நிலோபர் கபில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிலோபர் கபில் என்பவர் தமிழக மருத்துவர் மற்றும் அரசியல்வாதியாவார். இவர் வேலூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்தவர். இவர் பி.இ., எம்.எஸ்., எல்.எல்.பி. படித்துள்ளார். இவர் அமைச்சராக ஆவதற்கு முன் கட்சியில் வேலூர் மேற்கு மாவட்ட அதிமுக துணைச் செயலாளர், செயற்குழு உறுப்பினர், மாவட்ட மருத்துவரணிச் செயலாளர் போன்ற பொறுப்புகளை வகித்தார். 2001-2006, 2011-2016 என இரு கால கட்டங்களில் வாணியம்பாடி நகர்மன்றத் தலைவராகப் பணியாற்றினார். 2006 முதல் 2011 வரை நகர்மன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.

2016 ஆண்டு வாணியம்பாடி (சட்டமன்றத் தொகுதி) தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "புதிய அமைச்சர்களின் வாழ்க்கை குறிப்பு". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 13 சூன் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலோபர்_கபில்&oldid=3143504" இலிருந்து மீள்விக்கப்பட்டது