லினக்சு மின்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Linux Mint
Linux Mint 18 Sarah Cinnamon
Linux Mint 18 Sarah Cinnamon edition

Linux Mint 18 Sarah MATE
Linux Mint 18 Sarah MATE edition
நிறுவனம்/
விருத்தியாளர்
Clement Lefebvre, Jamie Boo Birse, Kendall Weaver, and community[1]
இயங்குதளக் குடும்பம் Unix-like
முதல் வெளியீடு 27 ஆகத்து 2006; 17 ஆண்டுகள் முன்னர் (2006-08-27)
கிடைக்கும் மொழிகள் Multilingual[2]
இயல்பிருப்பு பயனர் இடைமுகம் 1.0: KDE 3
2.0-11: குநோம் 2 (KDE / Xfce / Fluxbox / LXDE for some versions)
12: குநோம் 3 with MGSE
13-: Cinnamon / MATE / KDE 4 / Xfce[3]
அனுமதி Mainly GPL and other கட்டற்ற மென்பொருள் licenses, minor additions of தனியுடைமை மென்பொருள்
இணையத்தளம் www.linuxmint.com

லினக்சு மின்டு(LinuxMint) என்பது டெபியன் இயக்கத்தை அடிப்படையாக கொண்ட ஒரு லினக்சு வழங்கல் ஆகும். லினக்சு மிண்ட் 2006 ஆம் ஆண்டு முதன் முதலாக வெளியிடப்பட்டது. இதற்கு "Ada" என பெயரிப்பட்டது இது குபுண்டு இயக்கத்தை சார்ந்து இருந்தது. ஒவ்வொரு ஆறு மாத காலத்திற்கு ஒரு முறை, உபுண்டு இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட லினக்சு மிண்ட் இயங்கு தளம் வெளியிடப்படுகிறது. லினக்சு மிண்ட் நேரடியாக யுஎஸ்பி இல் இருந்து இயங்க வல்லது.

சிறப்பம்சங்கள்[தொகு]

லினக்சு மிண்ட் பொதுவாக இலவச மற்றும் திறந்த மூல மென்பொருளாகும், இதில் அடோப் பிளாஷ் போன்ற சில மூடிய மூல மென்பொருள்களும் அடக்கம். லினக்சு மிண்ட் அதிக அளவிலான முக்கிய மென்பொருள்கள் உடன் வெளியிடப்படுகிறது (லிப்ரே அலுவலக தொகுப்பு, பயர்பாக்ஸ், கிம்ப் ) மேலும் மென்பொருள்கள் தேவையென்றால் பொதிகள் நிறுவல் மூலம் நிறுவிக்கொள்ளலாம் . லினக்சு மிண்ட் இயங்குதளத்தில் பல வகையான பயனர் இடைமுகப்புகள் வழங்கப்படுகிறது , விண்டோசு இயங்குதளத்தில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான மென்பொருள்களை லினக்சிலும் வைன் என்ற மென்பொருள் மூலம் நிறுவி கொள்ளலாம். மேலும் எந்த ஒரு இயங்குதளத்தையும் விர்ச்சுவல்பாக்ஸ்,விஎம்வேர் போன்ற மென்பொருள்கள் மூலம் இயக்கி கொள்ளலாம். லினக்சு மிண்ட் வழங்களில் எண்ணத்தக்க பயனர் இடைமுகங்கள் கிடைக்கின்றன அவையாவன Cinnamon இடைமுகம் ,மேட்,கெடியி, மற்றும் எக்ஸப்சிஇ லினக்சு மிண்ட் வழங்களில் பெரும்பாலன மென்பொருள்கள் பைத்தான் நிரலாக்க மொழி மூலம் உருவாக்கப்படுகிறது, அதற்கான மூல வரிகள் கிட் தளத்தில் கிடைக்கிறது.

பதிப்புகள்[தொகு]

லினக்சு மின்டு உபுண்டு இயக்கத்தை சார்ந்த பதிப்புகள் உள்ளன. லினக்சு மின்ட்டில் டெபியான் இயக்கத்தை சார்ந்த வழங்கலும் உள்ளது.லினக்சு மின்டு இயங்குதளத்தில் வன்பொருள் உற்பத்தியாளர்கள் உபயோகிக்க கூடிய பதிப்பும் உள்ளன.

மேம்பாடுகள்[தொகு]

பயனர், நிறுவனங்கள் என லினக்சு மிண்ட் பயன்படுத்தும் யார் வேண்டுமானலும் நன்கொடை அளிக்கலாம்.

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Linux Mint Teams - Linux Mint".
  2. "Linux Mint - Official Documentation". பார்க்கப்பட்ட நாள் May 19, 2013.
  3. "Download - Linux Mint". Linux Mint. பார்க்கப்பட்ட நாள் 29 October 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லினக்சு_மின்டு&oldid=3355748" இலிருந்து மீள்விக்கப்பட்டது