுரா மற்றும் குங்கோல்லி வழியாகப் பாயும் ஒரு ஆறு ஆகும். இது பஞ்சகங்காவலி ஆறு எனப்படும் சௌபர்ணிகா நதி, வராஹி நதி மற்றும் குப்ஜா நதியுடன் கலந்து அரபிக்கடலில் கலக்கிறது.[1]

சக்ரா நகர் என்பது இந்த நதியால் பிரபலமான ஒரு சிறிய நகரம் ஆகும்.[சான்று தேவை] சக்ராநகர் மங்களூருவிலிருந்து மாஸ்திகட், நாகரா வழியாகப் சீமக்கா வழியில் உள்ளது. லிங்கனமக்கி அணைக்கு மதகுகள் இல்லாத, சமன்படுத்தும் நீர்த்தேக்கமாக நீண்ட காலத்திற்கு முன்பு கட்டப்பட்ட சக்ரா அணையும் உள்ளது. இந்த அணையைப் பார்வையிடச் சிறப்பு அனுமதி தேவை. சக்கரா நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீர்ப்பாசன நோக்கத்திற்காக சக்கரா அணை கட்டப்பட்டது. சக்ரா அணை கர்நாடகா ஆற்றல் பகிர்மான கூட்டு நிறுவனம் மூலம் நிர்வகிக்கப்படும் திட்டமாகும்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Facts and Information about Chakra River". www.indiamapped.com. பார்க்கப்பட்ட நாள் 2022-02-26.
  2. "Chakra Dam". Karnataka.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2013-10-23. பார்க்கப்பட்ட நாள் 2022-02-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்ரா_ஆறு&oldid=3395010" இலிருந்து மீள்விக்கப்பட்டது