எ டேல் ஆஃப் டூ சிஸ்டர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எ டேல் ஆஃப் டூ சிஸ்டர்ஸ்
இயக்கம்கிம் ஜீ-வூண்
கதைகிம் ஜீ-வூண்
இசைலீ பைங்-வூ
நடிப்பு
  • இம் சூ ஜங்
  • மூன் ஜீன்-யங்
  • யூம் ஜங்-ஆஷ்
  • கிம் கப்-சோ
ஒளிப்பதிவுலீ மோ-கெயே
படத்தொகுப்புகோ இம்-பை
கலையகம்பி.ஓ.எம். திரைப்பட தயாரிப்பு நிறுவனம்.
விநியோகம்
  • சினிக்ளி ஆசியா
  • பிக் ப்ளூ பிலிம்
வெளியீடுசூன் 13, 2003 (2003-06-13)
ஓட்டம்114 நிமிடங்கள்[1]
நாடுதென் கொரியா
மொழிகொரியன்
ஆக்கச்செலவு$3.7 மில்லியன்[2]
மொத்த வருவாய்$1 மில்லியன்[3]

எ டேல் ஆஃப் டூ சிஸ்டர்ஸ் (A Tale of Two Sisters) (அங்குல்장화, 홍련; இலத்தீன்Janghwa, HongryeonRRஅங்குல்장화, 홍련; இலத்தீன்Janghwa, Hongryeon; lit. "Rose Flower, Red Lotus") என்பது கிம் ஜீ-வூண் எழுதி, இயக்கி 2003 ஆண்டு வெளியான தென் கொரிய உளவியல் திகில் திரைப்படமாகும். இதன் கதையானது ஜாங்க்வா ஹாங்க்ரியான்ஜியான் என்னும் அந்நாட்டு வாய்வழிக் கதையின் அடிப்படையில் உருவானது. இந்தக் கதை இதற்கு முன் பலமுறை படமாக்கப்பட்டிருக்கிறது.

இந்த திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து மிகவும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, மேலும் 2004 ஆம் ஆண்டின் ஃபாட்டாஸ்போரோ திரைப்பட விழாவில் சிறந்த திரைப் படமாக தேர்வானது பெற்றது.[4] இது மிக அதிக வசூலித்த கொரிய திகில் திரைப்படம் மற்றும் அமெரிக்க திரையரங்குகளில் முதன்முதலில் திரையிடப்பட கொரியப் படம் என்ற இரு சாதனைகளை நிகழ்த்தியது.[5] தி யூனிவிடைட் என்ற பெயரில் அமெரிக்காவில் மறு தயாரிப்பில் 2009 ஆம் ஆண்டில் வெளியானது.

கதை[தொகு]

படத்தின் துவக்கத்தில் சு-மியிடம் மருத்துவர், ‘நீயாரென நினைக்கிறாய்’ என்று கேட்கிறார். குடும்ப ஒளிப் படத்தைக் காட்டி, ‘இது யாரெனத் தெரிகிறதா’ என்கிறார். ‘அந்த நாளில் என்ன நடந்தது’ என விசாரிக்கிறார். அவள் மெதுவாகத் தலையைத் தூக்கிப் பார்க்க. கதை விரிகிறது. தன் தங்கை சு-ய்யான், தந்தை ஆகியோருடன் வீட்டுக்கு வருகிறாள் சு-மி. வீட்டில் சிற்றன்னை இருக்கிறாள். அந்த வீட்டில் பல அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கின்றன. தன் சிற்றன்னையால் தன் தங்கை சு-ய்யானுக்குப் பாதிப்பு வந்துவிடும் என்பதால் அவளை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுகிறாள் சு-மி. ஒரு கட்டத்தில் சு-மியின் செயல்பாடுகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல் சு-மியின் தந்தை அவளிடம், ‘ஏன் இங்கு வந்ததிலிருந்தே இப்படி நடிக்கிறாய்’ என ஆத்திரத்துடன் கேட்கிறார். அதற்கு சிற்றன்னை தங்கையை எப்போதும் அலமாரியில் வைத்துப் பூட்டி சித்திரவதை செய்வதை நீங்கள் உணரவில்லையா’ எனக் கோபத்துடன் கேட்கிறாள். அப்போது அவர் வெளியிடும் தகவல் அந்த வீட்டில் அதுவரை பார்வையாளர்கள் பார்த்த பல நிகழ்வுகள் சு-மியின் கற்பனையில் நிகழ்ந்தவை என்பதை புரியவைக்கும். அந்த வீட்டில் சு-மியும் அவளுடைய தந்தையும் மட்டுமே உள்ளார்கள் என்பதை உணரும்போது பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. கதையின் காட்சிகள் தெளிவாகும். படம் பின்னோக்கித் திரும்பும். சு-மியின் தந்தை மற்றொரு பெண்ணை விரும்புகிறார். அவளை மணமுடிக்கத் திட்டமிடுகிறார். இந்தச் சிக்கலின் காரணமாக சு-மியின் தாய் ஒரு அலமாரியில் தூக்கிட்டு இறந்துகிடக்கிறார். இதைப் பார்த்து அலறும் சு-ய்யான் மீது அலமாரி கவிழ்ந்துவிடுகிறது. அவள் கதறல் யாருக்கும் கேட்கவில்லை. எனவே, சு-மியாலும் அவளைக் காப்பாற்ற முடியாமல் போகிறது. இந்தக் குற்றவுணர்வால் பாதிக்கப்பட்ட அவளை மல்டிபிள் பெர்ஸ்னாலிடி டிஸார்டர் என்ற மன நிலைக் கோளாறு தாக்குகிறது. அதன் விளைவுகளாலேயே அவள் தங்கை, சிற்றன்னை ஆகியோராகத் தன்னைக் கற்பனை செய்துகொள்கிறாள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "A Tale of Two Sisters (15)". British Board of Film Classification. 25 June 2004. பார்க்கப்பட்ட நாள் 4 September 2016.
  2. [1] Hancinema. Retrieved 2012-06-04
  3. "A Tale Of Two Sisters (2003)". பாக்சு ஆபிசு மோசோ. பார்க்கப்பட்ட நாள் August 27, 2009.
  4. "Fantas Through Awards". Fantasporto. Archived from the original on 27 ஆகஸ்ட் 2009. பார்க்கப்பட்ட நாள் 27 August 2009. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  5. [தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு] http://media.www.kentnewsnet.com/media/storage/paper867/news/2009/02/03/News/the-Uninvited.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எ_டேல்_ஆஃப்_டூ_சிஸ்டர்ஸ்&oldid=3574958" இலிருந்து மீள்விக்கப்பட்டது